பக்கங்கள்

Thursday, March 30, 2017

கனவு கண்டவர்களின் மாதந்திர கூட்டத்தில்.....

வலது கை திசையிலிருந்து வருவோம் முதலில் நீங்கள் கண்ட கணவை சொல்லுங்கள்..

சரிங்க.....இரவு பதினோரு மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன். ஆனா...பாருங்க தூக்கமே  வரலீங்க.....மூனு மணிக்கு மேல்தான் தூக்கமே வந்திச்சு...செம தூக்கமுங்க....

அது சரி....கண்ட கணவச் சொல்லுங்க.....

அதத்தானே...சொல்ல வர்ரேன்....

ஊட..நீங்க பேசாதிங்க.....நீங்க...சொல்லங்க..கண்டத....

ஜெயலலிதா செத்துப்போனதாகத்தானே...எல்லோரும்  பேசிக் கொண்டு  இருக்கொம்...ஆனா..ஜெயலலிதா  சாகல... நானும் அவுகளும் நான்குவழிச் சாலையில மாருதி -டயொடா காரில அக்கம் பக்கமாக  போய்கிட்டு இருந்தப்போ..அவுகள  நா..பாத்தென்....அப்படியே  நான் சாக்காகிட்டேன்.  பின்
சுதாரித்து அவுக காரை விரட்டிச் சென்று..அருகில் சென்ற போது  கேட்டேன்.
என்னம்மா....நீங்க  செத்துப் போயிட்டதாக  ஊரே...ஒப்பாரி வச்சுகிட்டு இருக்குது..நீங்க பாட்டுக்கு ஹாயாக  காருல போயிகிட்டு இருக்கீங்க  என்று கேட்டபோது... இரகசியமாக எங்கிட்டச் சொன்னாங்க...

அட....முட்டாப்பய...புல்..லு மகனே.... நான்  சாகலடா...செத்ததுமாதிரி ஆக்டிங் செய்து  மெரினா கடற்கரையில இருக்கிற கல்லரையிலரெஸ்ட் இருக்கேன்டா...இந்த இரகசியத்த உனக்கு மட்டுதாண்டா சொல்றேன்..வேறு யாருக்கும் சொல்லிடாதடா ...படுவா...என்னய பார்க்கனும்ன்னா...போன் செய்துட்டுவாடா....இதோ அவுக கொடுத்த செல் நம்பர்... பாருங்களேன்


டேய்....லூசு...இது  உன்னோட.. செல் நம்பருடா.......

என்னாது..என்னோட  செல் நம்பரா....என் நம்பர் அவுகளுக்கு எப்படித் தெரியும்  
ஹா......ஹா....ஹா..........................................................(குறிப்பு டைப் செய்யும் பொழுது தூக்கத்தில்  தலை கோடாங்கி அடிப்பதால்).......தொடரும்

5 comments :

 1. ஹாஹாஹா தொடரட்டும் ஸூப்பர் நண்பரே

  ReplyDelete
 2. Posted by வலிப்போக்கன் at 6:32 PMக்கு ஏன் தலை கோடாங்கி அடிக்குது தோழரே :)

  ReplyDelete
  Replies
  1. வெளியில் வெயிலில் சென்று வந்த அசதியில் .அப்படி ஆகிவிட்டது....தலைவரே....

   Delete
 3. ஜாக்கிரதையாக இருங்கள்! வேறு யார் கனவிலாவது போய், உங்கள் செல் நம்பரைக் கொடுத்துவிடப் போகிறார் அம்மையார்!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com