திங்கள் 22 2019

அதிகாலை கனவு-44.

மதுரை வைகை பெருவிழாவால் நாசமாகப்போகும் தொன்மையான மதுரை










மதுரை நகர்  ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை அடுத்து கிழக்கு பக்கமாய் போனால் ஆரப்பாளைம் கிராஸ்ரோடு. அதற்கு அருகில் புட்டுத்தோப்பு...புட்டுத்தோப்பில் சிவன் கோயில் உள்ள காலி இடத்தில்  பிராண்டமான கொட்டகை..அதில் எப்படியும் ஐய்யாயிரம் பேர் வரை உட்காராலாம்...புட்டுதோப்பை ஒட்டி வறண்டு கிடக்கும் வைகையில் 40 அடி நீளத்திற்கு பெரும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் துறவியர்கள், பூசாரிகள்,அய்யொ அப்பா பக்தர்கள். வைணவாச்சாரியர்கள், சிவனடியார்கள் பசு பாதுகாப்பு குண்டர்கள்,.  குண்டு வெடிப்பு, கொலை வழக்கில் உள்ளே இருக்கும் அபிநவ பாரத், சனாதன சன்ஸ்தா போன்ற இன்னும் பலர்..ஆடிப் பெருக்கு என்று சொல்லி தண்ணியில்லாத வைகையில் புனித நீராடல் செய்யப் போகிறார்கள்.  இதுக்கு பேரு  வைகை பெருவிழாவாம்....பத்து நாட்கள் நடைபெறுமாம்.....


என்னடா....சொக்கா....இது மதுரைக்கு வந்த சோதனை
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

.ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி கடைசியா மனுசனை கடித்த கதையா போச்சு...

வைகை நதியை காக்க என்று கதைவிட்டு காவி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்கள் மதவாத கொலை அரசியலை நடத்த முற்படுகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள  தலையாரி முதற்  மாவட்ட ஆட்சியர் வரைக்கும், கான்ஸ்டபில் தொடர்ந்து நகர போலீஸ் கமிசினர் வரைக்கும், மாநகராட்சியில் பியுன்லிருந்து ஆணையாளர் வரைக்கும் விழா அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்து அதை அவர்களன் முகநூல் பக்கத்தில் போட்டோ பிடித்து போட்டு தங்கள் வலிமை காட்டியுள்ளனர்.

ஏற்கனவே  வைகையில் தண்ணீர் கொண்டுவர உண்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள் பாடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் வைகைநதி பாதுகாப்பு இயக்கம் என்ற  முகமுடியில் உள்ள காவி..சங்- பரிவார மத வாத அமைப்புகள்  நதியை சாக்காக வைத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நாசமாக்காமல் விடாது..

ஏற்கனவே கங்கையை . தாமிரபரணியை நாசமாக்கியவர்கள்.... மோசமாய் கிடக்கும் வைகையை நாசமாக்காமல் விடமாட்டார்கள். மூவாயிரம்ஆண்டுகளுக்கு மேலாகவே “யாதும் ஊரே- யாவரும் கேளிர்” மதச் சார்பின்மை, மதநல்லிணக்கம், மத ஒற்றுமை போன்றவற்றின் சின்னமாக விளங்கிய மதுரையை வட மாநிலங்களில் நடப்பது போல மதக் கலவரங்களை தூண்ட  இந்த வைகை பெருவிழா ஒரு காரணியாகும்,

பூகம்பமே வந்தாலும் இடிந்து விழாத கோட்டை கட்டி ஆண்ட மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியல..போனஇடம் தெரியல....இனி என்ன மாவட்ட நிர்வாகமும் சரி, சாதரண பக்த கோடிகளும்  வைகை பெருவிழா என்ற முகமுடி விழாவுக்கு தெரிந்தே போனாலும், தெரியாமல் 
போனாலும்.. வடநாட்டில் நடக்கும் கொலை. கொள்ளை..மதக் கலவரங்கள் நடப்பதற்கு  முன் தேதியிட்டு அனுமதி கொடுத்ததாகும்...

அய்யோ..அம்மா... பழம் பெருமை வாய்ந்த மதுரை நாசந்தானா..? என்று வாய் ஒழம்பி விழித்தபோது...  மதுரை வைகைப் பெருவிழா-வின் அழைப்பிதழ்  என் கண்ணில்பட்டது..


2 கருத்துகள்:

  1. அழைப்பிதழ் கண்ணில் பட்ட பிறகு விழாவை சிறப்பிக்க சென்று வந்தீர்களா ?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...