வியாழன் 14 2017

அந்த நீதிமன்றத்தால்...............

சாராயக்கடைகளை நடத்தும் 
அரசிடம் கேள்வி கேட்க 
முடியாது அந்த நீதிமன்றத்தால்...

லஞ்சத்தை தடுக்க முடியவில்லை 
எனச் சொன்ன  தேர்தல் 
ஆணையத்தை கேள்வி கேட்க
 முடியாது அந்த நீதிமன்றத்தால்..

விவசாயிகள் எல்லாம் வீதியில்
 நிற்பதைக் கண்டும், காணாத 
 அரசிடம் கேள்விகேட்க 
முடியாது அந்த நீதிமன்றத்தால்..

சுப்ரீம் கோர்ட் உத்தரவையே
 மதிக்காத மாநில அரசுகளிடம்
 கேள்வி கேட்க முடியாது
மாநில அந்த நீதிமன்றத்தால்

MLA க்களின் குதிரை 
பேரத்தை தடுக்கமுடியாது 
அந்த உயர்  நீதிமன்றத்தால்...

இப்படியான பல அநியாயங்களை
ஏன்? அந்த நீதிமன்றத்தால்
தடுக்க முயலவில்லை என்றால்
அதற்கு இதுதான் காரணம்

அந்த நீதிமன்ற நீதிபதிகளுக்கு
சம்பளம் மற்றும்வசதி
அதிகாரம் எல்லாம் கொடுப்பது
அந்த அரசு என்பதால்தான்
அந்த நீதி மன்றங்கள்
மக்களுக்கு அநீதி மன்றங்களாகின்றன...









..

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....