ஞாயிறு 12 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-64


மண்டைக்கும் மர மண்டைக்கும் உள்ள வித்தியாசம்,


Image result for மண்டைக்கும் மர மண்டைக்கும் உள்ள வித்தியாசம்


பேச்சின் ஊடாக இந்தக்
கேள்வியை கேட்டார் இவர்

ஐயா  இறந்த கருணாநிதி
கட்சிக்காரர்களுக்கும் இறந்து
போன எம்ஜியார் கட்சிக்கார்களுக்கும்
உள்ள வித்தியாசம் என்னங்கய்யா...

அவர் யோசித்தார்  பின்
தொண்டையை சரி செய்து
விட்டு விபரத்தை சொன்னார்

இறந்த கருணாநிதி கட்சிகாரர்க்கு
சிறிதளவாது பகுத்தறிவு ஞானம்
இருந்தது.. இறந்து போன
எம்ஜியார் கட்சிகாரன் காரிகளுக்கு
அந்த சிறிதளவு பகுத்தறிவு
ஞானமும் சுத்தமாக இல்லை

அதற்கு உதாரணமாக இந்த
சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

1987ம் ஆண்டு டிசம்ர் 24ம்
தேதி எம்ஜியார் இறந்த போது
நடந்த கலவரத்தில் அண்ணாசலை-
 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சந்திப்பில் நிறுவப்பட்டு இருந்த
கருணாநிதி சிலை உடைக்கப்பட்டது

2018ம் ஆண்டு ஆகஸ்டு
7ம்தேதி கருணாநிதி இறந்த
போது எம்ஜியார் சிலை
உடைக்கப்படவில்லை அய்யா என்றார்.

 இதுதான் மண்டைக்கும் மர
மண்டைக்கும் உள்ள வித்தியாசம்

7 கருத்துகள்:

  1. //பார் கேள் பேசு// என்கிறது மார்க்சியம்,,,,./ சிறப்பு,வினாக்களில்தானே விடை பிறக்கிறது/

    பதிலளிநீக்கு
  2. மண்டைக்கும் மர
    மண்டைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய வியப்பான ஆராய்ச்சி இதோ: மரமண்டை என்பது கலைஞர் சிலையை உடைத்த அ.தி.மு.க வினர். மண்டை என்பது எம்.ஜி. ஆர். சிலையை உடைக்காத தி.மு.க. வினர்.

    பதிலளிநீக்கு
  3. பார்த்து.. கேட்டு.. பேசி... அறிவோம்..

    பதிலளிநீக்கு
  4. சரி. மரமண்டை கூட்டம் அதிமுக.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...