சனி 24 2017

குண்டூசியால் மிருகம் வெளியே வந்த கிளைமேட்ச் ..



நன்றி! வினவு...






ங்கிகளை லேசாக சுரண்டினாலே போதும். அவர்களுக்கு உள்ளே இருக்கும் மங்கிகளை வெளியே கொண்டு வந்து விடலாம்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் 21.06.2017 அன்று நடைபெற்ற விவாதத்தில், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணனின் சீட்டுக்கு அடியில் குண்டூசி வைத்து விட்டார் தோழர் மதிமாறன். மிருகம் வெளியே வந்து விட்டது.
யோகா – கலையா, மத அரசியலா என்பது தலைப்பு.
நாராயணன்தான் பேசத் தொடங்கினார். ஐநா சபையில் மோடி பேசினாராம். பருவ நிலை மாற்றம் புவி சூடேறுதலை தடுக்கலாம். மூலம், பவுத்திரம் உள்ளிட்ட சகலவிதமான நோய்களிலிருந்தும் விடுபடலாம். எங்களிடம் மருந்து இருக்கிறது. உலகத்துக்கே வழிகாட்ட தயாராக இருக்கிறோம் என்று பொளந்து கட்டினார். இந்தியாவில் மட்டும்தான் எதிர்க்கிறார்கள் என்றார் நாராயணன்.
அடுத்து பெருமாள்மணி. அவருக்குப் பெயர் யோகா ஆதரவாளராம். மதமாகவும் பார்க்கலாம், கலையாகவும் பார்க்கலாம் என்று வழுக்கினார். நெறியாளர் நெல்சன் சேவியர் நெருக்கிய பிறகு, அது கலைதான் என்றார். அப்புறம் நீண்ட நேரம் வழுக்கி விட்டு, கடைசியில் நெருக்கிப் பிடித்த பின், மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
நான் நாராயணன் இல்லை என்று நடித்த பெருமாள் கடைசியாக வேடத்தை களைந்தார்.
அப்புறம் ஒரு அம்மையார், யோகா டீச்சராம். அவுங்க ஆயிரக்கணக்கான – கவனியுங்கள் ஆயிரக் கணக்கான – வருசங்களுக்கு முன்னரே உடல் பிரச்சினைக்கு மனசுதான் காரணம் என்று நம் முன்னோர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். அந்த மேட்டரை அறிவியல் முந்தாநாள்தான் கண்டுபிடித்திருக்கிறது என்றும் அடித்து விட்டார். அப்புறம் மானாட மயிலாட வில் கலா மாஸ்டர் சொல்வது போல, வைப்ரேசன் அது இது என்று கொஞ்சம் அடித்து விட்டார்.
மேற்படி செட்டுதான் யோகா தரப்பு.
யோகா கலையை பாஜக கண்டு பிடிக்கவில்லை. அதைவைத்து ஆதாயம் தேடும் கலையை கண்டுபிடித்திருக்கிறது ஹெட்கேவார் பிறந்த நாளில்தான் இந்த நாளை அறிவிப்பது ஏன்?
சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர் கடலில் விழுந்து சாகட்டும் என்று ஆதித்யநாத் சொல்கிறாரே, திணிப்பு இல்லை என்றா இதற்கு பொருள்? என்றார் த.மு.மு.க-வின் ஹாஜா கனி.
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.
பிறகு தோழர் மதிமாறன் துவக்கினார். ஏகபத்தினி விரதன் இருந்த நாட்டில்தான் எயிட்ஸ் அதிகம். உலகத்துக்கே யோகா சொல்லிக் கொடுத்த நாட்டில்தான் நோயாளி அதிகம் என்று தொடங்கி, உழைக்காத வர்க்கத்தினர், சாதியினர் உருவாக்கிய யோகாவை உழைப்பவர் மீது திணிப்பதை கேள்விக்குள்ளாக்கினார்.
உடம்புக்கு நல்லது என்பதனால் திணிப்பது சரி என்றால், சுன்னத் செய்வது சரியானது என்று மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டிருப்பதால் ஆண்கள் எல்லோரும் சுன்னத் செய்யவேண்டும் என்று உத்தரவு போட்டால் ஒப்புக்கொள்வார்களா என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
நாராயணனுக்குள் எரிமலை குமுறத் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையை இழிவு படுத்தினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆளும்கட்சி நாராயணன் மதிமாறனை மிரட்டினார். யோகாவை விட்டு விட்டு சம்மந்தமில்லாமல் அவதூறு பேசுவதை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று நெல்சனையும் அவர் மிரட்டினார்.
நெல்சன் அசரவில்லை. அவர் என்ன பேசவேண்டும் என்று நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவதூறு என்றால் வழக்கு போடுங்கள் என்றார்.












நாராயணனின் மிரட்டலை அம்பலமாக்கியது மட்டுமல்ல, நீங்கள் பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதி அல்ல, பார்ப்பனர்களின் பிரதிநிதி என்று டவுசரை உருவினார் மதிமாறன்.
என்னை பார்ப்பான் னு சொல்லிட்டாரு இத கேக்க மாட்டீங்களா என்று சாமியாடத் தொடங்கினார் நாராயணன். அப்புறம் நான் பூணூல் போட்ட பிராமணனா இருந்தால் உங்களுக்கென்ன என்று சட்டைக்குள் கையை விட்டு பூணூலை வெளியே எடுக்க முனைந்தார்.
ஜஸ்ட் மிஸ். பூணூலை வெளியே எடுத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். நம் துரதிருஷ்டம். பூணூலை வெளியே உருவவில்லை.

7 கருத்துகள்:

  1. நானும் பார்த்தேன் நண்பரே மதிமாறன் சரியாகவே பேசினார்

    பதிலளிநீக்கு
  2. சரியானது வென்றே தீரும் ,இவர்கள் இவ்வளவு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை :)

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! ஆஹா! ஆண்குறியை நறுக்குவதை மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
    தமிழர்களுக்கு அரபிகள் மதத்தை பரப்ப வந்த மாமேதை மதிமாறன் சொல்கிறார் நம்புங்கோ.

    பதிலளிநீக்கு
  4. குஜராத் முஸ்லிம்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டு தங்கள் உடல் நலனை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்- BBC தமிழ்
    http://www.bbc.com/tamil/india-41352789
    மதிமாறன் சவூதி அரேபியா வஹாபி பிரிவை சேர்ந்த இஸ்லாமியராக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. மதிமாறனின் புனித இஸ்லாமிய அரசான சவூதி அரேபிய அரசு யோகா என்பது விளையாட்டு சார்ந்த பாடதிட்டம் என்று நேற்று அறிவித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாதியான மதிமாறன் என்ன செய்ய போகிறார்?
    http://www.ddinews.gov.in/health/saudi-arabia-approves-yoga-sports-activity

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...