ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --55...

 
 நமது உடலுக்கு உள்ளே வரும் எந்த ஒரு வியாதிக்கும் ஆங்கில மருத்துவம் தீர்வு ஆகாது! உண்மையை சொன்னவருக்கு

நன்றி - அருள்தாஸ் 


ஆகஸ்ட் 4ம் தேதி சாதாரண காய்ச்சல் என்று காணொளியில் பேசிய எஸ்.பி.பி விரைவிலேயே வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு தான் போனார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ம் தேதி இறந்து விட்டார். சாதாரண காய்ச்சல் என்று தெம்பாக பேசியவர் இன்று உயிரோடு இல்லை. சாதாரண காய்ச்சலை குணப்படுத்த முடியாத மருத்துவமனையகள் அவை...? 


மூலிகை மருந்தையோ அல்லது வீட்டிலே Self Quarantine எடுத்திருந்தால் எஸ்.பி.பி உயிரோடு இருந்திருப்பார்...


தினமும் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 7 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு இருக்கிறது என்பது பிரபல இயக்குநர் சொன்ன தகவல். அவர் மருத்துவமனையில் இருந்தவரை சிகிச்சைக்காக ரூ 5 கோடி வரை மருத்துவமனை பில் போட்டு வசூலித்து இருக்கிறது சாதரண காய்ச்சலை குணப்படுத்த முடியாத  மருத்துவமனை நிர்வாகம்.


சாதாரண காய்ச்சல் பின் நுரையீரல், லிவர், மூச்சு விடுதல் சிரமம், மூளையில் ரத்த கசிவு, இறுதியில் மரணம்... இப்படி அறிவிக்கிறது. மருத்துவமணை


அலோபதி மருத்துவம் மீது மக்களுக்கு சந்தேகமும், நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தி வருகிறார்கள் கொள்ளைக்கார மருத்துவர்கள்....


ஏ1 குற்றவாளி ஜெயலலிதா, எச்.வசந்தகுமார், எஸ்.பி.பி இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கொடுத்த சிகிச்சையை விட மருத்துவமனை வசூலித்த பில் தான் அதிகம் . ஏ1 குற்றவாளி ஒரு இட்லி சாப்பிட்டதற்கு இத்தனை கோடியில் பில்  .இன்னும் விசாரணை முடியவில்லை


மறைந்த எஸ்.பி.பிக்கு அரசு மரியாதையை தமிழக அரசு செய்வது ஒருபுறம் இருந்தாலும் 16 மொழிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு மாபெரும் கலைஞருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர், மருந்துகள், மெடிக்கல் ரிப்போர்ட், மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை விட கோடிக்கணக்கில் பில்லை போட்டும் கொள்ளை அடிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்


இப்பல்லாம் உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மருத்துமனை பக்கம் போகவே கூடாது. அப்படி மாறிவிட்டது மருத்துவத் தொழில். நைட்டிங்கேல் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ஆகியோரின் மருத்துவ சேவையை கேள்விப்பட்டும், படித்தும் இருக்கலாம்... இப்போ தெய்வநாயகம் (லேட்), டாக்டர் அமலோற்பவநாதன் , டாக்டர் புகழேந்தி, டாக்டர் ரமேஷ் , டாக்டர் பினாய்க்சன், டாக்டர் எழிலன் ஆகியோரின் மருத்துவ சேவையை போல் இருக்கவேண்டும்.

மருத்துவம் செய்து பலன் அளிக்காமல் இறந்தால்.. அது மருத்துவமனை கொலைதானே...!  அந்தக் கொலைக்கு  லட்சத்தில் கோடியில் பில் எதற்கு..???