பக்கங்கள்

Saturday, August 29, 2015

நண்பரின் நிறைவேறாத ஆசை...!!!


Air Berlin B737-700 Dreamliner D-ABBN.jpg
படம்-https://ta.wikipedia.org/s/1qf0


நண்பரின் நண்பர் ஒருநாள் எனது செல்பேசியில் என்னை அழைத்தார்.

நண்பா... பணி ஓய்வு முடிந்து ஊருக்கு வருகிறேன். இப்பவாவதுஎன் ஆசையை நிறைவேற்றுவாய் என்று நிணைக்கிறேன். சொல் உனக்கு என்ன வேண்டும். நான் வாங்கி வருகிறேன். என்றார்.

தாங்கள் கேட்டதே எனக்கு மகிழ்வு..நண்பா... பணியின் பணப் பலன்ளைப் பெற்று பத்திரமாக ஊர் வந்து மணைவி மக்களை பாருங்கள். பிறகு..தங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றேன்.

ஊறுக்கு வந்தவுடன் எனது மனம் மாறிவிடும் நண்பா.... உனக்கு பிடித்ததை சொல்லப் போகிறாய்யா..... இல்லை எனக்கு பிடித்ததை வாங்கி வந்து விடுவேன் என்றார் நண்பர்.

விருப்பமில்லாதவற்றை வாங்கி பாழாக்கி விடுவார் என்ற பயத்தில் நண்பரிடம் கூறினேன்.

நண்பா.. எனக்கு பிடித்தது கிடைக்கவில்லை என்றால்.. வேறு எதையும் வாங்கி வராமல் இருந்தால்..தங்களின் ஆசையை நிறை வேற எனக்கு என்ன வேண்டும் கூறுகிறேன் சம்மதமா...? என்றபோது..

சரி. சம்மதம். சொல்.  எனறார்.

நான் கேட்பது கிடைக்க வில்லை என்றால்  கண்டிப்பாக வேறு எதையும் வாங்கி வரக்கூடாது சரியா.?.. என்று விட்டு.. தங்கள் நண்பர்க்கு அதாவது நண்பரின் நண்பர்க்கு என்ன வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டேன.

அவன் உன்னைப்போல்தான் முதலில் ஊரு வந்து சேரும் என்றான். வற்புறுத்தி கேட்டபோது.. எனக்கு எதுவும் வேண்டாம்..ஆசைப்பட்டால் கிடைக்காது என்பதால் ஆசையே படாமல் இருக்கும் உனக்கு வாங்கி வருமாறு  கூறினான். சொல் உனக்கு என்ன வேண்டும்  என்று...... என்றார்.

சரி,தாங்கள் பயணம் செய்வது ரயிலிலா... விமானத்திலா...?????என்றேன்

விமானத்தில்தான்...--- எதுக்கு கேட்கிறாய்.... என்றார்

சும்மாதான்... கேட்டேன்..... தாங்கள் வரும்போது  ஒரு விமானம் ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள்... அதில் நாம் மூவரும் அமர்ந்து பறந்து மகிழலாம்... என்றேன்.

என்ன.... விளையாட்டா..... என்றார் நண்பர்.

இல்லை..நண்பா... உண்மையைத்தான் சொல்கிறேன் ..எனக்கு பிடித்தது விமானம்தான்... அதை வாங்கி வாருங்கள்....என்றென்

அடப்பாவி...அத வாங்குவதற்கு..எனது முழப்பணமும் போதாதே..டா...என்றார் நண்பர்.

அதனால்தான்  நண்பா....முதலிலே சொன்னேன் பத்திரமாக ஊரு வந்து சேரும். பிறகு இங்கு வந்த பிறகு பார்த்துக்கிறலாம் ” என்றேன்.

படுவா..ரஸ்கல்.... வந்து வச்சுக்கிறேன்டா என்று விட்டு செல் பேசியை அணைத்துவிட்டார்.

நண்பரின் நண்பர்  உயிரோடு இருந்து கேட்ட ...  அவரின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது...

Image result for நண்பர்
படம்-tamilnanbargal.com


18 comments :

 1. Replies
  1. தங்களின் பாராட்டுக்கு நன்றி!!

   Delete
 2. அருமை நண்பரே!! ஆசைப்பட்டால் கிடைக்காது என்பதால்ஆசையே படாமல் இருப்பது!!! எனக்கு பிடித்த வரிகள் நன்றி!!

  அன்புடன் கரூர்பூபகீதன்!!!

  ReplyDelete
  Replies
  1. பிடித்த வரிகளை தெரிவித்த அருமை நண்பருக்கு நன்றி!!

   Delete
 3. இறுதிவரி மனம் கனக்கச் செய்து போனது

  ReplyDelete
  Replies
  1. இறுதிவரி மனம் கனக்கச் செய்து விடடதா?? மன்னிக்வும்.அய்யா....என் நிலைமை அப்படி..!!!

   Delete
 4. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்லது....நண்பரே...இணைப்பதற்க்கான வழிமுறைகளைச் சொன்னால் என்னை போன்றவர்களுக்கு எளிமையாக இருக்கும்

   Delete
 5. நல்லதொரு சித்து விளையாட்டு நண்பா...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பா.... அப்படி விளையாட வேண்டிய நிலை.....

   Delete
 6. நல்ல மனிதர் காலமாகி விட்டது சோகமான செய்தி (:

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் கடைசி நிகழ்வு சோகமானதாகத்தான் இருக்கிறது நண்பரே......

   Delete
 7. நல்ல நண்பர்கள்!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. நல்ல நண்பர்களுக்கு அடையாளம் அதுதான் நண்பரே....

   Delete
 8. உரையாடல் ரசனையாக இருந்தது ஆனால் இறுதிவரிதான்..வேதனை...

  ReplyDelete
  Replies
  1. வேதனை இல்லாமல் மனித வாழ்க்கை இருக்கிறதா...? அய்யா......

   Delete
 9. அடப்பாவமே.... மனதில் நின்றுவிட்ட நண்பர் என்று சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உயிரோடு இருக்கும் நண்பர்களின் மனதில் நின்றுவிட்ட நண்பர்.

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!