பக்கங்கள்

Friday, July 24, 2015

வலிப்போக்கனை திணறடித்து திக்குமுக்காட செய்தவர்கள்...!!!!

Logo
தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் மற்றும் ப்ளாக்கர்., வேர்டு

பதிவுலகில்  வலிப்போக்கனை திணற வைப்பதோடு ,திக்கு முக்காட வைத்துக் கொண்டு இருப்பவர்கள் மூவர்.

அவர்கள். ஜோக்காளி-பகவான்ஜி, பூவை பறிக்க கோடாலி எதற்கு ? என்று கேட்கும் கில்லர்ஜி, வாங்க நண்பர்களவோம், என அழைக்கும் வலைஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். இவர்கள்தான் அந்த மூவேந்தர்கள்.

ஒவ்வொரு பதிவர்களின் பதிவுகளுக்குச் சென்று பதிவுகளை படித்து கருத்துரை வழங்கி  அவர்களின் தமிழ்மண ஓட்டையும் பதிவு செய்வார்கள்.
எனது பதிவுக்கும் இந்த மூவேந்தர்கள் வந்தார்கள். படித்தார்கள் , கருத்துரை வழங்கினார்கள் தமிழ்மண ஒட்டையும் போட்டுவிட்டு, ஓட்டே போடாத வலிப்போக்கனையும் தமிழ்மண ஒட்டை போட வைத்தார்கள்.

இவர்களைப்போல் அணைத்து பதிவர்களின் பதிவுகளை படித்து கருத்துரை வழங்கி தமிழ்மண ஒட்டு போடுவது வலிப்போக்கனால் முடியாது என்று   இருந்தாலும இந்த மூவேந்தர்களின் பதிவுகளுக்கு மட்டும் தொடர்ந்து  சென்று வந்த  கையோடு  இவர்களால் மற்ற பதிவர்களின்  சில பதிவுகளையும் படித்து கருத்துரை வழங்கியும் தமிழ்மண ஓட்டு போட்டும்  கொஞ்சம் வளர்ந்தார்.

ஆரம்பத்தில், வலிப்போக்கன் பதிவுகளை  தொடர்ச்சியாக படித்து கருத்துரை வழங்கி வந்தவர். “வேடந்தாங்கல் கருண்” என்பவர். இன்று இருக்கும் அறிவு அன்று இல்லாததால. “ வேடந்தாங்கல் கருண்”னின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது..  அன்று மதிக்கத் தெரியாத மன்னாங்கட்டி வலிப்போக்கனை “வேடந்தாங்கல்-கருண்” மன்னிப்பாராக....

அன்று மதிக்கத் தெரியாமல் இருந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்க்காக...இந்த மூவேந்தர்களின் வழியைப் பின்பற்றி தூணாக இல்லாவிட்டாலும் துறும்பாக இருப்போம் என்று எண்ணி   மற்ற பதிவர்களின் தளத்திற்கு சென்று மொய் மற்றும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் முதலில் ஓட்டை போட்டுவிட்டு  பிறகு பதிவை படித்து கருத்துரை வழங்கி    வரும் வழியை  சிறிது சிறிதாக செய்து வருகிறேன்.

அப்படிச் சென்றதன் பயனாக.... தில்லையகத்து வி. துளசிதரன் அவர்கள் ஒரே நேரத்தில் வலிப்போக்கனின் பதிணோறு பதிவைகளையும் படித்து ,கருத்துரை வழங்கி, அதே  வேளையில் மறுமொழியிட வைத்து ,திணற அடித்ததோடு அல்லாமல் திக்கு முக்காட வைத்துவிட்டார்.


ஆக, வலிப்போக்கனை திணறடித்து திக்கு முக்காட வைக்கும்  மூவேந்தர்கள் வரிசைவயில் தில்லையகத்து துளசிதரன் அவர்களும் இணைந்து விட்டார் என்றே தோன்றுகிறது.  இதிலிருந்து திணற அடித்து திக்கு முக்காட வைப்பவர்கள் மூவர் அல்ல ..நால்வர் என்று ..திணறடித்து திக்கு முக்காட வைப்பதற்க்காக தொடர்ந்து வந்து கருத்துரை வழங்கி வரும் பதிவர்களின்  கருத்துரை  அவைக்கு மனமுவந்து தெரிவித்துக் கொள்கிறேன்.23 comments :

 1. மேலும் ,நாளும் வளர்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. Ha.... Ha.... Ha.... Naalvar A(n)ni.....

