புதன் 31 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-8



செல்லில்  நண்பர் ஒருவர் கேட்டார்.. “என்ன வலி...இம்சைகள் தொடரவில்லையா என்று.... அதெப்படி சார். இம்சைகள் தொடராமல் இருக்கும்..  இம்சைகளுக்கு ஆதரவாக நடப்பு சம்பவங்களும் இருப்பதால் இம்சைகள் தெடர்ந்து கொண்டுதான் இருக்கிறது சார்.....  என்றார் வலி..

அதெப்படி என்றார் நண்பர் கேட்டார்.... 

 நிணைவுக்கு வந்த சில விபரங்களையும் சொன்னார் 

கடைசி நாள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்த நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடங்கியது. அதில் காவல் நிலைய காவலர்கள் எல்லாம் ஒரே பிசியாகி விட்டார்கள். அது முடிவுக்கு வந்த சிலநாளில் பஸ் கட்டண உயர்வும் அதைத் தொடர்ந்து பஸ் கட்டண எதிர்ப்பு போராட்டமும் வந்தது...இந்த பரபரப்பான சூழ்நிலையில் என் தொழிலும் சற்று தேங்கிவிட்டது. அதை முடித்து விட்டு சற்று ஓய்வு எடுக்கலாம் என்று பார்த்தால்.. இருபது வருடங்களுக்கு முன்...  எதுவுமே தெரியாத என்  வீட்டுப் பிரச்சனையில் எனக்கு வழிகாட்டியாக இருந்த தோழர் ஒருவர் இறந்து விட்ட துக்கம் வேறு என்னை அலைகழித்துவிட்டது .

ஒரு வழியாக தேங்கிய வேலைகளை முடித்துவிட்டு பணப்பிரச்சனையை ஓரளவுக்கு சமாளித்துவிட்டு.. இப்பொழுதான் சாதரண நிலைக்கு வந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன் சார்... என்றபோது....

சரி..எப்பத்தான் பதிவு போடப் போற  என்ற போது இன்னும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன்... படியுங்கள் என்றார்.

எதைப்பத்தி என்றபோது.... ..

இப்ப என்ன  பேசிக்கிட்டமோ...அதையே  தொடரும் இம்சைகள்-8ன்னு போட்டு அதுக்குப்பின் ஒவ்வொரு இம்சைகளைப் பற்றி முன்னது பின்னது எல்லாத்தையும் உள்ளது உள்ளவாறு  எழுதி விடுகிறேன்... எழுத எழுதத்தானே ஒவ்வொரு இம்சைகள் நிணைவுக்கு வரும்..


ஆகா....என்னையும் உன் இம்சை வரிசைகளில் சேர்த்துவிட்டாய்.....

சே...சே..... இல்ல சார்.....நீங்க அப்படி யெல்லாம் நிணைக்காதிங்க...சார்.. இந்த இம்சைகளை பதிவிட்ட பின்தானே... நீங்கள் நல்லதொரு ஆலோசனை சொல்லி இருக்கிங்க.... உங்களைப்போய்.... அந்த  லிஸ்டில் சேர்ப்பனா..சார்..

சும்மா சொன்னேன் வலி.... சரி உன் எண்ணப்படியே எழுது... இடைவெளி விட்டதால டைப் அடிக்கிற எழுத்தெல்லாம் மறந்து போச்சு சார் என்று அதற்கு ஒரு காரணம் சொல்ல மாட்டியே..வலி.....

சொல்ல மாட்டேன் சார்...அப்படியே மறந்து போனாலும் திரும்ப முயற்சி செய்வேன் சார். .....

சரி..வலி.... எதிர்பார்க்கிறேன்...................

நல்லது  சார்........

3 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...