பக்கங்கள்

Wednesday, April 05, 2017

தைரியமுள்ள..வீரன் ???

என்னங்க சார்  தனிமையா வந்து உட்காந்திட்டிங்க.....

தனிமையாக  வந்து உட்காரல சார்.  ஒரு ஆளு உட்கார அளவுக்கு இடம் கிடைத்தது.அதனால் உட்கார்ந்து இருக்கினேன்..ஆமாம் என்ன விசயம். என்னைத்தேடி... ரெண்டு பேரு.மா

வேறுஒன்னுமில்ல சார்,எங்க ரெண்டு பேருக்கும் ஒரு விவாதம்.அத நீங்கதான் முடிச்சு வைக்கனும்..

முடிச்சு போடனுமா....??ஃஇல்ல  முடுச்ச அவுக்கனுமா?ஃ  

சார்..உங்களுக்கு முடிச்சு போட..தெரியாது சார்.  உங்களுக்கு முடுச்ச அவிக்கத்தானே தெரியும்.  அதனால..முடுச்ச மட்டும் அவித்துவிடுங்க  சார்.

சரி.....முடுச்ச சொல்லுங்க.......

சரிங்க..சார்.....சார் எங்க ரெண்டு பேரையும் நல்லா  பாருங்க...இந்த ரெண்டு பேருல  யார் சார் வீரன்...

டேய்...ரெண்டு தண்ணி அடிச்சியிருக்கீங்களடா...???

சத்தியமா....இல்ல சார்....ஏன்  கேட்டீங்க..இப்படி.....

உங்கள..எத வச்சு டேய.டா  பாத்து வீரன்னு சொல்லுறது....

பாத்தா.... தெரியாதா..சார்......

தெரியாதுடா.....???

போங்க  சார்,நீங்க...சிலர் பாத்தவுடனே..இவன் அப்பிராணி...சிலர் இவனா..இவன் மூஞ்சிய பாத்தாலே  தெரியுதுதே...பக்கா திருட்டுப் பயல்னு சொல்றதெல்லாம் எத வச்சு சார் சொல்றாங்க......

எவண்டா..அப்படி சொல்றவன்...... அடேய்...வீரன் என்றால் தைரியமுள்ளவன் என்று அர்த்தம்டா......

அப்ப...நாங்க..தைரியம் இல்லாதவுங்களா  சார்..

உடனே நீங்க உச்சானி கொம்புக்கு போகாதிங்கடா....உங்களோட  நடவடிக்கைய பாத்துதாண்டா... சொல்லமுடியும்..

எதாவது ஒன்னு எங்கள செய்யச் சொல்லுங்க சார், செய்யுறோம்  அதப்பாத்து  சொல்லுங்க  சார்,

அடேய்..அதெல்லாம் இப்போதைக்கு ஆகாதுடா...  உங்க  சேத்தாலி  முத்துச்சாமி இருக்கான்லடா அவன் நே த்துசாவல் விட்டான்டா.ஹெல்மெட் மாட்டாம....வழிப்பறிகாரனிடம் தண்டம் அழாம  இங்கயிருந்து சிம்மக்கல் வழியா போயி கோரிப்“பாளையம் சுத்தி தெற்குவாசல் வழியாக பெரியார் நிலையம் வந்து  ஓசி பைக்கல.பையில ஒரு பைசா கூட இல்லாமா..வழிப்பறிக்கும் போலீசைக் கண்டு பயந்து வண்டிய ஓட்டமா...அவிங்கள  பாத்துகிட்டே  மித வேகத்துல வந்து  சேர்றேன் பாருன்னு சொல்லி....சொன்னது மாதிரியே  வந்து சேர்ந்தான்டா  அதுதாண்டா தைரியம்..
அந்தத் தைரியம்தாண்டா  வீரம்....  நீங்க அது மாதிரி செய்ய முடியுமாடா...??


சார்...இவன் நூறு ரூபாய் பைன் கட்டி இருக்கான்  சார்..

சார்., இவனும்தான் பைன் கட்டி இருக்கான் சார்...

ஆக..ரெண்டு பேரும் வீரன் இல்லடா..... முத்துச்சாமிதான்டா  வீரன்...

என்ன சார்...இப்படி  சொல்லிபுட்டீங்க........

ஆமாண்டா...போயி...முத்துச்சாமிகிட்ட போயி எப்படிடா..... பயமில்லாம பைன் கட்டாம..ஹெல்மெட்டு போடம..அவிங்கள பாத்துகிட்டே வந்தேன்னு கேளுங்கடா..அப்பத் தெரியும்...தைரியம் எது ?  வீரம் எதுன்னு..?ஃ

2 comments :

  1. வீரத்தின் அழகு இப்படித்தான் என்பதை கண்டேன் நண்பரே

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com