நடக்கும் சம்பவங்களும் கிடைக்கும் தகவல்களும் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது.
பாஜக திட்டத்தின்படி...
காட்சி-1
சொத்துகள் முடக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்ட சூழலிலும், தினகரனோடு டெல்லியில் பாஜக தலைவர்கள் பேசிய பின்னணியில் பிப்-7 சென்னை வருகிறார் சசிகலா.
காட்சி-2
அதிமுக கட்சி சார்ந்த நீதிமன்ற வழக்கு விரைவு படுத்தப்படும்.
காட்சி-3
எழுதிக் கொடுக்கப்பட்ட அடிப்படையில் காட்சிகளை நகர்த்துவதற்கும், ஒழுங்கா எங்க சொல்படித்தான் நடக்கணும் என்று ஸ்கிரிப்ட்டை இறுதிப்படுத்துகிறார் பிப்-14 சென்னை வரும் மோடி.
காட்சி-4
சசிகலாவை ஏற்க முடியாது என, திட்டத்தின்படி சொல்லிக் கொண்டே இருப்பார் பழனிசாமி.அவரோடு ஊழல் பெருவெளிச்சத்தில் இருக்கும் மந்திரிகள் உடன் இருப்பார்கள். இது ஏனெனில் ஆட்சிக்கு எதிராக கோப மனநிலையில் உள்ள மக்களுக்கு, இவர்கள் வெளியேற்றப்பட்டு காட்டப்பட வேண்டும் என்பது திட்டம்.
காட்சி-5
அண்ணன்-தம்பிகளுக்குள் சண்டை இருக்கும், மீண்டும் இணைவோம் என்ற ஓபிஎஸ்க்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசனத்தின் படி, ஓபிஎஸ் சார்ந்தோர் சசிகலாவுடன் இணைவார்கள். இதற்கு முக்கிய காரணம் தேவர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு மட்டுமே.
காட்சி-6
இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மூலம் தான் இரட்டை இலை கிடைத்தது. மீண்டும் இருவரும் பிரிகிற சூழல் உருவாகுவதால், இரட்டை இலை முடக்கப்படலாம். இல்லையேல் சசிகலாவுக்கு இரட்டை இலை வழங்கப்படலாம். அதிமுகவை பாஜக விழுங்குவது தான் திட்டத்தின் அடிப்படையாக இருப்பதால் இரட்டை இலையை முடக்கவே முனைவார்கள். ஏற்கனவே குக்கர் பொதுச்சின்னமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
காட்சி-7
காட்சி அமைப்பின்படி கோபப்படுத்தப்பட்ட இபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புண்டு. அதற்கு எம்.ஜி.ஆர்.அதிமுக எனப் பெயர் வைக்கப்படலாம்.
காட்சி-8
சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாலும், தினகரனோ அல்லது ஓபிஎஸ்ஸோ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இதுவரை செய்யப்பட்ட பின்னணி ஏற்பாடுகளை பார்த்தால் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம்.
காட்சி-9
கவுண்டர் சார்ந்தவர்களில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா-ஓபிஎஸ் சார்ந்த அதிமுகவில் இணைக்கப்பட்டு சமன் செய்யப்படுவார்கள். முதல்வர் ஓபிஎஸ்- துணை முதல்வர் செங்கோட்டையன் என்ற திட்டமும் உண்டு.
காட்சி-10
இந்தக் காட்சிகளில் மந்திரிகளுக்கும் வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 8 பேர் இபிஎஸ் பக்கம் நிற்பார்கள். 15 க்கும் மேற்பட்டோர் சசிகலா-ஓபிஎஸ் பக்கம் நிற்பார்கள். ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட இருவர் நேரடியாகப் பிஜேபிக்கு செல்ல வாய்ப்புண்டு.
காட்சி-11
இந்த சண்டைக்காட்சிகளை மக்கள் பார்த்து ரசிப்பதற்காகவும், தயாரிப்புகள் செய்து கொள்ளவும் தான், பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரம் அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும்.
காட்சி-12
திமுகவை வீழ்த்த சசிகலா என்ற சாக்கடையையும் பயன்படுத்த வேண்டும் என்ற முன்னறிவிப்பின் படி, சசிகலா-ஓபிஎஸ் அதிமுகவுடன், பாஜக, அன்புமணி வழக்கால் மிரட்டப்பட்ட பாமக, பணம் கொடுத்தால் போதும் தேமுதிக, பாஜகவின் கொள்கைகளை ஏற்கனவே பரப்பிக் கொண்டிருக்கும் புதிய தமிழகம், 60 இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தின் படி அறிவுசார் அர்ஜூனமூர்த்தி கட்சி, இன்னும் சில உதிரிகளோடு கூட்டணி ஒப்பந்தம் செய்யப்படும்.
இந்தக் கூட்டணி "வழக்கு மிரட்டல் கூட்டணி" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும்.
காட்சி-14
கூட்டணி என்று பெயர் இருந்தாலும் பெரும்பாலான எல்லாக் கட்சி வேட்பாளர்களும், பாஜக சித்தாந்த ஆதரவு மனநிலை கொண்டவர்களே நிறுத்தப்படுவார்கள். ஏன்னா பாஜக உருட்டு அப்புடி.
காட்சி-15
வழக்கு மிரட்டல் கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடையும். ஆனால் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பாஜக வலைக்குள் வந்து சேரும். இதுவே அவர்கள் திட்டம்.
மொத்தத்தில் 2021 தமிழக தேர்தலானது,
வழக்கு மிரட்டல் கூட்டணிக்கும்,
தமிழகம் மீட்போம் கூட்டணிக்கும் இடையே நடக்கும் போராட்டம்.
பாஜகவின் அரசியலை புரிந்து கொண்டால், நடக்கப்போவதை எளிதில் புரியலாம்.
பொறுத்திருந்து பார்க்கலாம்..
இறுதியாக,
ஆட்சியை திமுக பிடிக்கிறது.
அதிமுகவை பாஜக பிடிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை