சனி 04 2017

பயத்தால் வந்த விளைவு

காலையில் நான் எழுவதற்கு முன்னமே  அடுத்த தெருவிலுள்ள தெரிந்தவர் ஒருவர் என்னை பார்க்க வந்தவர் நான் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு  என்னனை எழுப்பினார்.

ஓரிரு சத்தத்திற்குப் பின் கண் விழித்த நான்  கண்களைதுடைத்துவிட்டுக் கொண்டு அவரைப் பார்த்தேன். வந்தவர் உங்களிடம் பேச வேண்டும் எழுந்திருங்கள் என்றார்.

ஒருவித  பயத்துடன்  என்ன பேச வேண்டும் என்று கேட்டபோது... நீங்கள் இன்னாருடைய  மாமனார் இறந்த போன நிகழ்ச்சிக்கு போனீங்களா என்றார்.

ஆமாம் என்ன விசயம் என்று மீண்டும்கேட்டேன்.. உங்களை நம்பி  என் வீட்டுக்காரம்மாவை அனுப்பினால்.. இப்படித்தான் நட்டநடு ராத்திரியில் கைவிட்டு விட்டு வருவீங்களா? என்று கேட்டார்.

சட்டனெ எழுந்து ஒரு நிமிடம் என்று ஒரு விரலை காட்டியபடி விரைவாகச் சென்று பாட்டுப்பாடிவிட்டு அப்படியே  முகத்தைக் கழுவி  கட்டியருந்த லுங்கியால் முகத்தை துடைத்தபடியே  வந்தவருக்கு அருகில் நானும் ஒரு சேரைப் போட்டு அமர்ந்தேன்..

நீங்க சொல்றது ஒன்னும் புரியலைங்க.... என்று கேட்டபோது... என் நண்பருக்கு நண்பரானாவரின் மாமானார் இறந்துவிட்ட துக்க நிகழ்ச்சியில் நானும் எனது நண்பரும் கலந்து கொண்டோம் 

நண்பர் நண்பருக்கு துணையாக அங்கே இருந்துவிட.,  வேலையின் காரணமாக தங்க மறுத்த நான் மட்டும் திரும்பிவிட்டேன்..இறந்தவரை அடக்கம் செய்ய வெகு நேரமாகிவிட்டதால்.. அந்த ஊரு வழியாக செல்லும் கடைசிப் பேருந்தில் ஏறி. அந்நகரப்பேருந்து நிலையத்தில் இறங்கி மதுரை செல்லும் வெளியூர் பஸ்ஸில் ஏறி வந்தேன்.

இந்தநிலையில்  என்னை எழுப்பியவரின்   மனைவியும்  இறந்தவர் அவரது ஊர்க்காரர் என்பதால் துக்க வீட்டுக்கு வந்திருந்தார் அவரும் என்னைப்போல் ஊரு திரும்ப எண்ணியதால் ...அவரின் உறவினரின் மூலம் என்னை சுட்டிக் காட்டிஅவர் உன் வீட்டைக் கடந்துதான்  அவர் வீட்டுக்குச் செல்வார். ஆகையால் அவருடனே போ... என்று அனுப்பி வைத்துவிட்டனர்.. இது தெரியாத நானும் என்போக்கில் பஸ் ஏறி வீடு வந்துவிட்டது என்பது வந்தவர் சொன்னபிறகுதான் தெரிந்தது..

பிறகு தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பியவரின் கோபத்தை தவிர்க்கும் முகமாக நடந்ததை அப்படியே கூறினேன்.

நான் அந்த ஊரின் பஸ்சில் ஏறி..வெளியூர் பஸ்சில் மதுரை வந்து இறங்கிய பிறகுதான் என் பின்னால் ஒரு பெண் வருகிறார் என்று கண்டு கொண்டேன்..யாரென்று தெரியவில்லை.. பஸ்ஸில் இறங்கியவு்டன் எனக்கு பின்னால் நடந்து வந்தவர். ஒரு திருப்பதில் எனக்கு முன்னால்  வந்தவரின் மனைவி செல்ல பின்னால் ஐந்தாறு அடிக்கு பின்னால் நான் சென்று கொண்டு இருந்தபோது திடிரென்று எனக்கொரு பயம் வந்து விட்டது.

