பக்கங்கள்

Thursday, October 16, 2014

ரேசன் அரிசியை பொடைக்க சொளகு இல்லாமல் தவிக்கும் ராஜா மகள்..

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது -
ஏங்கண்ணா..............

செயற்கை கோளு ராக்கெட்ட
விண்ணில் செலுத்திகிட்டே
இருக்கீங்களே..............அதனால

கழிப்பறை இல்லாதவங்களுக்கு
கழிப்பறை கிடச்சிடும்மா........?

வேல இல்லாதவுகளுக்கெல்லாம்
வேல கிடச்சிடும்மா.........??

மாதம்  மும்மாரி  மழை
பொழிஞ்சு வெள்ளாமை
விளஞ்சு கஞ்சிக்கு
செத்தவர்க்ளுக்கெல்லாம்
நிம்மதியாக ஒரு வேள
கஞ்சியாவது கிடச்சிடும்மா  ??

ஏவின ராக்கெட்டு போல
ஏறின விலவாசி தொபக்கிடின்னு
எறங்கிடும்மா.......???

பறக்கும் செயற்கை கோளால
ஊழல் பேர்வழிகள களி
தின்ன வச்சு கம்பி
எண்ண வைக்க முடியும்மா..????

வெயிலுக்கும் மழைக்கும்
ஒதுங்க வழியில்லாம
தவிக்கிறவங்களுக்கு  ஒதுங்க
இடம் கிடச்சிரும்மா......?????

திண்டு கொழுத்து போயி
பேளுவதற்கு முடியாம
தவிக்கிறவங்க....  சிரமம்
இல்லாம  பேள முடியும்மா..?????

 ஏண்டா...................டேய்..

ராஜா மக..........
ரேசன்ல்ல வாங்கிய  புழுத்த
அரிசியை பொடைக்க சொளகு
இல்லாம இருக்குறது..உங்களுக்கு
தெரியுமாடா................ஙோங்கனிகளா....!!!!!!!!!!!!!!
8 comments :

 1. தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லே ,செவ்வாயில் தண்ணி தேட ராக்கெட் விடுவாங்க )
  த ம 1

  ReplyDelete
 2. வக்கு இல்லாதவனுக்குத்தான் வாக்க(ஓட்டு) போட்டு தெலைக்குறாங்க..

  ReplyDelete
 3. வலிப் போக்கன் கேள்விகள் நியாயமானவை.

  ReplyDelete
 4. நியாயமான கேள்விகளுக்கு எந்தக் காலத்திலும் நியாயமான பதில்தான் கிடைக்காது.

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete
 6. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com