ஞாயிறு 11 2021

குப்பையில் மீத்தேன்.......!!!!!!

 





ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோ கார்பன்.


இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4. 


இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6. 


இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. இன்று உலகின் 46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது.


அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. 


ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை நாள் ஒன்றுக்கு  இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் லேண்ட்ஃபில் (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.


1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.

சென்னையில மட்டும் ஒரு நாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுகிறது. 


இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகள்ல ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.


1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம் எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.

மத்திய அரசு 44 இடங்களில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கொண்டு வந்து அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. 


ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அது கொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, இயற்கை விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும்....

அமெரிக்காவில் எட்டாண்டு காலம் பொறியாளராக இருந்து விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய திரு.பிரேமானந்த் சேதுராஜன் அவர்கள் கூறியது.


அருமையான விளக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சா நல்லது...


நன்றி !!

4 கருத்துகள்:

  1. இதை அரசியல்வாதி செய்வது இருக்கட்டும். மா'க்கள் எவன் நம்புகிறான் ? கொள்ளையடிச்சு சிறைக்கு சென்று வந்தவளை தியாகத்தலைவி என்கிறான்.

    இது கூமுட்டைகளும், காமுட்டாப்பயல்களும் நிறைந்த நாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூமுட்டைகளும், காமுட்டாப்பயல்களும் நிறைந்த நாட்டைதான் தங்களைப் போன்றவர்கள் எல்லாரும் அணி சேர்ந்து திருத்த வேண்டும் நண்பரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. சிறு துளியாய் உள்ள நல்லவர்கள்தான் முதல் அடி வைத்து தொடங்கி பெரு வெள்ளமாக்க வேண்டும் சித்தரே!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....