பரமக்குடி சம்பவமானது போலீஸின் திட்டமிட்டசெயல்
என்பதற்கு உதாரணம்.டி.அய்.ஜி.சந்தீப் மிட்டல் 10.9.11ல்
இரவு 10மணிக்கு கடையை திறக்கச் சொல்லி கிரிகெட்
கெல்மட் வாங்கியுள்ளார்.டி.அய.ஜி பொருப்பில் உள்ளவர்
முனனெச்சரிக்கையுடன் கலவரத்தை எதிர் பார்த்திருக்கிறார்.
சென்னையில் துனை ஆனையர் பொருப்பில்உள்ள செந்
தில் வேலன் அய்.பி.எஸ. பரமக்குடிக்கு அழைக்கப்பட்டு
இருக்கிறார்.இந்த செந்தில் வேலன் போகுமிடமெல்லாம்
உடனடி துப்பாக்கி சூடுதான்.
இது மாதிரித்தான் திட்டமிட்டு மதுரை சிந்தாமணியிலும்
,இளையான்குடியிலும்ப்பாக்கி சூடு நடந்துள்ளது.
எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் ஏழு பேரை
சுட்டுக்கொன்று 100க்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்ப்
படுத்திய போலீசுக்கு சாதாரண சிறு காயங்கள்தான்.
சந்தீபமிட்டலாம் சும்மா ஒப்புக்கு ஆஸ்பத்தியில் படுத்தவர்
இண்டர்போல் போலீசுக்கு இணையானது தமிழக போலீசு
என்று சொல்பவர்களே அது இந்த சாதுர்யம்தான். இப்படி
தமிழக போலீசு மாதிரிதான் இந்தியாவிலுள்ள எல்லா
போலீசும் தலித்துகள்,பழங்குடியினர்.இனவிடுதலை
போராளிகள் மற்றும் அப்பாவிகளையும் ஒதுங்கிச்
செல்லும் நடுத்தர வர்க்கத்தையும் இப்படித்தான் ஒடுக்
கிறது..நாட்டைகாப்பதாக சொல்லிக்கொண்டு
முதலாளிகளை காக்கும் இராணுவமும் இப்படித்தான்
போலீசும் மாவட்ட நிர்வாகமும் ஆதிக்கசாதியைச்
சேர்ந்த ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து
கிராம பகுதிகளில் உள்ள தலித் சமுக மக்களை
வேட்டையாடுகின்றனர்.
ஏழு பேரை கொன்றதோடு வெறி அடங்காமல் 144 தடை
உத்தரவு போட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை
கைது செய்ய வேண்டும் என்று இலக்கு போட்டு அடுத்த
வருடம் இம்மானுவேல் விழாவுக்கு யாரும் வரவிடக்கூடாது
என்று நீண்ட கணக்கு போட்டு கிராமம் கிராமாக
வீடு வீடாக போலீஸ் அலைகிறது
இதனால் கிராமங்களில் ஆண்கள் யாருமே இல்லை.
போலீஸீன் ரத்தவெறிக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளனர்
ஓட்டுகடசிகளின் தலித்தலைவர்களோ அடக்கி வாசிக்
கின்றனர்.ரெண்டு மூணு சீட்டுக்காக.
தன்னை பாப்பாத்தி என்று அறிமுகம் செய்து கொண்ட“ஜெ”
ஆட்சிகட்டிலில் மூன்றுமுறை அமர்ந்திருந்த காலங்களில்
போலீசின் அடவாடித்தனமும் அத்துமீறலும் கணக்கில்
அடங்காதவை..இந்த பாப்பாத்திக்கு ஆட்சிகட்டிலில்
அமர்வதற்கு பெரும்பாண்மையாக ஓட்டு போட்டவர்கள்
இந்த தலித்மக்கள்தான்.எம்.ஜியார் என்ற பித்தம் பெரும்
பாண்மை தலித் மக்களுக்கு இன்னமும் கலையவில்லை.
தலித் அமைச்சர் இருந்த விமானத்தில் ஏற மறுத்தவர்தான்
சாதி வெறிபிடித்த இந்த ரங்கநாயகி.இவர் ஆட்சிக்கு வரும்
போதெல்லாம் சாதிவெறி ஆதிக்க போலீசும் ஆட்டம் போடும்
இப்படி ஆட்டம் போட்ட,போடும் போலீசை தண்டிக்கவோ,
அடக்கவோ எந்தவொரு கட்சிக்கும் ஆடசிக்கும் நீதீ
மன்றதுக்குக்கூட துப்புமும்இல்லை துரவுமில்லை
மனமுமில்லை தைரியமும் இல்லை.ஒவ்வொரு
தடவை வரும் ஆளும் கட்சியெல்லாம்போலீசுக்கு
சலுகைகள் செய்வதிலும் அதிகாரம் கொடுப்பதிலும்
போட்டிபோட்டு வாரி வழங்கியுள்ளன.
இதனால் இந்த போலீசு, அவர்களே சொல்லக்ககூடிய
சட்டத்துக்கும் ஞாயத்துக்கும் கட்டுப்படாமல் கொழுப்பு
அதிகமாகி திமிறெடுத்து அலைகிறது.
இப்படி போலீசின் அதிகமான கொழுப்பை சூடு வைத்து
அழிப்பவர்கள்உண்டென்றால் அவர்கள்தான் .அரச
பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். உழைக்கும்
மக்களை நேசிக்கக்கூடியவர்கள. தியாக செம்மல்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.இந்திய உழைக்கும்மக்களின்
விடிவெள்ளிகள் நக்சல் பாரிகள்.
அவர்களின்றி ஒரு அனுவும் அசையாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
-
வருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...
-
நிவாரணம் -கருணையினால் அல்ல.. ஒட்டுக்காக படம்- tamil.thehindu.com படம்- www.seithy.com படம்-- www.dinamani.com ...
ஒரு அனுபவ குறிப்பு............
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
தமிழக முதலமைச்சரை கேட்ட வார்த்தையில் திட்டுகிறது, அதை இங்கு பதிவு செய்ய முடியவில்லை என்பதால்.. ***********************************************************************************************************************
பதிலளிநீக்குதிட்டுவதால் பலன் ஏற்ப்படபோவதில்லை
பதிலளிநீக்கு