பக்கங்கள்

Thursday, September 20, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-89.

மறந்தால்தானே... நினைப்பதற்கு...!!!!!!!!!!!!
எனது தாயார் 2013ல் எடுத்தது.
அந்த அம்மா... என் அம்மாவை பற்றிக் கேட்டதும்                        எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....எல்லோரும் கேட்கும் “ நல்லா இருக்கியா ” என்ற கேள்விக்கு  ரெடிமேடாக  வந்து உதிக்கும்   “ .... நல்லா இருக்கேன்” என்ற பதிலையே அந்த அம்மாவுக்கும்.....  நான் சொன்ன பதிலை ஒப்புக்கு அந்த அம்மா ஒப்புக் கொண்டாலும் என்னைக் கண்டு பரிதாபப்பட்டு... முனு முனுத்தார்கள்... விபதெ்தொன்றில் கேட்பதில் பிரச்சினை ... என்பது அந்த அம்மாவுக்கு எங்கே ? தெரியப்  போகிறது...அந்த அம்மா என்னைக் கண்டு பரிதாபப்பட்டது இதுக்கு தானிருக்கும் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்... மக..மக என்று மகன  இப்படி தனிக்கட்டையாக ஆக்கிப்பிட்டதைதான் சொல்லி  பரிதாப்பட்டு இருப்பார்.அந்த அம்மா கேட்டதும் எனக்கு சற்று தூக்கி வாரிப் போட்டது மாதிரித்தான் இருந்தது. என் தாயார் இறந்து  இன்றோடு மூன்று வருடங்களாகிறது. 20.09.2018 இன்று மூன்றாவது நிணைவு தினம்....  இந்த மூன்று வருடங்களில் என் அம்மா என் கனவிலோ..அல்லது நினைவிலோ..வந்ததே இல்லை... உண்மையைச் சொன்னப்போனால் நானும் நிணைக்கவே இல்லை.... ஏன்?இப்படி என்று எனக்கும் சிந்திக்கவும் இல்லை...“  மறந்தால் தானே நிணைப்பதற்கு” என்பது மாதிரியும் இல்லை...சிறுவனாக இருந்த காலத்தில்  என் அம்மா...என்னை அடித்துவிட்டபோதும்
நான் கோபித்துக் கொண்டு ஓடிவிடுவேன் என்ற பயத்தில்.. என்னை அடித்துவிட்டு எனக்கு பதிலாக என் அம்மா அழுவார்... வாங்கிய அடியை பொருட் படுத்தாமல் தாயார் அழுவதை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும் இனிமேல் அம்மாவை அழ வைக்க கூடாதென்று தீர்மானம் எடுப்பேன். அந்தத் தீர்மானம் மறுநாள் எந்த திக்குக்கு சென்றது என்றே எனக்கு தெரியாமல் போகும்...என் சகோதிரி  வயதுக்கு வந்து ஏழாவது படிக்கும் காலத்திலே... தன் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து முடித்த காலத்திலிருந்து வரதட்சனை கொடுத்து தாளவுமில்லை.. முற்றும் பெறவுமில்லை.. இன்று வரை தொடர்ந்து கொண்டதான் இருக்கிறது. அதற்கு  ஆணித்தரமான சாட்சி  “கல்யாணம் ஆகாமல் சுத்த பிரம்ச்சாரியாக இருந்து கொண்டு  சகோதரிக்கும் அது பெற்ற நான்கு  பிள்ளைகளுக்கும், எந்தவித ஆசாபாசத்தையும் விரும்பாமல்  இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கும் நானே தான்.”..என் தாயார் முதல் சகோதிரி தொடங்கி.. அவரின் கணவர் மற்றும் அவர்கள் பெற்ற பிள்ளைகள் வரை எதுவும் என் பேச்சை.. நான் சொல்லும் வழிகளை பின் பற்றுவதில்லை...  அததுகள் என்னை ஒரு பகடை காயாக.. பொன் முட்டையிடும் வாத்தாகத்தான் என்னை பயன்படுத்தி வந்ததுகள்.... வேண்டாத பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவாய்க்கு மேல் செலவு செய்து... அதனால் உண்டாகும் கடன் சுமையெல்லாம் அதுகள் சுமப்பதில்லை.. கவலை கொள்வதில்லை. அந்தச் சுமையும் நான்தான் சுமக்க வேண்டும்... என் தாயார் இருந்தவரை..தப்போ..சரியோ....மூச்சே விட்டதில்லை....நான்..என் தாயாரின் மூன்றாவது நிணைவு தினத்திலிருந்துதான்  தைரியமாக மூச்சுவிட முயன்று இருக்கிறேன்... அதற்கு முதல் படியாக...20.09.2018.-ல்  எனக்கு நானே ..காலையிலிருந்து மாலை வரை உண்ணாவிரதமும் மௌன விரதமும் மேற்க்கொள்கிறேன். இதில் வெற்றி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி..தோல்வி அடைந்தால் ...................

 முதலிருந்து  மீண்டும் தொடரும்  இம்சைகளும் அதை நோக்கிய எனது போராட்டமும்தான்....


3 comments :

 1. வாழ்வு என்பதே ஒரு போராட்டம்தான் நண்பரே

  ReplyDelete
 2. வருத்தமாக இருக்கிறது நண்பரே தங்களது போராட்டம்.

  இன்றைய காலச்சூழலில் மௌனவிரதம் எல்லா வகையிலும் நல்லதே...

  ReplyDelete
 3. //என் தாயார் இருந்தவரை..தப்போ..சரியோ....மூச்சே விட்டதில்லை....நான்..//
  வருத்தமாக மிகவும் இருந்தது.ஏற்றுகொள்ள முடியல்ல.

  ReplyDelete

.........