செவ்வாய் 02 2011

போராடடத்தில் தோழர்கள்.............................

தமிழகத்து கார்பரேட் கல்வி முதலாளிகளின் காவல்தெய்வம்,
சிறிரங்கத்து ரங்கநாயகி, சமச்சீர்கல்வி தெடர்பான எந்த சட்டத்தையும்
நீதியையும்,உத்திரவையும் மதித்து அமுல் படுத்த மறுக்கும்
அடங்காபிடாரி,நாய்தின்ன மறுக்கும் ரேஷன் அரிசியை
இலவசமாக்கியதால் பெயரெடுத்த அன்னபுரணி

சும்மா விளையாட்டுக்கா சொன்னார்கள் வினவு தோழர்கள்
முன்னது பேயாட்சி,பின்னது பிசாசு ஆட்சிஎன்று!

நாற்காலியில் அமர்ந்து முதுகை சாய்ந்து கொள்வதற்கு
முன்னமே பிசாசு தன் ஆட்டத்தை தொடங்கி விட்டது.
பேய்க்கும் பிசாசுக்கும் மக்களை ஏயப்பதிலும் ஏமாற்றுவதிலும்
ஒடுக்குவதிலும் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக பேய்க்கும்
பிசாசுக்கும் பிடிக்காது.ஜென்மப் பகை.

முன்பு  இருண்ட காலத்தில் பிசாசு போட்ட ஆட்டம் பிடிக்காமல்
பேயனாது பிசாசை உலுக்கோன்னு  உலுக்கிவிட்டது. இன்று
நாற்காலியில் பிசாசு அமர்ந்தவுடன் பழைய காட்டுவாசி
ஆட்டம் போடாமல்  டவுன் ஆட்டம் போடுகிறது.

இந்த ஆட்டத்துக்கு பலியாவது படிக்கும் கல்வி மாணவர்களும்
படிக்க வைக்கும்பெற்றோர்களும்தான்.

படிக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைகழிக்கும்
பிசாசு ஆட்சிக்கு எதிராக.புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னனி
மனித உரிமை பாதுகாப்பு மையமும்,பெற்றோர்மாணவர்சங்கமும்
சமச்சீர் கல்வியை அமுல்படுத்து! உச்சநீதிமன்ற உத்திரவின்படி
சமச்சீர் புத்தகத்தை வழங்கு என்று போராடுகிறார்கள்

போராடினால் அமைதிபுங்காவான பிசாசுக்கு பொறுக்காதே!
காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும்
ஏவல் மூலம் போராடும் தோழர்களை அடக்குகிறது.

கல்யாணம் செய்து நாலுனென்ன,ரெண்டு பிள்ளய பெத்து
படிக்க வச்சா,கல்வி வள்ளல்களின் கொள்ளை  தெரியும்
செல்வியா இருக்கும் பிசாசுக்கு எப்படி புரியும். பிசாசு
படித்து வந்ததோ அதி உயர்ந்த கான்வெண்ட் பள்ளி.
நாய்க்கு தெரியுமா? இது நல்ல நாள் பனை என்று!
கழுதைக்கு தெரியுமா? கற்புர வாசனை! உழைக்கும்
மக்களுக்குத்தான சமச்சீர் கல்வியின் அவசியம் தெரியும்

இந்த கல்வியில்கூட சமத்துவம் வந்துவிடக்கூடாது.
என்பதற்குத்தான் செல்வி பிசாசு அடங்க மறுத்து
அத்து மீறுகிறது.

உலக நீதி பேசும் உச்சி (அ)நீதி மனறமோ, சட்டத்துக்கு
முன் அனைவரும் சமம் என்று மக்களிடம் போதனை
சொல்லி , பல்லை கடிக்காமல்,எச்சிலை சத்தமில்லாமல்
விழுங்கி,செம்பை எடுத்து வெளியில் வைக்கிறது.

போராடும் தோழர்களோ!  மக்களை உடனே புரட்சி
செய்ய வாங்க என்று அழைக்கவில்லை.மாணவர்களை
அறிவுள்ள மனிதனாக ஆக்குவதற்கு, கல்வி ஆய்வாளர்கள்
பலர் ஒன்றுகூடி ஆராய்ந்து படைத்த சமச்சீர்கல்வியை
அமுல்படுத்து என்று கோரி போராடுகிறார்கள்.

சமச்சீர்கல்விக்கு உத்திரவிட்ட பேயாட்சியோ! சமச்சீர்
கல்வியை முழுவதுமாக அமுல்படுத்தாமல். அடுத்தும்
நாம்தானே! என்ற மப்பில் இருநததினால் மாணவர்களின்
கல்வி இழு இழு ன்னு இழுத்து செல்கிறது.

