சனி 28 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-54

ஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு)




சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச்சின்னம் தமிழக அரசால்18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு என திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.


குயிலி....யாரிந்த குயிலி...?

1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக் கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும்,  வேலுநாச்சியார்,மருது பாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று சிவகங்கையை மீட்க நடைபெற்ற போரில் சிவகங்கை அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்த முதல் தற்கொலை போராளியாக..வீரத்தாயாக தமிழகத்தில் அறியப்பட்டவர் குயிலி............!!!

இந்த  குயிலியை சாதி வெறி குல தெய்வத்தின் வழி வந்த சாதி வெறியர்கள் வீரத்தாய் குயில (மறவர் / தேவர்)   எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்றும்..  சுய சாதி யர்களான அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் என்றும்.. இல்லையில்லை நாங்கள் நேரடி கள ஆய்வு செய்ததில் குயிலி (ஆதிதிராவிடர்/  பறையர்) சாதியைச் சேர்ந்தவர் என்றும்..இல்லவே இல்லை..குயிலி எங்கள் தேவேந்திர குல வேளாளா (பள்ளர்/மள்ளர்) பெண் என்று ஒவ்வொரு சாதி வெறியர்களும் சுயசாதியர்களும் குயிலி எங்கள் குல சாதிப் பெண் என்று  உரிமை கொண்டாடி  அதற்க்காக பல நூல்களும் படைத்தும் இணையதளங்களிலும் குறிப்பிட்டு   குயிலி  எந்த சாதிக்கு சொந்தம் என்றுஅந்தந்த சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் உரிமைப் போர் நடத்திக் கொண்டு வரும் வேளையிலே

 மேலே கண்ட தோழர் மயில்வாகனன் அவர்களின் ” ஒப்பனைகளின் கூத்து” ஒரு ஆய்வு நூல் ஒன்று  சாதி வெறியர்களுக்கும், சுயசாதியர்களுக்கும் மொத்தமாய்  ஆதாரபூர்வமாக.. சரியான ஆய்வை . தெளிவுபடுத்தியுள்ளார்.

குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்கிறது அந்த நூல்... குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்றால் சாதி வெறியர்கள் நிறைந்த, சுய சாதியர்கள் நிறைந்த நாட்டிலே.. என்ன அர்த்தம்....குயிலி ஒரு கற்பனை பாத்திரம் என்பதுதான்  பல்வேறு வகைப்பட்ட, எதையும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவி உள்ளார்.

அப்படி..என்ன ஆதாரம், ஆய்வு என்று நக்கல் பேசுபவர்கள். மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து” என்ற புத்தகத்தை வாங்கி வாசித்து தெரிந்து கொள்ளலாம்.....

 வரலாறு அறியாமல்
நாட்டுப்பற்று உருவாகது
நாட்டுப்பற்று இல்லாமல்
குடிமக்கள் வாழும்
நாடு எக்காலமும்
உருப்படாது..உருப்படாது....!!!!!!!!!!!!!



“ மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து”  ஓர் ஆய்வு நூலை என்னையும் படிக்கத் தூண்டிய ஆய்வாளர் தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்களுக்கு நன்றியும்!! வாழ்த்துக்களும்!!!



11 கருத்துகள்:

  1. ஆய்வுகளை மறுஆய்வு செய்யவோ... உறுதி செய்யவோ.. தனிமனிதனுக்கு வக்கில்லாத காரணத்தால்.. நம் வாழ்வு வெறும் பெருங்கதையாகவும் கற்பனையாகவும் நிகழ்கிறது. நேற்றைய நானும் நாளைய நானும் எனக்குப் புரியாத புதிராகவே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வாழ்வு எனும் பெருங்கதைகளை கற்பனையாக எழுதி வரலாறாக படைப்பதும் புதிராகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  2. அழகான அறிமுகம் நண்பரே,
    வரலாறு அறியாமல்
    நாட்டுப்பற்று உருவாகது
    நாட்டுப்பற்று இல்லாமல்
    குடிமக்கள் வாழும்
    நாடு எக்காலமும்
    உருப்படாது..உருப்படாது....!!!!!!!!!!!!!

    உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் உருப்படாமல் போய்கொண்டு இருக்கிறது.நண்பரே......

      நீக்கு
  3. குயிலி ஒரு வீரப் பெண் நண்பரே
    சிவகங்கை மாளிகைக்கு அருகில், அன்று இருந்த ஆயுதக் கிடங்கினுள், தன்னுடலில், ராஜராஜேசுவரி அம்மன் கோவிலில் இருந்த, நெய்யினை முழுவதும் தன்னுடலில் ஊற்றிக் கொண்டு, தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கினுள் புகுந்து, ஆயுதக் கிடங்கினையே தகர்த்து தடைமட்டமாக்கிய வீரப் பெண். இவரின் இச்செயலாலேயே, வேலு நாச்சியாரால், சிவகங்கையினை மீட்க முடிந்தது.
    என்னைப் பொறுத்தவரை இவர் என்ன சாதியாக வேண்டுமானாலும், இருந்துவிட்டுப் போகட்டும், அதற்காக குயிலியை ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஆய்வு செய்து அறிவிப்பதை ஏற்க இயலவில்லை நண்பரே
    நமது வீர வரலாற்றை நாமே மூடி மறைப்பது நல்லதல்லவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வீர வரலாறு உருவாக்கியதே கற்பனை என்று ஆதாரப்பூர்வமாக நிருபிக்கிறது..ஒப்பனைகளின் கூத்து என்ற ஆய்வு நூல் வாசித்து பார்த்தால் உண்மை தரவு தெரியும்...நண்பரே...

      நீக்கு
  4. ஒரு வரலாறு சிதைக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதைக்கபடவில்லை நண்பரே..! அந்த வரலாறே கற்பனை என்று அறியத்தருகிறது.. வாசித்து பாருங்கள்..

      நீக்கு
  5. இரண்டு கம்யூனிஸ்ட் (உங்களுக்காக?) கட்சிகளின் ஆதரவாளர்கள்; காங்கிரஸ் கட்சி அறிவுஜீவிகள்; திராவிட இயக்கத்தினர்; தமிழ்த்தேசியவாதிகள்; தலித்தியவாதிகள்; ஜெயலலிதா; தமிழக அரசு அனைவரும் சொல்வதை நாம் மறுக்கிறோமென்றால் ஏன்?

    பதிலளிநீக்கு
  6. சதிப்பவர்களுக்கு சாதி எதற்கு சாதிக்குள் அடைக்க வேண்டாம் சரித்திரம் படைத்தவர்கள் அனைவரும் வாழ வழி வகுத்தவர்கள்

    பதிலளிநீக்கு
  7. இந்த உங்க பதிவின் மூலம் நான் அறிந்து கொள்வது, ஏற்கெனவே உலகம் தெரிந்த மாதிரி இந்தியா ஜாதி வெறியர்கள் நிறைந்த ஒரு நாடு, ஜாதி வெறிக்காக என்ன கற்பனைகளையும் பொய்களையும் சொல்வார்கள் என்பது. இலங்கை நண்பர் ஒருவர் சொன்னார், இலங்கையில் வன்னி என்று ஒரு நகரம் உள்ளதாம் அந்த தமிழக ஜாதி பெயரை கொண்டு இலங்கை நகரம் இருப்பபதனால் இலங்கை தமிழர்கள் எல்லாம் வன்னி ஜாதியினர் என்று தமிழக ராமதாஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறதாம்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...