செவ்வாய் 15 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -93.....



 அதானி. அம்பானி..கார்ப்பரேட்டுகளுக்காக

 மோடி... ஆட்சி

 காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டுகிறது

கடலிலிருந்து மீனவர்களை விரட்டுகிறது

பெருநகர்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டுகிறது

டெல்டாவிலிருந்து விவசாயிகளை விரட்டுகிறது

சிறுநகரங்களிலிருந்து சிறுதொழில் சிறுவணிகரை விரட்டுகிறது

மாநிலங்களிலிருந்து மண்ணின் மக்களை விரட்டுகிறது

ஊர்தோறும் சேரிமக்களை ஓடஓட விரட்டுகிறது

காட்டைக் கொளுத்தி! கடலை நஞ்சாக்குகிறது

பூமியின் மறுபுறம் வரை துளையிடுகிறது

வாயு, கரி, எண்ணெய் என எதையும் விட்டு வைப்பதில்லை

அரசுடைமை அனைத்தையும் கார்ப்பரேட் உடைமையாக்குகிறது

பேச்சுரிமை பறி.. எழுத்துரிமையை பறிக்கிறது

வாழ்வுரிமையையும் போராட்ட உரிமையையும் பறிக்கிறது

ஜாதிவெறிக்கு சாம்பிராணி போடுகிறது

மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்துகிறது

நாட்டையே கொள்ளையிடுகிறது அதை வளர்ச்சி என்று சொல்கிறது

காவிகள், கார்ப்பேட்டுகளின் கால்களை நக்கிக்குடிக்கிறது

அதை "தேசபக்தி" என்று சொல்கிறது

எதிர்த்துக் கேட்போரை இல்லாமல் ஆக்குகிறது

தீவிரவாதி, நக்சலைட் என்று பரப்புகிறது

ஊடகம் யாவையும் உண்மைக்கு ஊமையாக்குகிறது 

அவர்களுக்கு மட்டும் ஊது குழலாக்குகிறது

எல்லா அக்கிரமங்களையும் சட்டப்படி செய்கிறது

சட்டம் இல்லையெனில் புதுச்சட்டம் போடுகிறது

அக்கிரமத்தை வளர்க்கிறது

மோடியின் ஃபாசிசக் கொடுமை தாளாமல் ஒப்பாரி

மரண ஓலமிடும் மக்கள் கூக்குரல் உலகுக்குக் 

கேட்காமல் இருக்க ஓவென்ற...

விமானப் பேரிரைச்சலையும் தாண்டி...

இன்னும் அதிகமாய் வெறிப்பிடித்த 

மிருகம்போல்கும்பலாகக் கத்துகிறது  

பாரத் மாதா கீ  ஜெய் ....என்று...!




2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....