பலியான வழக்கறிஞர் தம்பதிகள் |
போலீசின் அநியாயத்தை எதிர்த்து கேட்டால் என்ன நடக்கும் என்பதை சாத்தன் குளம் படுகொலை உங்கள் கண்ணில் பயத்தையும் நெஞ்சில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியதைப் போல...தெலுங்கானா மாநிலம் பெட்டப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட மந்தனி என்ற காவல்நிலையத்திலும் நடந்திருக்கிறது.
மந்தனி காவல் நிலையத்திற்கு சீலம் ரங்கையா என்பவரை அழைத்து சென்றவர்கள் . அந்த காவல் நிலையத்தில் வைத்து நான்கு நாட்களாக அடித்து துன்புறுத்தி படு கொலை செய்திருக்கின்றனர். இந்த படுகொலைக்கு சாதகமாக உடற்கூறாய்வு அறிக்கையும் தயாரித்தனர்.
இந்த படுகொலை குறித்து மனித நேயமிக்க வழக்கறிஞர் பி.வி. நாகமணி என்பவர் காவல் நிலைய மரணம் குறித்து மருத்துவர் குழு மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும் என்றும் காவல் நிலைய மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெலுங்கானா உயர் நிதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் காவல்நிலைய மரணம் கு றித்து தெலுங்கானா காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் என்பவரை சீலம் ரங்கையா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி காவல் ஆணையர் அளித்த அறிக்கையை ரகசியமாக வைத்திருந்த அறிக்கையை பார்த்து அதிலிருந்து தேவையான தகவல்களை எடுத்துக் கொள்ள வழக்கறிஞர் பி.வி.நாகமணிக்கு அனுமதி அளித்தது நீதிமனறம்..
இதையறிந்த மந்தனி காவல் துறையினர் எங்கே உண்மை வெளி வந்துவிடுமோ என்று நிலையில் வழக்கறிஞர் பி.வி. நாகமணி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் காட்டுவாமன்ராவ் அவர்களையும் மிரட்டத் தொடங்கினர்.
வழக்கை வபாஸ் வாங்கு.. வாங்காவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இந்த மிரட்டல் குறித்து வழக்கறிஞர் நாகமணி அவர்கள் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் தனக்கும் தனது குழந்தைகள். மற்றும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி முறையிட்டார். ஆனால் நீதிமன்றமோ.. காவல்துறையினர் இவர்களை எந்த வழக்கிற்கும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க கூடாது என்ற அளவில் உத்தரவிட்டதோடுநிறுத்திக் கொண்டதோடு, அவர்களின் பாதுகாப்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்த நிலையில் வழக்கறிஞர் பி.வி நாகமணியும் அவரது கணவர் வழக்கறிஞர் காட்டுவாமன்ராவும் வழக்கிற்க்காக மந்தனி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு ஐதராபாத்திற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மாலை 3 மணி அளவில் ராமகுண்டம் அருகே காரை வழிமறித்த கூலிப்படை கும்பல் வழக்கறிஞர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் நாகமணி நாகமணி காருக்குள்ளே துடிதடித்து இறந்தார். அவரது கணவர் காட்டுவாமன்ராவை நடுரோட்டில் இழுத்து போட்டு அனைவரின் கண்முன்பாக கூலிப்படையினர் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் காட்டுவாமனராவ் தனது படுகொலைக்கு காரணம் குண்டா ஸ்ரீனுதான் என்று கூறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை