பக்கங்கள்

Tuesday, August 29, 2017

போதி மரத்து 'புத்தனை' விநாயகனாக்கிய ஆரிய வரலாறு

போதி மரத்து 'புத்தனை'  விநாயகனாக்கிய ஆரிய வரலாற்று திருட்டு சூழ்ச்சி :- 

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லுவார் 
"The history of India is nothing , the battle between Buddhism and Brahmanism
.என்று,  அதாவது இந்திய வரலாறு என்பது எதுவுமில்லை.ஆரியத்துக்கும், பௌத்தத்திற்குமான போரே இந்த இந்திய வரலாறு என்று..., இந்திய வேத ,பூத, பார்ப்பன, புலுகு மூட்டைகளான வேதங்கள், ஷ்மிருதிகள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் , என சமஸ்கிருத்த்திலுள்ள புராண குப்பைகள், வரலாற்று திருட்டுகளையெல்லாம் , சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்று ஆராய்ந்தறிந்து  கற்றுணர்ந்து சொன்னவர்தான் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள்.

விநாயக சதுர்த்தி தினத்தன்று,  ஒரே ஆரவாரம், கேளிக்கை, கொண்டாட்டம் என இந்த பைத்தியக்காரத்தனங்கள் வழக்கத்திற்கும் மாறாய் இந்துவெறியர்களின் ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

சரி யார் இந்த விநாயகன்...? ஆரியம் சொன்ன அதே கதைகளை வைத்து அழுக்கில் உருவானவன், யானைத்தலைகளை பொருத்தியவனென்றெல்லாம் அவர்கள் சொன்ன கதைகளை வைத்தே நாம் நையாண்டிகள் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்...! புத்தன் தன் அரச வாழ்வைத் துறந்து அதன் மரத்தடியில் அமர்ந்த காரணத்தினாலே.. அது அரசமரம் என்றாயிற்று...!ஆங்கிலத்தில்(Bothi tree) என்றழைக்கப்படுகிறது.பின்நாளில் பௌத்த பண்பாட்டு வாழ்வியல் முறைகளை அழிக்கத் துவங்கிய இந்துஆரியம், நம் மக்களின் பழக்க, வழக்கங்களாய் ஊரிப்போன செயல்களை மாற்ற இயலாத காரணத்தினால், பௌத்தமுறை பழக்க வழக்கங்களை தன்பால் ஈர்த்துக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்தது, பௌத்த அடையாளங்களை தமதாக்கிக்கொள்ள அதில் சில இடைச்சொறுகள்கள் கட்டுக் கதைகள், அடையாளச் சிதைப்பு ஆகியவற்றை கொண்டுவந்தது, மக்கள் அரசமரத்தடியில் அமர்ந்த குருவான புத்தரிடம் சென்று அறநெறிகருத்துக்கள், தம்ம போதனைகள் கேட்டுவந்த மக்களிடம்,புத்தருக்குப் பின் அவரது நினைவைப் போற்றும் விதமாக மரியாதையின் நிமித்தம் அரசமரமருகே சென்றுவந்த இடத்தில் புத்தரின் உருவம் பொரித்த சிலைகளை அழிக்க ஆரம்பித்திருதிருக்கின்றனர். 

விகார் + நாயகன்= விநாயகன் ; அதாவது எங்களின் விகாரின் நாயகனான புத்தனே இங்கு விநாயகநாக்கப்பட்டார்....! இதன் இன்னொரு பெயர் 'பிள்ளையார்' என்றழைக்கப்படுகிறது      

திருச்சியில் கூட உச்சிபிள்ளையார் கோவில் உள்ளது .அதன் உச்சியில் இருந்ததும் புத்தர்தான். 

திரி+ சரணம்+ பள்ளி = திரிசரணப்பள்ளி , இப்பொழுது திருச்சிராப் பள்ளி என்று வழக்கானது. (திரிசரணங்கள் என்பது புத்தம், தம்மம், சங்கம் என்பதுதான்) இந்த மூன்று அறநெறிகளை போதித்த பள்ளி (பாலி சொல்) தான் அங்கு இருந்திருக்க வேண்டும் .

சீலம் என்றால் பாலி மொழியில் ஒழுக்கம் எனப்படும், பழைய சீலமே பின்னாளில் சேலமாகியுள்ளது.திருப்பதியிலுள்ள சாமிக்கு திருவேங்கடன் என்ற பெயருண்டு திரு+ வேங்கட+ மலையான் திரி புத்தம், தம்ம, சங்கம்  என்ற திரிரத்தினங்கள் திரு என்றாகி , வேங்கடம் என்றால் மலை, அதாவது திரி பீடகத்தில் மலையின் உச்சத்தை அடைந்தவன் ஆக இதுவும் பௌத்த பெயர்தான்.பகவான் என்பதும் பாலிச்சொல்தான், அதன் பொருள் ஆசைகளை அருத்தெரிந்தவன் என்று வள்ளுவர் கூறிய ஆதி பகவன் புத்தர்தரைத்தான்  அதன் பொருள் ஆதி-என்றால்= முதல் ; பகவன்என்றால்= பற்று அற்றவன்.என்பதாகும்.

 இன்று திருமணங்களில் கூட அரசங்கால் நடுவது வழக்கமாக உள்ளது.இதனை இந்துக்கள் பின்பற்றுவதால் அதனை மூடநம்பிக்கையாக நாமும் எதிர்கிறோம், ஆனால்  அது நமது வழக்கமாக முன்பு இருந்துள்ளது , நமக்கெல்லாம் அறகருத்துக்களை போதித்து நல்வழிப்படுத்திய புத்தரின் தலைமையின்பால்  எங்களின் திருமணம் நிகழ்கிறது என்பதைக் குறிக்கும் மானசீக அன்பின், மரியாதையின், நன்றியுணர்வின் வெளிப்பாடுகளைக் குறிக்கும் செயல்கள்தான் என்பதை  நாம் அனைவரும் உணர்தல் வேண்டும். வரலாறு மீண்டெழும்.தம்மச்சக்கரம் சுழலும்...!                  

  தோழமையுடன் :- Cpms Cpms சவிதா.

6 comments :

 1. மேலும் தகவல்கள் வரட்டும் ஆவலுடன்....

  ReplyDelete
 2. நமது நாட்டில் வேரூன்றி வளர்ந்து இருந்த புத்த மதம் ,எவ்வாறு ஹிந்து வெறியர்களால் அழிக்கப் பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது :)

  ReplyDelete
 3. அட? என்னங்க இப்படி வயிற்றில் புளியை இல்ல்ல்ல புலியை கரைக்கின்றீர்கள்?

  ReplyDelete
 4. அறியாச் செய்திகள் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 5. கேட்கிறவன் கேனயன் என்றால் கேப்பையில் நெய் ஒழுகும் என்பார்கள். கௌதம புத்தர் இந்துவாகப் பிறந்து இந்துவாகவே இறந்தார் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர் தாமஸ் ரைஸ் டேவிட் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார். கௌதம புத்தர் ஒரு இந்து மன்னருக்குப் பிறந்த இந்து இளவரசர் என்பதையும் எல்லா வரலாறுகளும் குறிப்பிடுகின்றன. கதையளப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வெளிநாட்டுக்காரன் பொய்யைச் சொன்னால் உண்மையாகுமோ...???

   Delete

.........