சனி 02 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-31







மேலோட்டமாக என்னை தெரிந்தவர்கள்
இப்படி சொல்வார்கள் உனக்கென்னப்பா
தனிக் கட்டை  புள்ளையா
குட்டியா தொல்லை இல்லா
  மனிதன் நீ..... என்று.


எனக்கு மனைவி பிள்ளை
குட்டி இல்லைதான் ஆனால்
அவர்கள் இல்லாததால் நான்
துன்பம் அனுபவிக்காமல் இருந்தது
இல்லை அய்யா..எப்படி
என்றா கேட்கிறீர்கள் சொல்கிறேன்
அய்யா  கேளுங்கள்  அதை...

தமக்கையோடு தமக்கையின் குடும்பத்தை
தாங்கியவன் சுமை போதாதென்று
தமக்கையின் பேரப்பிள்ளைகளின் சுமை
வேறு.. சூன் மாதம்
பிறந்து விட்டால் கல்வி
ஆண்டு தொல்லைகள்.தமக்கையின்
இருபெண் வழியில்  இரண்டு
பேரன்கள்  ஒரு பேத்தி மூவரும்
இந்தாண்டு பாசாகி விட்டார்கள்.


பள்ளியில் புத்தகங்கள் கொடுப்பார்கள்
போக்குவரத்துக்கு பஸ் பாஸ்
கொடுத்து விடுவார்கள் சரி..
அவர்கள் கொடுக்கும சீருடை
சரியான அளவில் இருப்பதில்லையே
அது பேரன்களுக்கு பிடிப்பதில்லை
அதனால்..சீருடை செலவும்
புத்தகப் பை அதனுடன்
மற்ற செலவுகளுடன்  இதர
பிள்ளையை பெற்றவர்களுத்தான் தெரியுமே
கல்வி ஆண்டுச் செலவுகள்..
என்ன. என்ன என்னவென்று...

விரிவாய் சொல்ல ஆசைதான்
என்ன செய்வது உங்களுக்கு
அலுப்பு தட்டுமே என்பதால்
குடும்பம் இல்லாத நானும்
குடும்பத்திற்கான இம்சையில் ஒவ்வாரு
நாளும் ஒவ்வொரு விதமான .....
மீண்டும் தொடரும் இம்சையில்...............


5 கருத்துகள்:

  1. இப்படி சொல்லிக் கொண்டு அடுத்தவர் மனதை காயப்படுத்தும் ஜடங்கள் நிறைய நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. அது என்ன மாட்டு வண்டியில் சிறுமிகள்.
    மனிதனுக்கு இம்சை கொடுக்க வேண்டும் என்பதிற்காகவே இந்தியாவில் பல முறைகளை ஏற்படுத்தி அவற்றை கட்டி காத்து நடைமுறைபடுத்தி வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இம்சை உள்ளது. இருந்தாலும் அதனை கடமை என்று அதனை எடுத்துக்கொள்வோமே.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...