பக்கங்கள்

Sunday, June 25, 2017

உங்களால் நம்ப முடியுமா....???

ஆண் மயிலின்
 கண்ணர்துளியை
 விழுங்கித்தான்
பெண் மயில்
கருத்தரிப்பதாக
ஒரு நாட்டின்
உயர்நீதிமன்ற நீதி
பதி சாதிக்கிறார்

அது உன்மைதான்
என்று நீங்கள்
நம்பித்தான்ஆக
வேண்டும் ஏனென்றால்
சொன்னவர் உய....ர்
நீதி மன்ற நீதி
பதி யாச்சே...
நம்பவில்லை என்றால்
உங்கள் மீது
நீதியை அல்ல
நீதிபதியை அவ
மதித்தாக வழக்கு
போடப்படும்....தெரியும்ல..

..

அடுத்து மாட்டு
மூத்திரத்தில் தங்கம்
இருக்கின்றதா என்று
குஜாராத் அரசு
ஆராய்ச்சி நடத்துகிறது

மாட்டு மூத்திரத்திலா
என்று கேள்வி
எல்லாம் கேட்டு
வாய் பொளக்க
கூடாது அப்புறம்
மாட்டைச் சுற்றி
உள்ள ஈக்கள்
உங்கள் வாயில்
புகுந்து விடும்..
வாயில்  புகந்த
ஈயை விரட்ட
மாட்டு மூத்திரம்
குடிக்க வேண்டிய
நிலை வரும்பிறகு  500
1000-ரூபாயை
செல்லாமல் ஆக்கி
விட்டால் நாட்டின்
பொருளாதாரம் புயல்
வேகத்தில் வளரும்
என்று பில்லி சூனியம்
போல பணமதிப்பு
நீக்க நடவடிக்கையை
மக்கள் மீது
ஏவினார் ஒரு
நாட்டின் பிரதமர்
அது தெரியும்தானே

ஆக சங்க்
பரிவாரம் உருவாக்க
இருக்கும் இந்து
ராட்டினம் என்பது
உலக முதலாளித்துவம்
வரையறுத்து இருக்கும்
எல்லைக் கோட்டுக்குள்
நின்றபடி பார்ப்பனியம்
ஆடுகின்ற  கோரத்
தாண்டவம்.....அது

மொத்தத்தில் சங்க்
பரிவாரம் எனப்
படுவோர் முட்டாள்
தனமும் வக்கிரம்
நிறைந்த ஆதிக்க
திமிர் பிடித்த
சினிமா வில்லனைப்
போன்ற விசித்திர
பிராணிகள் என்பதை
நீங்கள் நம்பித்தான்
ஆக வேண்டும்..

இதேபோல் கோமாதா
செண்டி மெண்டை
வைத்து பித்தம்
தலைக்கேறி ஒரு
கல்லில் பல
மாங்காய் அடிக்கும்
ஆசையில் சங்க்
பரிவாரக் கும்பல்
அக்லக்கை கொன்ற
கத்தியை உருவி
பயன்தராத மாட்டை
விற்க கூடாது
என்று இந்து
விவசாயிகளின் வயிற்றில்
குத்தி விட்டதை
உங்களால் நம்பாமல்
இருக்க முடியுமா...???????????


குறிப்பு- அக்லக்---வீட்டில் மாட்டு இறைச்சி வைத்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டு சங்க் பரிவார கும்பலால் கொல்லப்பட்டவர்)

6 comments :

 1. நானெல்லாம் வாயே திறக்க மாட்டேன் நண்பரே....

  ReplyDelete
 2. இவர்களின் பேராசைக்கு இன்னும் எத்தனை பேரை பழி வாங்குவார்களோ :)

  ReplyDelete
 3. தீயசக்தி ஒவ்வொரு காலமும் எழுந்து கொடுங்கொல் ஆட்சி செய்வதை சரித்திரம் முழுவதும் காணலாம். இவர்களுக்கு நன்மை எதுவும் செய்ய தோணாது. எப்படி கேடுவிளைவிக்கலாம் என தீவிரமாய் யோசித்து செயல் படுவார்கள். முடிவில் பேரழிவை சம்பாதிப்பார்கள். ஹிட்லர் ISIS நல்ல உதாரணம்.

  ReplyDelete
 4. //உங்களால் நம்ப முடியுமா....??? //
  என்ன கேள்வி இது? பெண்களும், ஆண்களும் தங்கள் உடல்நலத்திற்காக செய்ய கூடிய உடற்பயிற்சிக்குள் இஸ்லாமிய மத ஆண்களுக்கு ஆண்குறி நறுக்கும், சுன்னத் கொண்டு வந்து மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக அடித்து விடுபவரை எல்லாம், ஒரு பகுத்தறிவாளர்? மதிமாறன் என்று ஏற்று கொள்ளும் ஒரு நாட்டில்,
  ஒரு மாதம் கொலை பட்டினி இருந்து, மயங்கி விழுவதை கடவுளை நெருங்குகிறார் என்று நம்புபவர்கள் உள்ள ஒரு நாட்டில், மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கின்றது என்பதை நம்புபவர்கள், அது போன்றவற்றை நம்புபவர்களும் இருப்பார்கள் என்பதில் வியப்பேதும் கிடையாது.

  ReplyDelete

.........