https://ta.wikipedia.org/s/2hu7
என் அனுபவத்தில் ஏழடி உயரமுள்ள பெரியவர்கள்- அறிவாளிகள் சொன்னது எதிரிக்கு எதிரி நண்பன்னு..அவர்களின் கூற்றுப்படி
இந்தியாவில கரோனா ஒழியுதோ இல்ல..மனிதர்களை ஒழிக்குதோ.. கரோனாவுவை தொடர்ந்து வெட்டுகிளி துயரம் தொடருமாம். எல்லா உயிருக்கும் ஒரு எதிரி இருக்கிறபோது இந்த வெட்டுக்கிளிக்கும் ஒரு எதிரி இருக்கனுமே என்று தேடிய போது கிடைத்தவர்தான் வெட்டுக்கிளியின் எதிரி இவர் . பெயர் கரிச்சான் குருவி.
எதிரிக்கு எதிரியான நண்பர் கரிச்சான் குருவியின் பிரதான உணவே வெட்டுக்கிளிதான். இவர் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்ணும் வல்லமை கொண்டவர்
இதன் படி ஒருநாளைக்கு இவர் வெட்டுக்கிளிகளை உண்ணுவார் என்று நீங்கள் கணக்கீட்டுக் கொள்ளுங்கள்... வயிறு நிரம்பி விட்டதே இனி எதற்கு ? என்று வெட்டுகிளிகளை விட்டவிடமாட்டார். வெட்டக்கிளிகளை பிடித்து ஒன்றிரண்டாக அரைத்து கக்கி விடுவார்.
இப்படி இவர் கக்கி விடுகிற வெட்டுக்கிளிகள் வயல்வெளி மண்ணுக்கு சிறந்த உரமாகவும் பயன்பட்டுவிடுகிறது. கரிச்சான் குருவி பெயர் கொண்ட இவரை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கலாம்.. இவருக்கு மாட்டுக்காரன். ரெட்டைவால் குருவி, கருங்குருவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
கிராமத்தில் வயல் வெளிகளில்மேய்ச்சலுக்கு ஆடு,மாடுகளை ஓட்டிச் செல்லும்போது ஆடு,மாடு முதுகுனில் அமர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். மின்கம்பங்களிலும் அமர்திருக்கும் அப்படி ஆடு மாடு முதுகினில் அமர்ந்து செல்லும் போது ஆடு மாடுகள் நடந்து செல்லும்போது ஏற்படும் தடங்களில் பறந்து வரும் வெட்டுக்கிளி, வண்ணாத்தி பூச்சி போன்றவற்றை எதையும் தப்பிக்க விடாமல் சர்ரென்று பறந்து சென்று அவைகளை பிடித்துக் கொண்டு அமர்திருந்த இடத்திற்கே வந்தமர்ந்துவிடுவார்..
மனிதர்களை போல் இவர் எதற்கும் பயப்படமாட்டார். பயம் என்பதே இவருக்கு அறவே கிடையாது. இவரது வீர்சத்திற்கு அடையாளமாக தன்னைவிட உருவத்திலும் பலத்திலும் பெரிதான கழுகு, பருந்து, காக்கை போன்ற பறவைகளை துரத்தி துரத்தி விரட்டுவார்.
பலசாலியான அந்தப் பறவைகள் இவிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிபாராமல் ஓடிவிடுவார்கள். துளிகூட பயம் இல்லாத இவருக்கு ராஜா காகம் என்ற சிறப்பு பட்டமும் பறவை வல்லுனர்களால் வழங்கப்பட்டுள்ளது.
சிலபறவைகள் தங்களது இறகுகளில் பேன் போன்ற சிறுசிறு பூச்சிகள் சேருவதை தடுக்க ஒரு உத்தியை கையாளும். அந்த உத்தியானது. .அவைகள் எறும்பு புற்றின் மீது அமரும். அப்படி அமரும்போது.. அவற்றின் மீது எறும்புகள் வெளிவிடும் ஒருவித திரவத்தால்( ஃபார்மிக் அமிலம்) இறக்கையில் உள்ள பேன்கள் இறந்துவிடுகின்றன.
நண்பர் கரிச்சான் குருவியும் தன் இறகில் சேரும் பேன்களை ஒழித்துக் கொள்கிறார்.... கேனப்பய நாட்டுல கிறுக்குபய ஆட்சியில் விவசாயம் அழிந்து வருவதைப்போலவே எதிரிக்கு எதிரியான நண்பர் அதாவது வெட்டுக்கிளிக்கு எதிரியான கரிச்சான் குருவியும் அவருடைய எதிரியான் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறார்.
உணவு சங்கிலியின் ஒரு சங்கிலி அழிக்கப்படுவதின் விளைவுகளை இந்தப் பாழாய் போகும் மனித இனம் உணர்வதாக தெரியவில்லை.. உணர்வூட்டினாலும் உணர்வு பெறுவதில்லை...
கரோனாவால் ஏற்ப்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலையிழப்பாலும் பசியாலும் கூட்டம் கூட்டமாக செல்லுத்துணிந்த புலம் பெயர்ந்த தொழிலாளர் கூட்டம் கரோனாவில் சாவதைவிட தங்கள் உரிமைக்காக போராடி சாவோம் என்ற உணர்வு வரவில்லை.
இனி, கரோனா ...அடுத்து வெட்டுக்கிளி... மட்டுமல்ல..இன்னும் அடுத்தடுத்து வரும் பிரச்சினைகளை சந்திக்க காத்திருக்கிறது... இந்த மதி கெட்ட மனித சமுதாயம்...
கரிச்சான் குருவி மட்டுமல்ல இயற்கைக்கு பாதுகாப்பாக மனித வாழ்வுக்கு பாதுகாப்பாக துணையாக இருக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்து புத்துயிர் ஊட்டும்போதுதான் மனித இனத்தை பேரழிவில் இருந்து காக்க முடியும் என்பதை மனிதிற் கொள்க....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு
தொடருகிறேன்
நன்றி!
நீக்குஉண்மைதான் நாம்தான் பறவை இனங்களை பெரும்பகுதி அழித்து விட்டோமே...
பதிலளிநீக்குசெல்போன் டவர்கள் வைத்து...
செல்போன் டவர்.. நம்ம வைக்கலையே நண்பா..!!
நீக்குசரியாக சொன்னீர்கள்...
பதிலளிநீக்குபறவையினங்களும், விலங்கினங்களும் வாழ்ந்தால்தான் மனிதன் வாழ்வான்
பதிலளிநீக்குஉண்மை...
பதிலளிநீக்கு