பலமுறை அந்த கூட்டத்தில்
அவரை பார்த்திருக்கிறேன்
அவருடன் பேசியதில்லை
வெறும் பார்வையுடன்தான்
அவரிடம் அதுவுமில்லை..
தமிழ்சரத்தில் எந்தவொரு
இணைப்பையும் திறந்தால்
வருமே ஒரு வேளை
ஒரு வேளை என்று
அதுமாதிரி ஒருவேளை
ஊமையாக இருப்பாரோ
என்று எனக்கு
சந்தேகம் இருந்தது.
பல நாளில் ஒரு நாள்
அந்த சந்தேகமும்
தீர்ந்தது....அந்த
சந்தேகத்தை அவரே
தீர்த்து வைத்தார்
ஒருநாள் எனது
கைப்பேசிக்கு அழைப்பு
வந்தது. அழைத்தவர்
தன்னை அறிமுகம்
செய்து கொண்டு
தகவல் அறியும்
உரிமை பற்றி
சந்தேகம் என்னை
நேரில் சந்திக்க
வாய்ப்பு கேட்டார்
கரோனா நோய்
தொற்றால் கூட்டம்
நடக்கவே இல்லை
என்பதால் நானும்
ஒருவித தயக்கத்துடன்
யார்.. எவர்
என்று தெரியாத
நிலையில் சரி
வாருங்கள் சந்திப்போம்
என்று அனுமதியளித்தேன்.
சந்திக்கும் இடத்தில்
என்னைக் கண்டவுடன்
வணக்கம் சொன்னார்.
ஆ. ஆ...எனக்கு
அதிர்ச்சி ஊமை
பேசி விட்டாரே...
காதுகேட்பு கருவியை
காதில் பொருத்தியபடி
அவரே தொடர்ந்தார்
அவருக்கு விளக்கம்
அளித்து அவரை
அனுப்பி வைத்தப்பின்
என் மனம்
சந்தேகம் தீர்ந்ததில்
மகிழ்ச்சியாக இருந்தது.
..........................
பெரியார் நிலையம்
எங்கே உள்ளது
என்று தகவல்
கேட்டால் வரும்
பதிலில் பெரியார்
நிலையமே இல்லை
என்று தகவல்
வந்தால் எப்படி
இருக்கும் அப்படித்தான்..
அவருக்கு வந்தது..
அவரைப் பற்றிய
என் சந்தேகத்தையும்
தெரிவித்து விட்டேன்.
ஆமாம் பெரியார்
பஸ் நிலையம்
எங்கே!! ...............
............................
தமிழ் சரமா...?
பதிலளிநீக்குதமிழ் சரத்தை திறந்து ஒவ்வொரு பதிவிலும் ஒருவேளை..ஒருவேளை -ன்னு வந்தததை சொல்றாரு சார்...
நீக்கு