இந்த தலைப்பை படித்ததும் அனுபவபட்டவர்களுக்கு உண்மை நிலை தெரியும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்க்காக எனது நாற்பதாண்டு பெரும் அனுபவத்தில் ஒரு சில .......
படித்து பாருங்கள்.
அய்யா..
நான் குடியிருந்து வரும் வீட்டில் என் தாய் தந்தை காலத்திலிருந்து வசித்து வருகிறேன். எனக்கு தற்போது 60 வயதாகிறது. என் தந்தை எனது ஏழாவது வயதில் இறந்துவிட்டார்.. படிக்காத..பயந்த சுபாவம் உள்ள என் தாய்தான் என்னையும் என் சகோதரியையும் வளர்த்து வந்தார். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை விட்டு விரட்ட பல முயற்சிகள் தெருவில் உள்ளவர்களால் பலமுறை மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று. எனது இருபதாம் வயதில் சம்பட்டிபுரத்தை சேர்ந்த அய்யணன் அம்பலம் என்பவர். என் தந்தை பெயரில் உள்ள வீட்டுவரியை முறைகேடாக தன் பெயருக்கு மாற்றிவிட்டு, யாரென்று தெரியாதவர்களின் மூலம் 1966-67-ல் பதியப்பட்ட இரண்டு பத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, நான் குடியிருந்து வரும் வீடும் அதை ஒட்டிய காலி இடமும் ஆறு செண்ட்,, தனக்கு சொந்தம் என்றும் என் தாய் அவருடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாகவும் கடந்த இரண்டு வருடத்திற்கு மேல் வாடகை பணம் கொடுக்காமல் இருப்பதினாலும் வீட்டு கூரை பழுதடைந்து இருப்பதால் அதை நீக்கிவிட்டு கட்டிட வீடு கட்டப்போவதாகவும் அதனால் வீட்டை காலி செய்யவும் பாக்கி பணத்தை பெற்றுதரவும் சொத்தை தன்னிடம் ஒப்படைக்கவும் வேண்டி மதுரை டவுன் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் 317//83 எண்ணாக என் தாய் மீது வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு பத்துவருடங்கள் கழித்து 1990-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து 1991-ல் மேல்முறையீடு செய்தார். RCOP 49//91 எண்ணுள்ள அந்த மேல்முறையீட்டு வழக்கும் சொத்தின் உரிமையாளர் யார்? என்பதை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளுமாறு என்று கூறி 1993-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தள்ளுபடியான தீர்ப்பினைக் கொண்டு,. என் வீடு பனை ஓலையால் வேயப்பட்ட கூரை வீடாக இருந்ததால் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அய்யணன் அம்பலம் என்பவரின் தூண்டுதலால் வழக்கில் ஜெயித்தால் இடத்தை குறைந்த விலைக்கு தருவதாக கூறிய ஆசை வார்த்தைகளால் என் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்து வரும், தெரு தாதாவும் தெரு நாட்டாமையுமான தெருவிலே E.B யில வேலை பார்த்த முதல் அரசு ஊழியனும் , முதன் முதலில் கழிப்பறை கட்டிய பெருமையுடவனும் நண்பனின் மனைவியை கள்ளக்காதலியாக வைத்துள்ளவனுமான குருசாமி மற்றும் அவன் காதலி பெத்தம்மாள் என்பவளும் சேர்ந்து பாதையில்லாத என் வீட்டுக்கு மேற்கு பக்கமாக உள்ள இடத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி என்வீட்டு காலி இடத்தை பாதையாக பயன்படுத்தியதை நான் எதிர்த்த காரணத்தால்.. என்வீட்டிற்கு மூன்று தடவை தீ வைத்தார்கள்.. பிரச்சினை வேண்டாம் என்று சிலர் அறிவுரை கூறியதால் இரண்டு தீ வைப்பு சம்பவத்தில் புகார் தெரிவிக்கவில்லை. மூன்றாம் முறை தீ வைத்த போது நான் புகார் கொடுத்ததின் பலனாக, எனக்கு எதிராகவும் தீ வைத்தவர்களுக்கு சாதகமாகவும் .இரண்டு தரப்பிலும் வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.. அப்போதே அந்த போலீசின் முறைகேட்டை எதிர்த்து கேள்வி கேட்டதால் அடித்து துவைக்கப்பட்டேன்.. உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளடா? என்று சார்பு ஆய்வாளரால் ஏளனமாக சவால் விடப்பட்டேன். அந்த சார்பு ஆய்வாளன் யார் என்றால்? எதோ ஒரு வழக்கில் மு.க. அழகிரியை விசாரிக்க விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஆய்வாளர் முருகேசன்தான்..அந்த வழக்கு பற்றி வேறு பதிவில் தெரிவிக்கிறேன்..
