அதாவது வந்துங்க
இட ஒதுக்கீடு
என்பது பொருளா
தாரத்தில் பின்
தங்கியவர்கள் என்பதற்காக
கொடுக்கபட்டது இல்லீங்க
அது சமூகத்தில்
பின் தங்கியவர்களுக்காக
கொடுக்கப்பட்டதுங்க அதுவும்
அது பிச்சையாக
வாங்கிய சலுகையும்
இல்லீங்க பல
நூற்றாண்டு காலமாக
அடிபட்டு மிதிபட்டு
போராடி பெற்ற
உரிமைங்க அது
அரிய பெரிய்ய்ய
சாதிகளில் உள்ள
ஏழைகளும் பிச்சைகார்களும்
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட
சாதிகளில் உள்ள
ஏழைகளும் பிச்சைகாரர்களும்
ஒன்று இல்லீங்க.
அப்படி இடஒதுக்கீடு
பெற்ற ஏழைகளும்
அம்பானி அதானி
அளவுக்கு முன்னேறியே
சாதியாக வளரலீங்க.
என் அறிவுக்கு
தெரிந்தது ஒலகத்தில்
ரெண்டே சாதிதானுங்க
ஒன்று முதலாளி
சாதி ரெண்டு
பாட்டாளி சாதிங்க
முதலாளி சாதிய
ஒழிச்சா சாதி
மதம் இல்லாத
சமத்துவ உலகம்
பிறந்திடும்முங்க
ஸூப்பர் உண்மை ஆனால் நடக்காதே...
பதிலளிநீக்குநடக்காததுதான் நடக்கும் என்பார்
நீக்கு//என் அறிவுக்கு
பதிலளிநீக்குதெரிந்தது ஒலகத்தில்
ரெண்டே சாதிதானுங்க
ஒன்று முதலாளி
சாதி ரெண்டு
பாட்டாளி சாதிங்க//
மனிதர்களிடையே வலிப்போக்கர் சொன்ன பொருளாதார அடிப்படையில் ஜாதி வேறுபாடுகள் மட்டுமே உண்மையானது.
மனிதர்களிடையே ஜாதி பேதம் கிடையாது. மனிதர்களிடையே
சமூகத்தில் முன்னேறியவர்கள். சமூகத்தில் பின்தங்கியவர்கள் உண்டு.சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்வது சமூக நீதி.பின்தங்கியவர்கள் இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் அதன்காரணமாக அவர்களுக்கு உதவகூடாது என்பது தமிழகத்தில் என்று ஜாதியை பார்த்து ஊட்டபட்டது ஜாதி வெறி.