திங்கள் 10 2017

அரியதொரு போராளி அவர்.................

தொன்னூறு சதவீதம்
நிறைந்த மாற்று
திறனாளி அவர்
இரண்டு கால்களும்
செயல் இழந்த
நிலையில் கைகளால்
தவழ்ந்தே செல்வார்

ஆந்திர மாநிலத்தை
சேர்ந்த அவர்
டெல்லி பல்கலை
கழகத்தில் ஆங்கில
பேராசிரியராக பணி
புரிய டெல்லிக்கு
வந்த பின்புதான்
சக்கர நாற்காலியை
பயன் படுத்தினார்

மற்ற பேராசிரியர்களைப்
போல் தானுன்டு
தன் வேலையுண்டு
என்று இல்லாமல்
இந்தீய கொலைகார
அரசின் பல்வேறு
மனித உரிமை
மீறல்களை எதிர்த்து
போராடி வந்தார்
அவர் அதில்
 ஒன்று அரசின்
“காட்டு வேட்டை”
என்ற பெயரில்
பழங்குடி மக்கள்
மீது நடந்த
அநீதிகளை உச்ச
நீதி மன்றத்தில்
 வழக்கு  தொடுத்து
அரசின் அத்து
மீறல்களை அம்பலமாக்கினார்

அதனால் கோபம்
கொண்ட கார்ப்ரேட்
முதலாளிகளின் அரசு
அவர் மீது
பொய் வழக்கு
போட்டு சிறையில்
தள்ளியது போராடி
பினையில் வெளியே
வந்தார் அவர்

அரசும் அவரை
விடாது துரத்தியது
ஒரு கட்டத்தில்
அவரை கடத்தியது
சிறையில் அடைத்தது

அரசுக்கு எதிரான
வெறுப்பை வன்முறையை
தூண்டினார் தடை
செய்யப் பட்ட
புத்தகங்களை வைத்து
இருந்தார்  என்று
அடுக்கு அடுக்காக
வழக்கு போடப்
பட்டது  அந்த
வழக்கில் நேரடி
சாட்சிகள் யாரும்
இல்லாத போதும்
வீட்டில் அவர்
இல்லாத போது
கைப்பற்றப்பட்ட சீ.டி
பென் ட்ரைவ் லேப்டாப்
ஆகியவைகளையே சாட்சியாக
கொண்டு டெல்லியில்
இருக்கும் அவருக்கு
 மராட்டிய மாநில
கட்ஜிரோலி மாவட்ட
நீதி மனறம் அரியதொரு
போராளியான அவருக்கு
ஆயுள் தண்டனை
விதித்து சிறையில்
அடைத்து உள்ளது

இனி இந்தீயாவில்
குடிக்க தண்ணீர்
கேட்டு போராடினால்
அது சட்ட விரோதம்
வேலை கேட்டு
போராடினால் அதுவும்
சட்ட விரோதம்
தங்களின் வாழ்வா
தாரங்களை பாது
காக்க போராடினால்
 அதுவும் சட்ட
விரோதம் ஆகும்
நாம்  நமக்கென்ன
என சிந்தனை
இருக்கும் வரை
இந்த அநீதிகள்
 தொடரும் தொடர்ந்து
கொண்டே இருக்கும்.


அரியதொரு போராளி-  பேராசிரியர் சாய்பாபா








5 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...