தெருவில் உள்ளோர்களின் கள்ளக்காதல் மற்றும் வேறு சண்டைகள் ஏதாவது நடந்தால், எந்த சம்பந்தமே இல்லாமல் இருக்கும் என்வீட்டுக்கு தீ வைப்பதும் மண்ணால் ஆன சுவரை சேதப்படுத்துவும் நடக்கும் இதையெல்லாம் என் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் ஒரு துறும்பு அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. E.B.காரனின் காசும் செல்வாக்குள்ள பிரமுகரிகளின் (இப்போது சின்னக்கனி மகன் மாரிபிரபு வேலை பார்க்கும் டிவிஎஸ் ஸகூல் சங்கிகள்) சிபாரிசுமே ..அந்த காவல் நிலையத்தின் நடைமுறை என்பதால்.. நான் புகார் செய்தால் இது சிவில் மேட்டர் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டம் என்பதும் குரசாமி, சித்தப்பனின் மனைவியோ, மகனோ என் மீது புகார் செய்தால் சிவில் மேட்டரில் புகுந்து என்மீது நடவடிக்கை எடுப்பதும் என் பகுதி காவல் நிலையத்தின் அன்றிலிருந்து.. இப்போது வரைக்கும் நான் புகார் கொடுக்கும் பழக்கத்தையே அடியோடு கைவிட்டுவிட்டேன்.. மூன்று முறை என் வீட்டுக்கு தீ வைத்த காரணத்தால் கூரை வீட்டை ஓடு வீடாக மாற்ற முயன்றபோது.. அய்யணன் அம்பலம் வந்து தடுத்து சச்சரவில் ,ஈடுபட்டதோடு புகாரில் நீதிமன்றம் செல்லுமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டது. 1996 ம் ஆண்டில் மதுரை டவுன் உரிமையியல் நீதிமன்றத்தில் என்மீதும் என் தாயின் மீதும் 0.S.222/96 எண்ணாக வழக்கு தொடுத்தான். இந்த வழக்கு தொடுப்பதற்கு முன்னமே.. ஓலை கூரையாக உள்ள வீட்டை ஓடு வீடாக மாற்ற பல முறை முயன்று முடியாமல் கடைசிியாக முயன்றபோது தெரு நாட்டாமை குருசாமி என்பவன் .தெரு மக்களின் ஆட்பலத்தால் அராஜமாக என் வீட்டின் நடு மையத்திற்க வந்தமர்ந்து ஒடு போடுவதை தடுத்தான். வேறு பக்கம் அய்யணன் அம்பலம் என்பவன் தன் அடியாட் படைகளுடனும் பகுதி காவல் போலீசுடன் தடுத்தான். பகுதி காவல் நிலையம்தான் எப்போதும் உதவாவது.. நண்பர் ஒருவரின் தந்தையாரால் வழிகாட்டப்பட்டு திடீர்நகரில் உள்ள உதவி ஆணையாளர் அலுவலகத்துக் சென்று மனு கொடுத்து முறையிட்டேன். உடனே, அவர் காவல்நிலையத்துக்கு போன் செய்து விபரத்தை அறிந்து நிலைய சார்பு ஆய்வாளருக்கு குருசாமி, அய்யணன் அம்பலம் இருவரையும் ஸ்டே ஆர்டர் வாங்கி வரச் சொல்லவும் அப்படி வாங்கி வந்தபின்பு..அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு என்னை விசாரித்தார் என்ன வெலை செய்கிறாய் என்று.. நான் சொந்தமாக பிரிண்டிங் தொழில் செய்கிறேன் என்றவுடன் எனக்கும் ஒரு உத்தரவு போட்டார்..இன்றைக்கு வெள்ளி முடிந்தவிட்டது. சனி, ஞாயிறு இரண்டு நாள் உள்ளது. இரண்டு நாட்களுக்குள் வீட்டு வேலையை முடித்தவிடு என்று என்னை அனுப்பி வைத்தார். அவர் பெயர் மாரியப்பன். அவர் இறந்த செய்தி கேட்டு அறிந்தபோது அவரால் பயன் அடைந்தவர்களுள் நானும் ஒருவன் என்பதால்...அவரின் இறப்பில் கூட்டத்தோடு நானும் ஒருவனாக கலந்து கொண்டு என் நன்றியை தெரிவித்தேன்.
O.S 222/96 வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில்.எனக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத என் தந்தை வழி உறவுகள், நான் குடியிருந்து வரும் வீட்டிலும் காலி இடத்திலும் தங்களுக்கும் உரிமை பாத்தியம் இருப்பதாக கூறி என் தந்தையின் உடன் பிறந்தவர்களான சோணை, ஆண்டி, கோபால் மனைவி பெரியக்காள் இளவல் செல்லராமு ஆகியோர் அய்யணன் அம்பலத்தின் வழிகாட்டுதல்படி தங்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாராக சேர்க்க கோரி 2005-ல் வழக்கு எண் ADM. O.S -446/05(Old 222/090)--668/2005 -ல் எண்ணில் வழக்கு தொடர்தனர். அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யபட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுத்து அய்யணன் அம்பலம் தொடுத்த வழக்கில் தங்களையும் சேர்க்க உத்தரவு பெற்றதால் பிராதான வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கு தொடுத்த அய்யணன் அம்பலமும் அவரது மூத்த மகன் இராமகிருஷ்ணன் இறந்துவிட ..நிலுவையில் இருந்துவந்த வழக்கு என் தாயும் 2015ல் இறந்துவிட்டதால். என்சகோதரியை வாரிசாக நடப்பு வழக்கில் சேர்க்ககோரி நான் கொடுத்த மனுவுக்கு அய்யணன் அம்பலம் மகன்களின் தரப்பில் எந்த பதிலுரையும் இல்லாததாலும். வழக்கை தொடர்ந்து நடத்ததாலும் அவ்வழக்கு 2017 ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பினை வைத்து அய்யணன் அம்பலம் பெயரில் இருந்த வீட்டுவரியை என் தந்தை நாகன் பெயருக்கு மாற்ற மனு கொடுத்து பல கட்ட விசாரணை முடிந்து நீண்ட இழுத்தடிப்புக்கு பின் மாற்றி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு என் தாய் மற்றும் என்தந்தை இறப்பு சான்று மற்றும் நீதிமன்றத்ததில் பெறப்பட்ட வாரிசு சான்றிதழ்கள் மூலம் என் பெயருக்கு வீட்டுவரியை மாற்றினேன். வீட்டுவரியை மாற்றிய பிறகு எனது வீட்டிற்கு தண்ணிர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை , இணைப்பு பெற முயன்றபோது... என் வீட்டிற்கு இரண்டு முறை தீவைத்த குருசாமி என்பவர். மாநகராட்சியை பாதையை தனது பாதை என்றும் அந்தப்பாதை வழியாக எனது வீட்டுக்கு பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க கூடாது என்றும் உறுத்து கட்டளை வேண்டியும் . என்மீது மதுரை டவுன் உரிமையியல் நீதிமன்றத்தில் 73/ 2010 எண்ணாக வழக்கு தொடர்ந்தான் அவனுக்கு நெருங்கிய உறவுக்காரன் மாநகராட்சியில் A.O அதிகாரியாக இருந்த பழனிவேல் என்ற கண்னன் மூலம் என்னிடம் பேசபட்டபோது டவுன் சர்வேயால்அய்யணன் அம்பலம் தொடுத்த தள்ளுபடி செய்யபட்ட வழக்கின் இடத்தை டி.எஸ் எண்- 111 பொது நடைபாதையாக மாற்றப்பட்ட இடத்தை நான் விட்டுக் கொடுத்தால்..மாநகராட்சி இடத்தை எனக்கு விட்டு கொடுப்பதாக பேசினான். நான் சம்மதிக்கவில்லை. குருசாமி தொடுத்த வழக்கின் விசாரணையின் போது குருசாமி அஜராகததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் குருசாமி ஆஸ்பத்திரியில் இருந்ததால் வழக்கில் ஆஜராகவில்லை என்று முறையீடு செய்து வழக்கு மீண்டும் 53/2012 எண்ணாக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் வாதி குருசாமி விசாரணைக்கு ஆஜராகததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பினைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் என் மீது இரண்டு வழக்கு தொடுத்தான் குருசாமி. இரண்டு வழக்கும் தள்ளுபடி செய்யபட்டு .. என் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க மாநகராட்சிக்கு 17179/17 உத்தரவிடப்பட்டது. பாதாளசாக்கடை இணைப்புக்கு உத்தரவு பெறப்பட்டும் , குருசாமி மற்றும் அவனது நாலுமகன் கள் நாலு.