புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் காணொளி …
அவர் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள் …
♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது?
♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.
♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…
♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள்  நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.
அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…