ஞாயிறு 04 2018

நினைவலைகள்-13.

 நான் நாத்திகனான கதை............

நான் நாத்திகன் ஏன் க்கான பட முடிவு




பல வேலைகளுக்கு சென்றேன் நான். எந்த வேலைகளிலும் நிலைத்து நிற்க முடியவில்லை அதற்கு காரணம் பல அதில் சில இவை..

வேலை முடிந்தவுடன் கூலி கிடைக்காதது வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் இன்னால்கள். கடைசியாக எனக்கிருக்கும் அறிவுக்கு கேற்றபடி எந்த வேலை கிடைக்கும் யோசித்தபோது...

அச்சாபிசில் பசை தடவுவதற்கும், டீ வாங்கி வரும் உதவியாளராகவும், டெலிவரி பாய் என்ற வேலைக்குத்தான் நான் லாயக்கு என்ற எனது எண்ணப்படி கடைசியாக அச்சாபிசு வேலைக்கு சேர்ந்தேன்.

சில வருடங்களாக உதவியாளர், டெலிவரி பாய் பதவியில் இருந்தபோதிலும். கிடைக்கும் நேரங்களில் கம்பாசிடராக, பைண்டராக...  பிரிண்டிங் மிஷின் ஓட்டுனராக கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்துக் கொண்டேன்.

அந்த அச்சாபிசில் வேலையின் போதுதான் பெரியாரின் சிந்தனையை அறியாமலே வாழ்நிலை நிகழ்வின் மூலம் நான் நாத்திகனானேன். அதில் குறிப்பிடும்படியாக சில...

பொதுவாக அச்சாபிசில் பேப்பர்கள் இருக்கும். அதோடு அந்த அச்சாபிசில் எலித் தொல்லைகள் இருக்கும். கம்போஸ் செய்ய  எழுத்துக்கள் போட்டு வைப்பது மரத்தால் செய்யப்பட்ட பல குழிகள் அடங்கி இருக்கும்

நான் வேலை செய்த மூன்று பிரஸ்களில்...  ஒன்றைத் தவிர மற்ற பிரஸ்களில் தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய அடையாளங்கள்  சுவர்களில் மாட்டப் பட்டு இருந்தாலும் , சிறிய பூ மாலை மட்டுமே மாட்டப்பட்டு இருக்கும் அதுவும்
செவ்வாய் வெள்ளி நாட்களில் மட்டும்தான்..  சூடம் கொளுத்துவதோ.. வாசனை பத்தி சொறுகி வைப்பதோ சுத்தமாக கிடையாது..

ஏனென்றால்..இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ-க்கு என்ன வேலை என்ற கணக்கு போலவே... பேப்பர். மரப்பலகை.. அட்டை இருக்கும் இடங்களில்  சூடம். வாசனை பத்தி. எலுமிச்சை. தேங்காய், வாழைப்பழம் எதுவும் வைத்து வழிபடுவது இல்லை.. கடவுள் அடையாள படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கொள்வதுதான்.



நான் வேலை செய்த இடங்களில்  கடவுள் தொழுகை , வழிபாடு மாதிரியான செய்கைகள் பழக்கங்கள்  இல்லாததால்.. என் வீட்டிலும் கடவுள் அடையாளப் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததும் பெரியாரின் சிந்தனைக்கு முன்பே நான் கடவுள் மறுப்பு காரனாக இருக்க வழி பிறந்தது.   அதற்கு பின்னர்தான்  கடவுள் மறுப்பு கொள்கை உடைய என் பாஸ் -ன்(முதலாளி) நடவடிக்கைகளை கண்டும் வரட்டு தனமான இல்லாமல் அறிவியல் பூர்வமான கடவுள் மறுப்பு காரனாக மாறினேன்.


அதன் மூலம்தான். அன்று முதல் இன்று வரை..(இனிமேலும்)... மத மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்த விழாக்களை கொண்டாடுவதில்லை.. அவைகளை ஊக்கப்படுத்துவில்லை...  அத்தகைய விழாக்களோடு சமரசமும் செய்து கொளவதில்லை.














12 கருத்துகள்:

  1. சமூகத்தின் அமைதிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வில்லா வாழ்வுக்கும் சம உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் எதையும் ஒதுக்கி வைப்பது அனைவருக்கும் நல்லது. நீங்கள் செய்ததும் மிக நல்லதே. அறிவியல் பூர்வம் என்பது மட்டும் எனக்கு கொஞ்சம் அதிகப்படியாகப் படுது. ஏனெனில் என்னைப் பொறுத்தவரை அறிவியல் பூர்வம் என்பதும் எல்லாருக்கும் முடியாத காரியம், ஆனால் சமமின்மையையும், அடிமைத் தனத்தையும், ஆதிக்க எண்ணத்தையும் அடையாளம் கண்டு கொள்ளலாம் பேரறிவு இல்லாவிடினும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிற அறிவை பயன்படுத்த வழி இல்லாத போது பேரறவு ஒன்று கிடைக்குமா..? நண்பரே...

      நீக்கு
  2. இன்று ஒரு இசைக் காணொளியை வெளியிட்டேன்...நேரம் கிடைக்கையில் பார்த்து / கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும் https://youtu.be/l0ObNExe6K4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே! பார்த்துவிட்டு எனது கருத்தை சொல்கிறேன்

      நீக்கு
  3. காரணங்கள் பல இருப்பினும் காரியம் ஒன்றுதானே,,,,/க்டவுள் நம்பிக்கையே சமூகத்தின் கட்டுக்கோப்புக்கும் சமூக ஒழுங்கிறகும் கற்பிதம் செய்யப்பட்டதுதான் எனச்சொல்வார்கள்,அறிவியல் விசயத்திற்கு
    கட்டுப்படாதவர்கள் கடவுள் நம்பிக்கைக்கு
    கட்டுப்பட்டு விடுகிறார்கள் என்பது நிதர்சனம்,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டுதல் காரியம் நிறைவேறா விட்டால்..கடவுள் நம்பிக்கையே தூக்கிப் போடப் படுகிறது நண்பரே!!

      நீக்கு
  4. கருத்துமிக்க பதிவு

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...