மருமகள்கள் மற்றும் மகன் மகள் வயிற்று பேரன் பேத்திகள் உறவுக்கார தெரு பொம்பள நாட்டாமை காமாயி மற்றும் சின்னக்கனி மற்றும் என்தந்தையின் உறவுகளள் சேர்ந்த பெரும் கூட்டமே சேர்ந்து பல தடவை முட்டு கட்டை போட்டும் எனக்கு பல்வேறு வகையில் செலவுகள் இழப்புகளுக்குப் பின் நீதிமன்ற அவமதிப்பு தொடுத்தபின்பும், மாநகராட்சி A.O. வாக இருந்தவன் ஓய்வு பெற்றபின் ஒருஆண்டு கழித்து அவசரம் அவசரமாக பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டது.
மஞ்சள் வீடு பெத்தம்மாள்வீடு அதற்கு அடுத்து குருசாமி வீடு பாதையில்லாமல் காலிளாக இருக்கும் என் இடத்தை பாதையாக பயன்படுத்துகிறார்கள்.
என்வீடு |
முக்காடு போட்டு இருப்பது தெரு நாட்டாமை குருசாமி |
என் இடத்தில் பாதாள சாக்கடை அமைத்த குருசாமிக்கு ஆதரவாக
அப்பாவியாக நடிப்பதில் கெட்டிகாரன் |
குருசாமியின் இரண்டாவது மகனின் அராஜகம். |
mmc..A.E மற்றும் நான்
MMC.AE க்கு கொடுத்த மனு
பாதாளசாக்கடை இணைப்பு பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து கழிப்பறை கட்டிய போது.. அய்யணன் அம்பலம் தொடுத்த பிரதான வழக்கில் தங்களையும் பார்ட்டியாக சேர்க்கச் சொல்லி வழக்கு தொடுத்த சோணை என்பவரின் மனைவி சின்னக்கனி அவளது மகன் மாரிபிரபு மற்றும் அவர்களின் உறவுக்காரர்களுடன் சேர்ந்து நான் கழிப்பறை கட்டுவதை தடுத்தார்கள். அய்யணன் அம்பலத்துடன் சேர்ந்து நீங்கள் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகவிட்டது.. மீண்டும் நீங்கள் நான் இருக்கும் இடம் உங்களுக்கு பாத்தியமானது என்று ,என் மீது வழக்கு தொடுத்தால் நான் கழிப்பறை கட்டுவதை நிறுத்தி விடுகிறேன். என்றபோது... நான் திருமணம் முடிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி திட்டினாள். நான் ஏண்டா கோர்ட்டுக்கு போகனும் கோர்ட்டுக்கு போகாமலே் உன்கிட்டருந்து இடத்தை எப்படி கைப்பத்தனும்னு எனக்கு தெரியும்டா பொட்டபயலே,பேடிபயலே,ஒம்போது என்று எழுதுவதற்கு கூசும்படியான வார்த்தைகளில் என்னை திட்டியதோடு நில்லாமல் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று என்னை மிரட்டிய பின் நான் அடிக்க வருவதாகவும் கொல்ல வருவதாகவும் கூப்பாடு போட்டு பொய்யாக கண்டரோல் 100க்கு போன் செய்தாள்.. வந்த கண்டரோல் 100-ன் போலிசார்“. நான் கழிப்பறை கட்டுவதை நிறுத்தச் சொல்லி என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு SI மகேந்திரன் என்பவர் என்னை விசாரித்தார்.. நான் மேற்க்கூறிய வழக்கு விபரங்களை கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்புரையை கொடுத்தேன். அதை படித்து பார்த்துவிட்டு வழக்கு தள்ளுபடிதான் ஆகிவிட்டது. உனக்கு சொந்தம் என்ற கூறவில்லை. என்ற போது. நான்,என் மீதுதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி வீட்டில் நான்தான் குடியிருந்து வருகிறேன். என்மீது புகார் கொடுத்த சின்னக்கனி என்பவர்க்கு எப்படி சொந்தம் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் . சின்னக்கனிக்கு