பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் சவால் கொண்டவர். சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்து வருபவர். கணையத்தில் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை, மிக மோசமான முதுகுத்தண்டு வலி என பல்வேறு உடல்நல பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருப்பவர்.
இருப்பினும் கூட இவரை எவ்வித வசதிகளும் செய்து தராமல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு கண்டித்த பின்னரும்கூட மோடி அரசு இவ்விஷயத்தில் சிறிதும் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆடைகள் மருந்து பொருட்கள் படிப்பதற்கான புத்தகங்கள் போன்றவற்றையும் கூட சிறை நிர்வாகம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. இந்த அடிப்படை வசதிகளை மீண்டும் தனக்கு வழங்க வேண்டும் என கோரி பேராசிரியர் சாய்பாபா அக்டோபர் 21-ம் தேதி முதல் சிறையில் உண்ணவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
- பாரதி தம்பி
சுதந்திர இந்தியா இதுதான்.
பதிலளிநீக்குஉண்மையான சூ.. தந்திர இந்தியாதான்....
நீக்குஇதற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும்...
பதிலளிநீக்குநிச்சயம் விடிவு காலம் பிறக்கும்....
நீக்கு