பிசாசோ,சட்டத்தின் சந்து பொந்துகளில் சென்று கறாராக
அமுல்படுத்த மறுக்கிறது. சமச்சீர் கல்வியை நான்தான்
கொண்டுவந்தேன் என்று பெருமை பேசும் பேயோ போராடாது.
அது பிசாசின் சாட்டையடிக்கு  தப்பிப்பதுக்குத்தான் போராடும்

குள்ளநரி கூட்டமும் ஓரிரு ஊளையுடன் நின்றுவிடும்.
அடுத்து சொரி நாய்களும் அடுத்த தேர்தலுக்கு ஆதாயமாக
குரைத்துவிட்டு அடங்கிவிடும்

விடாப்பிடியாக போராடுபவர்கள் யாரென்றால் தோழர்கள்தான்
பத்திரிக்கை துாண்கள் எல்லாம் தங்கள் சுதந்திரத்தை போலீஸ்
அறிக்கையைக் கொண்டு வெளியிடும்.;மெத்த படித்த மே தாவிகளோ
அமைதிப்புங்காவை குழப்புவதற்காகவே  போராடுகிறார்கள் என்று
கருத்துரை வழங்குவார்கள்.செயல் வீரர்களோ வேலை வெட்டி
இல்லாததால் இப்படி என்பார்கள். அட மடசாம்பிரானிகளே!!!

நீதி வேண்டும் என்றால் போராடவேண்டும்,சமச்சீர்கல்வி
வேண்டுமென்றால் போராடவேண்டும்..அச்சம்,அறியாமை
அகல வேண்டுமென்றால் போராடவேண்டும்.அநீதிகளை
எதிர்க்க வீரம் வேண்டும். வீரம் வேண்மென்றால் போராட
வேண்டும். போராட்டமே! வாழ்க்கையின் விதி!

அந்த விதியால் சமச்சீர் கல்வி போராட்டத்தில் 
தோழர்களுடன்  குதித்தேன். காலையில் கைது செய்து
மாலையில் விட்டுவிடுவார்கள் என்று நினைத்து அல்ல
அச்சமும்.ஒதுங்கும்போக்கும் அகல......

மாலையில் விடவில்லை. அடைத்தார்கள.சென்ட்ரல்
சிறையில் அதிகாலை மூன்று மணிக்கு. சிறை வாயிலில்
முழக்கம் போட்டதற்க்காக காவல் நாய் ஒன்று முழக்கமிட்ட
தோழரை கடிக்க பாய்ந்தது. கூட்டாக தோழர்கள் பாய்ந்ததால்
பதுங்கி ஓடிவிட்டது.அஞசாத தோழர்களின் முழக்கத்தால்
சிறை அதிர்ந்தது.மூன்று இரவும் நான்கு பகலும் சிறையில்
படிப்பதிலும் விவாதிப்பதிலும். வழக்கறிஞர் தோழர்களால்
பினையில் வந்தபோது  அச்சம் அகன்றது. போராட்ட வீரம்
விளைந்தது. அடுத்த போராட்டத்தில் தோழர்கள்.............................
நர்னும்தான் !



2 கருத்துகள்:

  1. உன் வீடு உன் மக்கள் என்று சுயநலம் போதிக்கும் ஆன்மிகம் தகர்க்கப் படும் வரை வீரம் என்பது வெறும் வாய்ச்சொல்லாகவே இருக்கும்... யாரோ ஒருவர் போராடி எனக்கு நலன் கிடைக்கும் என்று தான் பெரும்பான்மை தமிழன் இறுமாப்பில் திரிந்து கொண்டிருக்கிறான்... புல்லுக்கும் புசியுமாம் என்ற அறிவுரையை மட்டும் கடை பிடிப்பதில் அவனுக்கு நிகர் அவனே ... சமைக்க வாடா என்று கூப்பிட்டால் வர மாட்டான், சமைச்சு வைச்சுட்டேன் வந்து கொட்டிக்கோ என்று கூப்பிடுங்கள், உடனே வந்து நிற்பார்கள்.. உங்கள் கட்டுரையை வாசித்த பின்னும் சிரித்து விட்டு சென்றான் என்றால் அவன் மறத் தமிழன் அல்ல மானங்கெட்ட தமிழன்...

    பதிலளிநீக்கு
  2. மறத்தமிழனில்லைங்க suryajeeva மறதித்தமிழன்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்