திங்கள் 29 2017

ஏன் ? .இப்படி.! எதனால்..........

சில நாட்களுக்கு முன்
சோனாலி என்ற மாணவி
சக மாணவன் ஒருவனால்
உருட்டு கட்டையால் அடித்து
கொல்லப்பட்டாள்...........

பள்ளி மாணவி நவீனா
காதலிக்க மறுத்தாள் என
செந்தில் என்பவனால் எறியும்
பெட்ரோல் தீயால் கட்டி
பிடிக்கப்பட்டு கருகி கரிக்
கட்டையாய் எரிந்து போனாள்

இன்னும் ஒரு வாரத்தில்
திருமணம் தேவாலயத்தில் பிராத்தினை
செய்த பிரான்சினாவை வெட்டி
சாய்க்கிறான் ரீகன் ஜோஸ்

 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில
வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில்
காட்சியாய்  கிடந்தாள் சுவாதி

இவர்களோடு நாடே அறிந்த
வினோதினி வினுப்பிரியா தொடரும்
பெண்கள் படு கொலைகள்

ஏன்? இப்படி! எதனால்........

பாலியல் பலாத்காரம் செய்து
இரும்பு ராடை சொருகுவது
மார்பகங்களை  அறுத்து எரிவது
பிறப்பு உறுப்பில“பூச்சிகளை
விடுவது இரும்பால் அடித்து
கொல்வது ஏன் இப்படி
வெறி பிடித்த மிருகங்களாய்..

ஏன்? இப்படி..!.எதனால்..............

உயர்ந்தவன் தாழ்ந்தவன்  மேலானவன்
கீழானவன் என்ற ஏற்றத்
தாழ்வுகளையே அடிப்படையாகக் கொண்ட
ஆணாதிக்கக்கத்தையும் பெண்ணடிமை
தனத்தையும் போற்றி பாதுகாக்கப்படும்
பாரப்பனிய இந்து மதத்தலா...

90க்கு பிறகான  தனியார்மய
தாராளமய- உலகமய கொள்கைளாலா

ஏன் ? இப்படி..! எதனால்......



12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சீரழிவுக்கான முன்னோட்டத்துக்கு காரணம் யார்? சமூகமா..? தனி மனிதனா...?

      நீக்கு
  2. பிஜேபி இருக்கும்வரை மதவாதம் ஒழியாது நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இப்படிப்பட்ட
    கொடுமைகள் செய்வோர்
    மனநோயாளியாகவும் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. கொல்வதிலுமா தாராள மயம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வறட்சி, வேலையிண்மைக்கு தாராள மயம் காரணமாக இருப்பதைப்போல...கொல்வதிலும் தாராளமயம் காரணமாக இருக்காதா...???

      நீக்கு
  5. //பாரப்பனிய இந்து மதத்தலா...//
    இந்து மதத்தை தவிர பாரப்பனிய இந்து மதம் என்று ஜாதி அடிப்படையில் வேறு ஒரு மதமும் இருக்கிறதா?
    பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு காரணம் ஆணாதிக்கக்க சிந்தனைகள், இந்தியாவில் மிகுந்து உள்ளன.
    மதங்கள் ஆணாதிக்கக்கத்திற்கு ஆதரவானவை.இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு தலையை காட்ட கூட அனுமதி கிடையாது, அந்தளவுக்கு பெண்ணடிமைதனம் அங்கே உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்து மதம் என்றாலேஅது பார்ப்பனிய மதத்தைத்தான் குறிக்கும்...குறிப்பிட மறந்த இஸ்லாமிய பெண்டைிமை தனத்தை குறிபிட்டதற்கு நன்றி!!!

      நீக்கு
  6. பெண்களுக்குத் தனியே ஒரு விருப்பம்இருக்கக் கூடாது என்று எண்ணும் ஆணாதிக்க இழிநிலை நண்பரே
    விரும்பாத ஒருவரை காதலிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்வதது என்ன மனநிலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மனநிலை எதனால் எப்படி யாரால் ஏற்பட்டது என்பதுதான் என் கேள்வி நண்பரே....

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...