ஆதரவாக வந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் ராமர் மற்றும் மற்றொருவர் சொல்வதை கேட்டு எனக்கு சொத்து எப்படி வந்தது என்று கேட்டபோது . நான் என் தந்தையின் மூலம் என் தாய்க்கும் என் தாயின் மூலமாக எனக்கும் வந்தது என்றேன். என் அப்பாவுக்கு எப்படி சொத்து வந்தது என்று கேட்க. என் அப்பாவை வளர்த்த தாத்தாவின் சொத்து என்றபோது ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டபோது ஆதாரம் இல்லை என்றேன். ஆதாரம் இல்லாமல் உனக்கு எப்படி சொந்தமாகும் . நான் மறுபடியும் சின்னக்கனி என்பவர்க்கு உரிமை உள்ளதற்க்கு என்ன ஆதாரம் என்று அவர்களிடம் கேளுங்கள் என்றதற்கு ..நான் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்ல வேண்டும் நீ. கேள்வி கேட்க கூடாதென்று எச்சரிக்கை செய்யப்பட்டேன் பின் ரியல் எஸ்டேட் பிரமுகன் உடன் வந்தவன் மூவரும் பேசினார்கள். எனக்கு காது கேட்கவில்லை என்பதால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. பின் என்னிடம் எஸ்ஐ வயது என்ன கேட்டார். 60 ஆகிறது என்றேன். அதை நம்பாமல் என் ஓட்டுனர் உரிமத்தை கேட்டனர். எனது ஓட்டுனர் உரிமைத்தை வாங்கி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடம் திருப்பி தந்தனர். ஒரு வாரகாலத்திற்கு கழிப்பறை கட்டுவதை நிறுத்தச் சொல்லி. சின்னக்கனி என்பவர் ஒரு வார காலத்திற்குள் சர்வேக்கு பணத்தை கட்டி அவர் இடத்தை எடுத்துக் கொள்ளும்வரை கழிப்பறை கட்டுவதை நிறுத்த வேண்டும்.. ஒருவார காலத்தில் அவர்கள் சர்வே செய்யவில்லை என்றால் கழிப்பறை கட்டிட வேலையை செய்யலாம் என்றுவிட்டு. நீ ஒரு வார காலத்திற்கு கட்டிட வேலையை செய்யமாட்டேன் என்று எழுதி கொடுக்க உத்தரவிட்டபின்.. நானும் எனது பணக்கஷ்டம் மற்றும் தொழில் நிலையை அறிந்து எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
சார்பு ஆய்வாளர்க்கு எழுதி கொடுத்தது-1சின்னக்கனி செய்த கண்ட்ரோல் 100 புகாரால் வீட்டுக்கு வந்த போலீசை கண்டு பயந்துபோன வேலையாட்கள் பொருட்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு சென்றதை பார்வையிட்டு சிதறி கிடந்த பொருள்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சின்னக்கனி என்பவர் ரியல் எஸ்டேட் பிரமுகர் ராமர் மூலமாக நான் கட்டிட வேலையை தொடங்குவாதாக திரும்பவும் கண்டரோல் 100க்கு போன் செய்தனர். வந்த போலீசார் என் பெயரை குறிப்பிட்டு பயங்கரமான வசவுகளுடன் கட்டிட வேலை பார்க்க மாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு கட்டிட வேலை தொடங்குவதாக சத்தம்போட்டனர். என்னை காவல்நிலையம் இழுத்து கொண்டு சென்றனர். அங்கு என்னைக் கண்டவுடன் .SI மகேந்திரன் சத்தம் போட்டார்.. . கட்டவில்லை.என்று எழுதி கொடுத்துவிட்டு எப்படி கட்டுவேன். சிதறிக்கிடந்த பொருட்களை ஒதுங்கத்தான் வைத்தேன் கட்டவில்லை என்று நான் சொல்வதை கேட்க மறுத்துவிட்டு என்னை சிறை வைத்தார்..அதற்கு இரண்டு தடவை கன்ட்ரோலில் வந்த போலீஸ்.. சின்னக்கனி க்கு ஆதரவாக நான் கழிப்பறை கட்டியதாக சொன்னார்கள், வெளியே சென்ற எஸ்ஐ. இரவு எட்டு மணிக்கு மேல் வந்தவர்.. .என்னை. என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார். . என்னை கைது செய்ததே முறைகேடு என்பதால் நான் பேசி என்ன பயன் என்பதால் பேசவில்லை.
