ஞாயிறு 26 2019

அதிகாலை கனவு-22

கண் மூடும் வேளை......













கண்ணை மூடினதும்
கும்மிருட்டாய் இருந்தது
அதனால் எதையும்
கண் கொண்டு
பார்க்க முடியவில்லை.

அந்த கும்மிருட்டில்
ஒலியையாவது  கேட்கலாம்
என காதை
விழித்து கேட்டால்
 நிசப்தமாக இருக்கிறது
அதனால் காதும்
கேட்காமல் போனது

மூச்சு விடும்
சத்தமாவது
தெரிகிறதா என்று
மூக்கையாவது தொட்டு
பார்த்தால் அய்யோ
மூக்கையே காணவில்லை

குரல் கொடுத்தாவது
பார்ப்போம் என்றால்
பல்லெல்லாம் விழுந்து
குரல் எழும்ப
மறுக்கிறது..ஆ..ஆ
வென்று பதறி
கண்விழித்து எழுந்தால்
எல்லாம் கனவென்று
தெரிகிறது. சேவென்று
சொல்லி மீண்டும்
படுத்து கண்
மூடினால் இருட்டாகத்தான்
 எல்லாம் தெரிகிறது.

அட..நான்
என்ன பூனையா...???.


4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...