  ReplyDelete
  Replies
  1. நால்வர் அணி ஐவர் அணியாக வளரட்டும் தலைவரே...

   Delete
 3. நாலு பேருக்கு நன்றி ,அந்த நாலு பேருக்கு நன்றி :)

  ReplyDelete
 4. நன்றி! சொன்னவர்க்கு நன்றி!! நன்றி!!

  ReplyDelete
 5. பதிவுலக சாமர்த்தியங்கள் கை வந்து விட்டன.
  வாழ்க!வெல்க!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாக்கு பொன்னாகட்டும் அய்யா...

   Delete
 6. ஓட்டுப் போட்டாச்சு!

  ReplyDelete
 7. வாழ்க... வளர்க.

  துளசிதரன் - கீதா நண்பர்கள் ப்ளஸ்ஸில் பகிரும் தளங்களை வைத்து நானும் பல பதிவுகளுக்குச் சென்று வருகிறேன்! நன்றி அவர்களுக்கு! நான் செல்லும் தளங்களுக்கு எப்போதும் தவறாமல் த ம வாக்களித்து விடுவேன்!

  ReplyDelete
 8. தில்லையகத்து துளசிதரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துவோம் அய்யா...

   Delete
 9. நல்ல வேளை நான் உங்களைத் திணறடிக்கவில்லை :)

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி! அய்யா தொடருவோம் அய்யா....

   Delete
 10. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாக்கும் பொன்னாகட்டும் அய்யா....

   Delete
 11. தோழரே! இந்த பதிவை ஞானம் பிறந்த கதையாகச் சொல்லலாமா? தொடரட்டும் உமது வலைப்பணி

  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ... ஞானம் பிறந்த கதையாகச் சொல்லலாம் அய்யா.....

   Delete
 12. என்னப்பா இங்க நடக்குது?!! ஹஹஹ...நன்றி நண்பரே! அது சில சமயங்களில் பதிவுகள் விடுபட்டு விடுகின்றன...அப்போது நாங்கள் பழைய பதிவுகளையும் வாசித்து கருத்து இடுவதுண்டு...நாங்கள் இருவர் என்பதால் அது நடக்கின்றது என்று நினைத்திருந்தால் ஒருவராக, நம்ம டிடி, ரூபன், கிஜி, பஜி எல்லாரும் எங்கள திகைக்க வைத்ததுண்டு....எப்படி இப்படி எல்லா தளங்களும் செல்ல முடிகின்றது என்று...நாங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வருவோம்...அவர்களைப் போல வேகம் கிடையாது...ஹஹஹ..

  போனால் ஓட்டும் போட்டுவிடுவதுண்டு...பெரும்பாலும்...மிக்க நன்றி நண்பரே எங்களைப் பார்த்து திக்குமுக்காட வேண்டாம்...ஏனென்றால் நடுவில் காணாமல் போய்விடுவோம்...வந்தால் இப்படித்தான் நிறைய வந்து வைக்கும் ..அதுக்குத்தான் இப்போ என்ன பண்ணுகின்றோம் என்றால் பதிவுகள் எங்கள் வீடு தேடி (ஐடி) வரும் வகையில் ஃபீட்பர்னரில் உங்கள் தளத்திலும் போட்டுவிட்டதால் இந்தப் பதிவு எங்கள் அகத்தின் ஐடிக்கே வந்துவிட்டது..எளிதாகிவிடுகின்றது...உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன...

  மிக்க நன்றி நண்பரே !!!

  ReplyDelete
  Replies
  1. “நண்பரே எங்களைப் பார்த்து திக்குமுக்காட வேண்டாம்.”.என்று.ஆறுதல் சொல்லி என் பயத்தை பொசுக்கிய தங்களுக்கு.. நன்றி! அய்யா...

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!