முன்னால் சென்ற பெண் விறு விறுவென்று சென்றதால் தனக்கு பயந்துதான் அப்படி செல்கிறார் என்று தோன்றியதுடன்.. பெண்ணை பிறகுபத்தி போறான் என்று தெரிந்து அந்தப் பெண்ணோ பயத்தில் கத்த எதாவது ஏடா கூடமாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ..மெதுவாக நடக்க சற்று தூரத்தில் சென்ற பெண் என்னை திரும்பி பார்த்து நிற்க... நான் இதுதான் சமயம் என்று அவர்க்கு முன் சென்று வேகமாக நடந்து சென்று என் வீட்டை அடைந்தேன்.அந்த இரவில் குளித்துவிட்டு படுக்க மணி மூன்று ஆகியது... 

வந்தவர் நான் சொன்னதைக் கேட்டதும் ரெண்டு பேரும்  நல்ல கதையை கெடுத்திங்க போங்க என்றுவிட்டு..... பாவம் அவ பயத்தில் காய்ச்சல் வந்து படுத்து கிடக்கிறாள் .சரி. அவதான்  சங்கடப்பட்டு உன்னிடம் பேசாமல் இருந்தாள். என்றாள்... நீயாவது. நம்ம  முன்னாடி போவது யாரு..பின்னாடி வருவது.. யாரு எவருன்னு பார்த்து  இருந்து பேசி இருக்கலா்மல..என்ற போது.... 

தவறுதான்... பயத்தால் வந்த விளைவு  அப்படி ஆகிவிட்டது.. மன்னித்து விடுங்கள்...என்றபோது அவர் என் ஏரியா பொம்பளைகளால் எனக்கு நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி...

உங்க ஏரியா பொமபளைங்க மாதிரி எல்லா பொம்பளைகள  நிணச்சு.. பயந்தா
 எப்படி என்றார்...

என் அனுபவமும் நாட்டு நடப்பும் என்னை பயம் கொள்ள வைத்துவிட்டது... எனறு அவரிடம் விளக்கி சொன்னப்போது..  என் மேல் உள்ள கோபத்தை விலக்கிக் கொண்டு  பொம்பளைக்குஇப்படியா பயப்படுவது என்று சொல்லி சிரித்து சமாதனம் அடைந்தார். அவர் விடைபெற்று போகும்போது...அப்புறம்மேல் வீட்டுக்கு வந்து அவளைப்பார்த்து  நடந்ததை சொல்லிப்விட்டுப போங்க  என்றார்.

ஏன்? நீங்க சொல்ல வேண்டியதுதானே...என்று நான் சொன்னபோது... நானும் சொல்றேனுங்க.....நீங்க வந்து சொன்னா.. அவளுக்கு பயத்தால் வந்த காய்ச்சல் போகுமல்லவா என்றார்..

சரி..வந்து சொல்றேனுங்க என்று சொன்னபிறகு என் பயத்தை கண்டு சிரித்துக் கொண்டே சென்றார்.. என் பயத்தை  நான் எப்படி  அவர் மனைவிpடம் சொல்வது.. என்ற சங்கடமான பயத்தில்  நெளிந்து கொண்டு இருக்கிறேன்..

7 கருத்துகள்:

  1. பயம்
    நன்மையும் தரும்
    தீமையும் தரும்
    எவராவது
    எடுத்துக்கொள்ளும்
    தன்மைக்கேற்ப...

    பதிலளிநீக்கு
  2. அது சரி ,எந்த புற்றிலே எந்த பாம்போ என்றுதானே நினைக்க் வேண்டியிருக்கு :)

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...