பக்கங்கள்

Sunday, September 09, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-82.

உச்சத்தை தொட்ட.......பெட்ரோல்.............

Image result for உச்சத்தை தொட்ட பெட்ரோல்
என் இரண்டு
சக்கர வாகனத்தின்
 சேமிப்பு தொட்டியில்
சல சல வென்று ஓடியபடி
சொன்னது  பெட்ரோல்
 நான் உச்சத்தை
 தொட்டுவிட்டேன் இன்னும்
சில நாளில்
உச்சத்தையும் கடந்து
விடுவேன் அப்போது
என்ன செய்வாய்
பஸ் பயண
சீட்டு விலை
உயரத்தால் இரண்டு
சக்கரத்தில்  என்னை
 நிரப்பி சந்து
பொந்து  என
சர்ரு புர்ருன்னு
பறந்தாயே  நான்
உச்சத்தை கடந்த
பின் என்ன
செய்வாய் என்றது

உன் உச்சத்தை
குறைக்க மனு
கொடுப்பேன் என்றதும்

தூ என்று
துப்பியது பெட்ரோல்
மனு கொடுப்பதால்
என்  சிறு
மயிரையும் புடுங்க
முடியாது என்பது
உனக்கு தெரியாதாடா
என்றதும் நான்
படக் என்று
நீதிமன்ற கதவை
தட்டுவேன் என்ற
போது  ஆமா
கிழிச்ச  நீ
குடியிறுக்கும் வீட்டு
பிரச்சனைக்கே ஒரு
கதவும்  திறக்கல
இதுல என்
உச்சத்தை தடுக்க
உடனே நீதிமன்ற
கதவு பொளந்திரும்
போடா போடா
வெங்கம் பயலே
உருமா கட்டுறது
எப்போ என்று
சிரித்தது பெட்ரோல்

உன் உச்சத்தை
குறைக்க பாரத்
பந்த் நடக்கிறது
அப்போது தெரியும்
ஏறிய உச்சத்தை
இறக்குவது பற்றி..

அடடே போராட்டமா..
சாத்வீக போராட்டமா
தூத்துகுடியில சாத்வீகப்
போராட்டம் நடத்தினதுக்கு
பதிமூன்று பேர்
செத்தது தெரியுமில....மீண்டும் பெட்ரோல்
என் உச்சத்தை
யாரலையும்  தடுக்க
முடியாது கேன..
என்றது....உன்
இருமாப்புக்கு வரும்
தேர்தலில் பெரிய
ஆப்பு வைக்கப்படும்
என்பதை கேட்டு

ஹாஹாஹா என்று
சிரித்த பெட்ரோல்
மெதுவாக  முனுமுனுத்தது

போடா லூசுப்
பயலே  தேர்தலே
திருடர் பாதைதான்டா
என்றபடி அடுத்த
வாசகத்தை சொல்லாமல்
சட்டென்று  வாயை
மூடிக் கொண்டது.

எனக்கு பின்
வரும் இரண்டு
சக்கர வாகன
ஓட்டிகளிடம் அடுத்து
தான் உச்சத்தை
தொட்டதை பெருமையாக
பீத்துவதற்கு................

2 comments :

  1. உண்மை நிலை நம்மால் எதையும் புடுங்க முடியாது நண்பரே

    ReplyDelete

.........