சனி 16 2013

மாயமாய் மறைந்த புது (திருட்டு) மாப்பிள்ளை.....!!!!!!!

அந்தி மயங்கும்
மாலை நேரம்
மூதாட்டி தன்
வீட்டின் வெளி
வாயிலிலே.அமர்ந்து
இருந்தார்................

இருபதைந்து வயது
மதிக்க தக்க
இளைஞன் ஒருவன்
மூதாட்டியிடம் வந்து
தங்களின் மகனின்
நண்பென் என்றும்
திருமணம் முடிக்க
போகும் புது
மாப்பிள்ளை என்று
கதை சொன்னான்

கதை கேட்க
மூதாட்டியின்
ஆர்வத்தைக்
கண்டு புது
மாப்பிள்ளை
காரன் மேலும்
கதை விட்டான்.

புது மாப்பிள்ளை
யான எனக்கு
புதுசா தங்க
சங்கிலி வாங்க
வேண்டும்

மாடலுக்கு தாங்கள்
அணிந்திருக்கும்
சங்கிலியை
கழட்டி தாருங்கள்......

மாடல் பார்த்து
விட்டுதருகிறேன்
என்றான்.

கதை கேட்டு.
கதை கேட்டு
நாடே சொக்கி
கிடக்கும் போது
மூதாட்டி  விதி
விலக்கா என்ன?.................

கழட்டி கொடுத்த
அய்ந்து பவுன்
சங்கலியை வாங்கிய
புது மாப்பிள்ளை
காரன் மாயமாய்
மறைந்தான்............

கதைப் பித்தம்
தெளிந்த மூதாட்டி
காவல் நிலையம்
சென்ற பிறகுதான்
தெரிந்தது. அவன்
புது மாப்பிள்ளை
அல்ல திருட்டு
மாப்பிள்ளை என்று.........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...