சிறிது நேரத்தில் எனக்காக வக்கீல்கள் திரு நடராஜனும் திரு.சவுரியும் வந்தார்கள் . SIயிடம் பேசினார்கள். என்னிடம் விளக்கம் கேட்டார்கள். பின் SI அவர்களிடம் விபரத்தை விளக்கினார்கள்.. பின் மீண்டும் என்னிடம் கட்டிட வேலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்..SI. வக்கீல்கள் இருவரும் என் நேர்மையை எடுத்துச் சொன்னார்கள். . நாற்பது வருடமாக குடியிருக்கும் வீட்டிற்க்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அவர் சட்டத்தையும் உத்தரவையும் என்றும் மீற மாட்டார் என்று அவர்கள் உத்தரவாதம் தெரிவித்த பின் நான் விடுவிக்கப்பட்டேன்... எனக்கு சார்பாக வந்த வக்கீல்களுக்குரிய தொகையை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு அவர்கள் சொல்படி கழிப்பறை கட்டுவதை நிறுத்தி விட்டு ஒரு வாரமாக காத்திருந்தேன்.
ஒரு வாரம் அல்ல ஒரு மாதம்.கடந்து. எனது வக்கீல் நடராஜ் மூலம் புகார் கொடுத்த சின்னக்கனி என்பவர். இடத்தை அளப்பது பற்றி கேட்டபோது.. சர்வேக்கு பணம் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நான் அதை நம்பாமால் சர்வேக்கு பணம் கட்டிய சாலனை காட்டச் சொன்னேன். நாளை மறுநாள் காட்டுவதாக சொன்னார்கள். மீண்டும் மூன்று நாள் கழித்து வக்கீல் மூலம் SIயை தொடர்பு கொண்டபோது அன்று இரவு காவல் நிலையம் வரச் சொன்னார். அன்று மழை விடாமல் பெய்து விட்டதால் அன்று செல்ல முடியவில்லை..மறுநாள் காலையில் சென்றபோது மாலையில் வரச் சொன்னார். ஏதாவது திசை திருப்பும் வேலை நடைபெறும் என்பதால் ஒரு வக்கீலுடன் கூடுதலாக இரண்டு வக்கீல்களை அழைத்துக் கொண்டு அன்று இரவு சென்றபோது... அய்யணன்அம்பலம் மற்றும் சின்னக்கன்னி வகையறாக்கல் தொடுத்த வழக்கின் இடத்திற்கு வடக்கே உள்ள இடத்தை நகரளவை பதிவேட்டில் முறைகேடாக நான்கு பேர் பதிவாகி உள்ளதால் நான்கு பேரும் சேர்ந்து மனு செய்தால்தான் சர்வே செய்யப்படும் என்று புகார் தொடுத்த சின்னக்கன்னி மற்றும் அவர் மகன் மாரிபிரபு தெரிவித்தனர். SI என்னை பார்த்து பேசியபோது வக்கீல்களிடம் நான் ஏற்கனவே தெரிவித்ததை வக்கீல்களிடம் அவரிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தேன். வக்கீல்களும் தள்ளுபடி செய்யப்பட்ட தீப்பபை படித்துகாட்டி SI யிடம் வாதிட்டனர். பதிலுக்கு சின்னக்கன்னி அழைத்து வந்த இரண்டு வக்கில்களும் எனது வக்கீல்களிடமும் SI யிடமும் வாதிட்டனர் . முடிவு கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டு SI கேட்டபடி எழுதி கொடுக்கப்பட்டது.
படம்-2
....... சார்பு ஆய்வாளர்க்கு எழுதி கொடுத்தது-2
நான் பெற்ற இம்சைகளை பதிவிடுவது தொடரும்..................
விரைவில் பிரச்சினை தீரட்டும்...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு