ஞாயிறு 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-32


Image result for போக்கிடம்




 ஒரு வழியாக நோக்காடு
இம்சையிலிருந்து விடுபட்ட
மறு நிமிடமே வேலை
தேக்கம் வந்து
மனதில் புகுந்து கொண்டது.

இரண்டு நாட்களாகவது
சும்மா இருக்கலாம்
என்று நிணைத்த
எனக்கு வேலைகள்
தேக்கம் மனதில்
புகுந்து விட்டு
சும்மா இருக்க
விடாமல் துரத்தியது.

ஏற்கனவே..மருமகன்களிடம்
 பொருப்பை ஒப்படைத்து
விட்டு  இந்த
இம்சையிலிருந்த விடுபடலாம்
என்று நிணத்து
விடுபட்டு இருந்த
நேரத்தில் விடாத
 இம்சைகள் பல
மொத்தமாக வந்து
தாக்கியது. அலோ,
இன்ன வேலை
கொடுத்து இவ்வளவு
நாளாகியது.இன்னும்
முடித்து கொடுக்கவே
இல்ல சார்.
போன் அடித்தால்
யாரும் எடுக்க
மாட்டுகிறார்கள் என்று
பலரும் சொன்னபோது
நான் எடுத்த
முடிவு அந்த
ஒரு மாதத்திற்குள்
சின்னா பின்னமாகிவிட்டது.
அந்த தொழிற்கூடத்திற்கு
நானே நிறுவனன்,
நானே தொழிலாளி
நானே கடனாளி
அனைத்திற்கும் நானே
பொறுப்பு என்று
பொட்டில் அடித்துவிட்டார்கள்.

அப்போதும் தேங்கிய
வேலைகளை விரைவாய்
முடித்து தற்க்காத்தேன்.

இப்போதும் இரண்டு
வார நோய்
அவதிக்குப் பின்
ஓய்வெடுக்க நிணைத்த
போது...பலர்
பலவிதமாக சொல்லிய
கடமையைய் செய்
பலனை எதிர்பாராதே..
என்று ஓதியதில்.. ...

எனக்கும் வேறு
போக்கிடம் இல்லாததை
சுட்டிக் காட்டியதாலும்
உடலும் மனமும்
நல்ல நிலையில்
இருக்கும்வரை  அக புற
இம்சைகளை  சகித்து..
ஓதுவார்கள் ஓதியதை
மனதில் கொண்டு
பலனை எதிர்பாமல்.
 உழைக்க இருக்கிறேன்...

3 கருத்துகள்:

  1. //கடமையைய் செய் பலனை எதிர்பாராதே//

    கடமையை செய் என்பதே நீங்க பெறும் ஊதியத்திற்கு உங்களின் கடமையை சரியா செய்யுங்க என்பதே. இந்தியா நாட்டில் உள்ள பேலீஸ்சு, அரசு ஊழியர்கள் போன்று கடமைக்கு தரப்படும் ஊதியத்தை விட,மக்களிடம் லஞ்சம் வேறு வாங்கி கொடுமை செய்யாதீர்கள் கொள்ளையடிக்காதீர்கள் என்பதாகும்.
    கடமையைய் செய் பலனை எதிர்பாராதே என்று உங்களுக்கு ஓதியவர்களும் நல் நோக்கம் கொண்டோர் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. எதற்கும் கலங்கிட வேண்டாம்
    தளர்ந்திர வேண்டாம் நண்பரே
    உழைப்பு நம்மை ஒரு போதும் கைவிடாது

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...