திங்கள் 28 2019

நினைவலைகள்-53.


சாகட்டும் விடுங்க சார்..







தமிழ்நாட்டில் மத்தியரசின் 10% சமூக அநீதிக்கு ஏன் பரவலான எதிர்ப்பு எழவில்லை?

காரணம் 1:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள பிளவுகள். 

காரணம் 2:
இடஒதுக்கீடு தவறு, தகுதியும் திறமையும் முக்கியம் என்ற தொடர்ச்சியான தவறான பரப்புரைகள்

காரணம் 3:
50% இடஒதுக்கீடு வைத்திருக்கும் BC, MBC கூட்டம் 18% இடஒதுக்கீடு வைத்திருப்பவனை பார்த்து இவனால் தான் தன் வாய்ப்பு பறிபோகிறது என்று நம்பிக்கொண்டிருப்பது

காரணம் 4:
இந்த 10% இடஒதுக்கீடு தன்னுடைய 69% இடஒதுக்கீட்டை மறைமுகமாக விழுங்கும் என்ற அறிவில்லாமல் இருப்பது.

காரணம் 5:
தன்னுடைய உண்மையான சுயவரலாறு மறந்து இல்லாத ஆண்ட பெருமை அளப்பரைகளை பேசியதால் பறிபோன இடஒதுக்கீடு உரிமை பற்றி பேச வேண்டிய இளம் தலைமுறை தன் சாதியை பற்றி பெருமை பீத்திக்கொண்டிருப்பதோடு, உயர்சாதியா இருந்தா என்ன? அவங்களும் பாவம் ஏழைகள் தானே ப்ரூ...என்று லூசுத்தனமா பேசிக்கொண்டு அலைவது

காரணம் 6:
இத்தனை ஆண்டு இடஒதுக்கீட்டின் மூலம் படித்து பொறியாளராகவும், மருத்துவராகவும், பல்வேறு சிறப்பு பட்டங்களும் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், வெள்ளைக் காலர் வேலையிலிருப்போர் பெரும்பாலனோர்...தான் ஒருவன் ஒரு குறிப்பிட்ட BC, MBC, SC சாதியில் பிறந்து முன்னேறிவிட்தால் தன்னுடைய மொத்த  சமுதாயமே தன்னைப்போல சிறப்பாக முன்னேறிவிட்டதாக எண்ணுவது, நம்புவது.

காரணம் 7:
வர்ணாசிரம படிநிலையில் ஒருவன் எத்தனை கீழான இடத்திலிருந்தாலும் அதையே அவர்களில் பலர் பெருமையாக நினைத்து வீரவன்னியன்டா!, கவுண்டனா கொக்கா?, கோனார்டா! நாடார்டா! முதலியார்டா! தேவன்டா! என்று அறிவில்லாமல் சீறிக்கொண்டிருப்பது. இதில் தாழ்த்தப்பட்டவர்களான ஆதிதிராவிடர்களும் விதிவிலக்கல்ல.  

நீங்கள் கவனித்து நோக்கினால், இப்படி இல்லாத பெருமைகளை பேசுவோர் எல்லோரும் 
♦ வீதிக்கு வீதி பிள்ளையார் சிலை வைப்பது,  
♦ தீபாவளிக்கு ஏன் திமுக வாழ்த்துவதில்லை என்று அலறுவது,
♦ ராகவேந்திரா, சாய்பாபா பெருமைகளை பேசுவது, 
♦ விபூதியை சுத்தமாக மறந்துவிட்டு செந்தூரத்தை பூசிக்கொண்டு அலைவது 
♦ ஐய்யப்பனுக்கு பெண்களே ஆகாதென்பது, 
♦ அமெரிக்காகாரனே சமஸ்கிருதத்தை படிச்சு மிரண்டுட்டான் என்பது,
♦ சிதம்பரம் நடராஜர் சிலை நாசாவிலிருக்கு...நம்ம நடராஜர் ஆடுவது தான் Cosmic Dance என்று கதைவிடுவது,
♦ தான் கோழி, ஆடு சாப்பிடுவது தவறில்லை, அடுத்தவன் மாடு சாப்பிடுவது தவறு என்பது,
♦ தன் உண்மையான சமூக வரலாறு & உணவுப்பழக்கம் தெரியாமல் புரட்டாசி, அமாவாசை, செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி அசைவம் சாப்பிடாமலிருப்பதில் பெருமைக்கொள்வது
♦ ஒரு பக்கம் சிவனுக்கு பிள்ளைக்கறி சமைத்தான் தமிழன் என்று பெருமை பேசுவது, மறுபக்கம் அசைவம் சாப்பிட்டால் கோயிலுக்கு வரமாட்டேன் என்று ஜபுர் காட்டுவது
♦ திராவிடத்தால் வீழ்ந்தோம், தேர்தலை புறக்கணிப்போம், நோட்டாவை ஆதரிப்போம், நல்லக்கண்ணு நல்லவர், கக்கன் எளிமையானவர், Sagayam4CM, AbdulKalam4PM என்று உளறுவது
♦ உண்மை தமிழன் என்பதில் பெருமைக்கொள்வது, 
♦ ஓவர்டோஸ் இந்தியனாக சவுண்ட் விடுவது, 
என்ற மேற்சொன்ன பட்டியலில் அடங்கிவிடுபவர்கள் தான்.

இவர்களை நொந்து எந்த பயனுமில்லை. இவர்களை அப்படியே விட்டு வேடிக்கை பார்ப்பதே நல்லது. அடுத்து ஒரு மூன்று, நான்கு தலைமுறைகள் வீணாகப்போனால் தான் என்ன?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வீணாய் போனவர்கள் ஏதோ இந்த 50 ஆண்டுகளில் தலை நிமர்ந்தார்கள். 

நிமிர்ந்து என்ன பெரிசா கிழிச்சிட்டாங்க?
தன்னிலை மறந்தது தான் மிச்சம்!

சாகட்டும் விடுங்க...சார்.

1 கருத்து:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....