பக்கங்கள்

Friday, June 23, 2017

அடுத்த முதலைமைச்சர்...ஆருண்ணே.?????????????

அண்ணே என்றார்
என்னண்ணே என்றேன்

அடுத்த ரப்பர்   ஸ்ஸ்டாம்பு
ரெண்டுல ஒருத்தாருன்னு
தெரிஞ்சு போச்சு
அடுத்து தமிழ்நாட்ட
சீரழிக்க போற
முதலைமைச்சரு யாருண்ணே

அடப் பாவி விடிய
விடிய ராமாயணம்
கேட்டு புட்டு
விடிஞ்ச பொறகு
சீதைக்கு சித்ததப்பன்
யாருன்னு தெரியாம
ஏங்கிட்ட கேட்குறீயே
உங்களால  தாண்டா
நாடு குட்டிச்
செவரா போய்
கிட்டு இருக்கு..

ஏற்கனவே நாடு
குட்டிச் செவராத்தானே
கிடக்கு இதுல
நாங்க எப்படி
குட்டிச் செவரா
ஆக்குறோம்.அடுத்த
முதலமைச்சரு யாருண்ணே

அடே அங்க
ரெண்டு பேரு
பேசுரத கேளு...அவர்களில். ஒருவன்
சொன்னான் ரசினி
முதலைமைச்சர் ஆக
வர முடியாதுன்னு

இன்னொருவன் எத
வச்சு சொல்ற
ஆகா முடியாதுன்னு
ரசினிதான்  தமிழ்
நாட்டின் முதலை
அமைச்சராக வருவார்
சந்தேகம் இல்லாமல்
கையில் அடித்துச்
சொன்னான் பலமாகஇன்னொருவன் சொன்னான்
பொறுமையாக கேளு
என்மேல் கோபப்படத
எம்ஜியார் வழுக்கை
தலையை மறைக்க
வெள்ள தொப்பியை
பயன் படுத்தி
ஆம்பளை பொம்பளன்னு
எல்லாத்தையும் வளச்சு
போட்டார்  ஆனால்
சொட்ட மண்டையை
மறைக்க தெரியாமல்
சொட்ட மண்டையோடு
பப்பாரப்பான்னு என்
மண்டையைப் பாருன்னு
காட்சி அளித்தால்
எப்படி தமிழ்
நாட்டின் முதலை
அமைச்சராக ஆவார்

அவர் வழுக்கை
தலை கட்டுமரத்தைப்
போல் அவ்வளவு
ஸ்டாங்கானது இல்லை
இதோடு எம்ஜியாருக்கு
ஜெ.மாதிரியான
ஒரு செட்டப்பு
இல்லாததும் குறை
அதனால் ரசினி
அரசியலுக்கு வந்தாலும்
முதலமைச்சராக முடியாது
இப்ப இருக்கிற
கேப்பு டவுனு
மாதிரிதான் ஆவாரு
முதலமைச்சராக ஆக
சத்தியமா முடியாது

அப்படின்னா விஜய்
வருவானா...சொல்லு

அவன் சின்னப்
பையன் ஒருவேள
அவன் முதலைமைச்சராக
வந்தால் இளவயது
முதலைமைச்சர் என்று
கின்னஸ் புத்தகத்தில
இடம் புடிக்கலாம்.
சொட்ட மண்ட
இல்லென்னாலும் ஒரு
செட்டப்பு இல்லடா..
இந்த தமிழ்நாட்டு
மக்கள அவ்வளவு
எளிதில் எடை
போட முடியாதுடாஎன்னண்ணே  ரெண்டு
ஆளுகளும் வர
முடியாது என்கிறாங்கே..

எனக்கு அதுானே
உதைக்குது கல்
தோன்றா மண் தோன்றா
காலத்துக்கு முன்னே
தோன்றிய இந்த
தமிழ்நாட்டு மக்கள
அவ்வளவு எளிதில்
எட போட முடியாதுண்ணே..???????????????

5 comments :

 1. ///கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன்னே தோன்றிய இந்த தமிழ்நாட்டு மக்கள அவ்வளவு எளிதில் எடை போட முடியாது///

  இது 100க்கு100 உண்மை நண்பரே

  ReplyDelete
 2. :)
  வழுக்கை தலையை மறைக்க வெள்ள தொப்பி அணிந்த எம்ஜியார்ருடன் ஒப்பிட்டால் ரஜனி ஒரு பாவம் தான்.
  கல்தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன்னே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு தங்களை சினிமாவில் நடித்தவர் ஒருவர் தான் ஆள வேண்டும் என்ற ஆசை.இவர்களுக்கு யார் வீர தமிழிச்சி என்றால், நேத்து வந்த ஆயா அம்மா நீ எல்லாம் முதலமைச்சராகலாமா என்று ஒரு தொழிலை இழிவு செய்து ஜாலியாக கோஷம் போட்ட பெண்.

  ReplyDelete
 3. பெரும் வெட்கக் கேடு ,நடிகர்கள் நாடாள நினைப்பது :)

  ReplyDelete
 4. மக்கள் மனநிலை இறுதி நேரத்தில் மாறிவிடும் ))) !

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com