தோழர் கோவன் வழக்கு : போலீசு விசாரணை ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!
தோழர் கோவனை விசாரிப்பதற்காக போலீசு இரண்டுநாள் அனுமதி வாங்கியிருந்தது! அதனை ரத்து செய்வதற்காக விடுமுறை நாளான இன்று நமது வழக்குரைஞர்கள் சிறப்பு மனு ஒன்றை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.
நமது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜரானார். மக்கள் கலை இலக்கிய கழகம் வெளிப்படையாக இயங்கும் அமைப்பு. தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல! அடிப்படை ஆதாரம் இல்லாமல், போலீசு விசாரணைக்கு அனுமதித்தது தவறு என வாதாடினார்.
நமது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜரானார். மக்கள் கலை இலக்கிய கழகம் வெளிப்படையாக இயங்கும் அமைப்பு. தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல! அடிப்படை ஆதாரம் இல்லாமல், போலீசு விசாரணைக்கு அனுமதித்தது தவறு என வாதாடினார்.
விசாரணையின் முடிவில் எழும்பூர் கீழமை நீதிமன்றம் இரண்டு நாள் அனுமதித்ததை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
ஏற்கனவே மனு விசாரணைக்கு வந்த பொழுது, தோழர் கோவனிடம் “உங்களை விசாரிக்க போலீசு அனுமதி கேட்கிறது. போக சம்மதமா? என நீதிமன்றம் கேட்டது. அதற்கு பதிலளித்த தோழர் கோவன் ”நான் ஒரு பாடகர். டாஸ்மாக்கிற்கு எதிராக இரண்டு பாடல்களை பாடியிருக்கிறேன். இது எல்லோரும் அறிந்தது தான். என்மீதான வழக்குகள் அனைத்தும் அடிப்படையில்லாதவை. என்னை கைது செய்த முதல் நாளே என்னை போலீசார் விசாரித்துவிட்டனர். மேற்கொண்டு சொல்வதற்கு என்னிடம் எந்த விவரமும் இல்லை. இப்பொழுது விசாரணைக்கு சென்றால் துன்புறுத்துவார்கள். ஆகையால், போலீசு விசாரணைக்கு அனுப்பக்கூடாது” என்றார்.
மேலும் பார்க்க.... Prpc Milton Jimraj
வழக்கு சரியான திசையில் செல்கிறது என்ற நம்பிக்கையை தருகிறது !
பதிலளிநீக்குநம்பிக்கையாய் இருப்போம் நண்பரே...
நீக்குநீதி மன்றத்தில்
பதிலளிநீக்குநம்பிக்கை வெளிச்சம்!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!நண்பரே....
நீக்குநல்ல தகவல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி! அய்யா...
நீக்குநல்ல செய்தி.
பதிலளிநீக்குஹப்பா இதிலாவது ஒழுங்கா நடக்குதே! சந்தோஷம்தான்...
பதிலளிநீக்குபத்தில் ஒன்றாவது ஒழுங்கா நடப்பதற்கு சந்தோசம் நண்பரே...
நீக்குநீதி கிடைக்கும் என்று நம்புவோம் நண்பரே
பதிலளிநீக்குநம்புவோம்..நண்பரே...........
நீக்கு