திங்கள் 09 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -75.....







 "அதிமுக அரசின் பத்தாண்டு சாதனைகள்"



 தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது. 


 தமிழ்நாட்டு காவல் துறை தலைவர் டிஜிபி அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியது.


 நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி அதிமுக அரசு சாதனை செய்தது.


 எட்டு வழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று பேசியது.


 எட்டு வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடிய போதும், யாருமே இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசியது.


 நீதிமன்றம் உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தை பல ஆண்டுகள் ஏமாற்றியது.


 பொள்ளாச்சியில் நடந்த பாலியல் அக்கிரமங்களை 7 ஆண்டுகளாக வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது.


 தூத்துக்குடியில் தனியார் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது.


 தொழில்துறை சீரழிவு


 நீட் தேர்வு


பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளைஅவமதித்து தமிழ்நாட்டின் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்களுக்கு இடம் கொடுத்தது. 


 முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையில் இருப்பது.


 குட்கா முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை சிபிஐ விசாரணையில் இருப்பது.


 தன் கட்சியின் தலைவி சாவில் இருக்கும் மர்மத்தை விலகாமல் பார்த்துக் கொள்வது.


 துணை வேந்தர் நியமனங்களில் கோடி கோடியாக ஊழல் நடைபெற்றுள்ளது என்று மாநில கவர்னரே கூறியது.


 சுற்றுச்சூழல் துறை பொது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்று சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றது.


 டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்பட்டது.


 அமைச்சர்கள் நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டது.


 அரசு அமைப்புகளில் சாதி, மத போக்கு வெளிப்படும் அளவுக்கு நிர்வாகம் செய்தது.


கஜா புயல் பாதிப்பில் பொறுப்பற்று செயல்பட்டது.


 மதிய உணவு திட்டத்தில் ஊழல் செய்தது.


 கர்நாடகவில் மேகதாது அணை கட்ட ஒப்புதல் தந்த பாஜகவுக்கு பக்கபலமாக இருப்பது.


 உலக முதலீட்டாளர் மாநாடு என்று ட்ராமா போட்டது.


 நியாமான கோரிக்கைகளுக்கு போராடிய ஆசிரியர்களை பழி வாங்கியது.


 செருப்பு முதல் பருப்பு வரை ஊழல் செய்தது.


 முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டது.


⬇️ தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஊழல் செய்தது.


 தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைத்த பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவது.


 பட்டாசு தொழிலை பாதுகாக்க தவறியது.


 தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு துணை போனது. குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வட இந்திய மாநிலங்கள் போல தமிழ்நாட்டை மாற்றியது.


 மத்தியில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சியில் இருந்தும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை கேட்டு பெற துணிவு இல்லாமல் இருப்பது.


 ஆட்சிக்கு வந்தும் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது.

 ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவின் அனைத்து தமிழர் விரோத போக்கு க்கும் துணை நின்றது.


 ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து தமிழர்களின் வேலை வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்த்தது.


 தமிழ்நாடு முழுவதும் ரோடு கான்ட்ராக்ட்டில் உறவினர்கள் மூலம் ஊழல் செய்தது.


 தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.


 தமிழ்நாட்டு சுகாதாரத் துறையை 3 ஆம் இடத்திலிருந்து 9 ஆம் இடத்திற்கு தள்ளியது.


 பதவியை காப்பாற்றிக் கொள்ள பாலத்திற்கெல்லாம் காவி நிறம் அடித்தது.


 பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது என்றது.


 உலகத் தமிழ் மாநாட்டிற்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய மத்திய அரசின் ஒப்புதலுக்காக கை கட்டி நின்றது.


 கோயில் சிலை கடத்தலில் அதிமுக அமைச்சர்களுக்கு சம்பந்தம் உள்ளது என்று சிறப்பு விசாரணை அதிகாரி அறிவித்தது.


 முத்தலாக் மசோதாவை ஆதரித்தது.


 நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது.


 பொது மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலையை பலமுறை உயர்த்தியது.


 பேருந்து கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியது.


 தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஹிந்திக்கு வால் பிடித்தது.


 கோலம் போட்டதற்கு கூட பொது மக்களை கைது செய்தது.


 விலைவாசி உயர்வை ஆண்டவனாலும் கட்டுப்படுத்த முடியாது என்றது.


 தமிழ்நாட்டின் நிதி உரிமையை யெல்லாம் மத்திய அரசிடம் அடமானம் வைத்தது.


 தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டத்தை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது.


 நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்கு கொண்டு சென்றது.


 தமிழ்நாட்டின் கடனை ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உயர்த்தியது.


 திமுக ஆட்சிக்கு பிறகு 9 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாதது.


 தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களின் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றது.


 தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அழிக்க நினைக்கும் பாஜக அரசின் திட்டத்திற்கு துணை போனது.

 மாநிலங்களவையில் ஆதரவாக ஓட்டு போட்டதின் மூலம் சிஏஏ சட்டம் நிறைவேற காரணமாக இருந்தது.


 தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மையை 5.3% உயர்த்தியது.


 அண்ணா பல்கலைக்கழகத்தை சூறையாட மத்திய அரசுக்கு துணை போனது.


 காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க லஞ்ச் பிரேக்வுடன் உண்ணாவிரதம் இருந்தது.


 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோனதை வேடிக்கை பார்த்தது.


 சுகாதார பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் செய்தது.


 இந்தியாவின் மருத்துவ தலைநகரமான சென்னையை கொரோனா வின் கோரப் பிடியில் தள்ளியது.


 அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டு இடங்களை பாஜக அரசால் முறையாக ஒதுக்கப்படாத செயலை கண்டு கொள்லாமல் இருந்தது.


 வருமானத்திற்காக கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறந்தது.


 பள்ளிக்கூடங்களில் மதுபான விற்பனை டோக்கன் கொடுத்தது.


 தூத்துக்குடியில் வேனில் ஏறி நின்று துப்பாக்கி சூடு நடந்தது என்பது கற்பனை என்று சொல்லியது.


 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு வேட்டு வைக்கும் மத்திய அரசின் செயலை வேடிக்கை பார்த்தது.

 நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய சொன்ன நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது.


 கொரோனா தொற்று தடுப்பு பணியிலும் ஊழல் செய்தது.

 ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்து விட்டு விசாரணையே நடக்காமல் பார்த்துக் கொண்டது.


 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியே கேட்காமல் மண்டியிட்டு இருந்தது.


 மாநிலத்தில் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.


 அரசின் கடமைகளை சரிவர செய்ய முடியாமல் கடவுளை காரணம் காட்டியது.


 பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்திய அரசே ரத்து செய்யும் அளவுக்கு ஊழல் செய்தது.


 காவல்துறையால் ஏற்பட்ட மரணத்தை, மூச்சுத்திணறல் மரணம் என்று பொய் பேசியது.


 சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தது - 159 ஆண்டுகால இந்திய காவல் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவமானம்.


 நியாமான கோரிக்கைகளுக்கு போராடிய மருத்துவர்களை மிரட்டியது.


 கொரோனா காலத்தில் கூட மின்சார கட்டணத்தில் மக்களிடம் கொள்ளை அடித்தது.


 கொரோனா பரவல் வேகத்தில் உலகத்திலேயே 2 வது இடம் பிடித்தது.


 நாட்டிலேயே மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னையை மூன்றாவது இடம் பிடிக்க வைத்தது.


 குட்கா புகழ் அதிமுக என்று பெயர் பெற்றது.


 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்களே காரணம் என பேசியது.


 புதிய கல்விக் கொள்கை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க மறுத்தது.


 7 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தை நடத்தாமல் ஏமாற்றியது.


 கொரோனா நோய் தொற்றில் 43 மருத்துவர்கள் மரணத்தை மறுத்து பொய் பேசியது.


 எளிதில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை 14 வது இடத்திற்கு தள்ளியது.

 தமிழ்நாட்டை கடுமையான நிதிச்சுமையில் தள்ளியது.


 நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய பாஜக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற மறுத்தது.


 கல்வித்துறையில் மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பியது.


 கொரோனா மரணங்களை மறைத்தது.


⬇️ விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு ஆதரவாக அதிமுக ஓட்டு போட்டு, அதை சட்டமாக்க பாஜக துணை நின்றது.


 தமிழுக்கு துரோகம் செய்து, சம்ஸ்கிருதத்துக்கு பல்லக்கு தூக்குவதில் சரித்திர சாதனை படைத்தது.


 தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டிலேயே கூறிவிட்டு அவர்களுடனேயே கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு வருவது.


 ரேஷன் பொருட்களில் ரூ.1480 கோடி ஊழல் செய்தது.


⬇️ தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது.


 ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அப்பல்லோவில் இட்லி சாப்பிட்டது.


 அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த முன்னாள் முதல்வருக்கு என்ன ஆனது என்றே மக்களுக்கு தெரியாமல் 72 நாளுக்கு பார்த்துக் கொண்டது.


 மெரினாவில் மக்கள் கூடக் கூடாது என்று 144 தடை விதித்து பீச்சுக்கு லீவு விட்டது.


 ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் அமைதியாக போராடிய இளைஞர்களை தீவிரவாதிகளாக சட்டமன்றத்தில் சித்தரித்தது.


 கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக செல்லாமல் மாமனார் வீட்டு கிடா வெட்டு விருந்துக்கு சென்றது.


 தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வு ஊதியத்தை கேட்டு போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை சிறையில் அடைத்தது.


 தமிழ்நாட்டு மக்களிடத்தில் வெறுப்பு உணர்வை தூண்டிய எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை கைது செய்யாமல் பாதுகாத்தது.


 ஒக்கி மற்றும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தர வேண்டிய நிவாரண நிதியை இதுவரை முழுமையாக கேட்டு பெறாமல் இருப்பது.


 கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெட்கமே இல்லாமல் எம்ஜிஆர் பெயரை சூட்டியது.


 தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் மற்ற மாநிலத்தவரும் சேரலாம் என்று விதிகளை மாற்றி ஆணை பிறப்பித்து தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்தது.


 அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலத்தவரை துணை வேந்தராக நியமித்தது.


 தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு எழுத குஜராத், கேரளா போன்ற அடுத்த மாநிலங்களுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், "கேரளா என்ன அமெரிக்காவிலா இருக்கு?" என்று ஆவணமாக கேள்வி கேட்டது.


 பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு, பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்து வைத்திருப்பது.


.

அதிமுகவும் திமுகவும் ஒன்னு தான் ன்னு ஒரு குரூப் பும்... 


"ஐய்யய்யோ புண்படுத்திட்டாங்க... புண்படுத்திட்டாங்க" ன்னு ஒரு குரூப் பும்... 


தமிழ்நாட்டில் கலவரம் பண்ண வேலை இல்லாமல் வேல் தூக்கிட்டு வருவானுங்க. அவனுங்கள பார்த்தால் கண்ட இடத்திலேயே துரத்தி அடிங்க.


எழுத்தாளர் - Babu K   --------பாஜக - அதிமுக கூட்டுக்களவாணிகள்...


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....