வெள்ளி 01 2019

நினைவலைகள்-75.









பேண்ட பரம்பரை க்கான பட முடிவு







நீங்க அதிகமா
படிச்சவுக அதனால
டக்குன்னு கேட்டுடிங்க..

நான் இன்னும“
படிக்கவே ஆரம்பிக்கல..
என்ன சொல்றது
எப்படி சொல்றதுன்னு
யோசிச்சா முழிக்கிறேன்னு
கிண்டல் அடிக்கிறீங்க..

என் அறிவுக்கு
தெரிஞ்சத  சொல்றேன்
அதக்கேட்டு நீங்க
எம்மேல கோபிக்ககூடாது
சரியா..சரின்னு
சொல்லுங்க தலிவரே..

கலெடக்டர்ர்ரோட பிள்ள
கலெகடர்ராக வந்திருக்காரா.
இல்ல டிஜிபியோட
பிள்ளதான் டிஜிபியா
வந்திருக்காரா...வரத்தான்
முடியுமா..... அப்படி
யாராச்சும் வந்திருக்காங்கலா
சொல்லுங்க...சார்

என்ப்பா..நான்
பிறந்த சில
ஆண்டுகளில் இறந்து
போனார் வாரிசுரிமை
படி என் அப்பா
பாத்த வேலைக்கு
எனக்கு வயதில்லை
என்பதால் என்
தாயார் கூலியடிமை
ஆனார். நானும்
நல்லா படிக்கத்தான்
ஆசைப்பட்டேன் என்
தாயாரும் ஆசைப்பட்டார்
இருவர் ஆசையும்
நடக்காமல் போய்விட்டது.

உங்கள் பார்வையில்
நான் ஆசைப்பட்டதெல்லாம்
நடந்து விடுமா...

என்ன செய்ய
உங்களைப்போல் ஆண்ட
பேண்ட பரம்பரையாக
இருந்திருந்தால் என்னிடம்
இந்தக் கேள்வி
கேட்க அவசியம்
வந்திருக்குமா உங்களுக்கு

படித்தவன் நாட்டை
கெடுத்தான் எழுதியவன்
ஏட்டைக் கெடுத்தான்
நல்லவேளை நான்
ரெண்டையும் கெடுக்கவில்லை..


நான் சொன்னது
போதுமா சார்
உங்களுக்கு கோபமில்லையே...

6 கருத்துகள்:

  1. இதில் மிகவும் பெரிய கொடுமை என்னவென்றால் இந்தியாவில் படித்தவர்களே ஊழல் மோசடிகள் செய்வதும், லஞ்சம் வாங்கி சொத்துகள் சேர்ப்பதுவும், நாட்டை மேலும் சீரழிப்பதும்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...