பக்கங்கள்

Sunday, May 18, 2014

இந்தியாவின் மகாத்மா...............படம்.வினவு.

முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர். இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்விக்கூடத்தை ஏற்ப்படுத்தி கல்வி கொடுத்தவர்.

இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கும் கல்வி கற்பித்தவரும். இந்தியாவில்  முதல் பெண் ஆசிரியருமானவர்  இவருடைய  மனைவியான சாவித்திரிபாய்பூலேதான்..

முதன் முதலாக விதவைகளுக்கும்,கர்ப்பிணிகளுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் காப்பகம் எற்படுத்தி சமூக சீர்திருத்தம் செய்தவர் .புரோகிதர்களின் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி, மூட நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து. பகுத்தறிவை வளர்த்து,மக்களிடம் முற்போக்கு சிந்தனையை தூண்டியவர்.

சாதிஇந்துக்கள் பொதுக் குளத்தில் நீர் எடுக்க தீண்டத்தகாதவர்களை அனுமதிக்காதபோது, தன்வீட்டுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அளித்து சாதி இந்துக்களின் சமூக புயக்கணிப்பக்கு ஆளாவனவர். கடவுளை வணங்க இடைத்தரகர்கள் தேவையில்லை என்று ,புரோகிதர்களின் பொய்,புரட்டுகளிலீ ருந்து மக்களை விடுவிக்க  முயன்றவர்.

1848ல் முதன்முதலாக பெண்களுக்கு கல்விக்கூடத்தை ஏற்ப்படுத்தி பெண்கள் கல்வி கற்கும் உரிமையை நிலை நாட்டியவர். முதன்முதலாக விதவை மறுமணத்தை நடத்தியவர்.

1873- செப்24-ல்சத்திய சோதக் வமாஜ் என்ற இயக்கத்தை எற்படுத்தி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி கூடங்களை ஏற்பப்படுத்துவது.புரோகிதர்களின் பொய்ப் புரட்டகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது. விதவைகளுக்கு மறுமணம் செய்து வைப்பது. புரோகிதர்களை அழைக்காமல் கருமகாரியங்களை செய்து கொள்ள தனிப்பயிற்சிப்பள்ளியை ஏற்ப்படுத்தி வீட்டுக்கு ஒருவர்தன் வீட்டுக்குக் கரும காரியங்களை செய்து கொள்ள பயிற்சி அளிப்பது போன்ற சீர்திருத்த புரட்சிகர செயல் திட்டங்களை நடை முறைப்படுத்தியவர்..

1882இல் முதன்முதலாக ஆங்கில அரசிடம் மாவணர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும் முதன்முதலாக அணைவருக்கும் உயர் கல்வி வழங்க கோரிக்கை வைத்தவர்.

சூத்திரர்களும்.ஆதி சூத்திரர்களும் காந்தியின் காங்கிரஸில் சேரககூடாது என்று அறித்தவர்.பாபாசாகிப் அம்பேத்காரின் தலைவர் இவர்.

 இன்னும் சொல்லபடாத பல  நிகழ்வுகளின்  பெருமைக்குரியவர் ஜோதிராவ் பூலே.... இவர்தான் இந்தியாவின் உண்மையான மகாத்மா.............ஆட்டுப்பாலை குடித்து அரைஆடையுடன் ஆடையில்லா பக்கியுடன் படுத்திருந்தவர் அல்ல.......மகாத்மா......

நன்றி! சமத்துவக் கல்வி திங்கள் இதழ்.

10 comments :

 1. # ஆடையில்லா பக்கியுடன் #
  இதென்ன புது கதையா இருக்கு ?யார் அந்த பக்கி ,அவரைப் பற்றி ஒரு பதிவை போடுங்க !
  த ம 1

  ReplyDelete
 2. உண்மையான மகாத்மாவை நன்றாக அறிமுகப் படுத்தினீர்கள் ..
  # ஆடையில்லா பக்கியுடன் #
  இதென்ன புது கதையா இருக்கு ?யார் அந்த பக்கி ,அவரைப் பற்றி ஒரு பதிவை போடுங்க !
  த ம 1

  ReplyDelete
 3. மிகச் சிறந்த கட்டுரை. நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்.
  இவரை பற்றி பள்ளி பாடப் புத்தகத்தில் இருக்கிறதா?
  படித்ததாக ஞாபகம் இல்லை.

  நன்றி.

  ReplyDelete
 4. திரு.hameedu jaman அவர்களுக்கு.தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 5. திரு. Bagawanjee KA அவர்களுக்கு “ஆடையில்லா பக்கியுடன்” என்பது புதுக்கதையல்ல எற்கனவே பதிவிட்ட பதிவுகள்தான் . அந்தப்பதிவை உங்களுக்காக மீள்பதிவு செய்கிறேன் நன்றி!

  ReplyDelete
 6. திரு. Alien அவர்களுக்கு தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. மராட்டிய நண்பன் ஒருவன் சொல்லி பூலே அவர்களைப் பற்றியும் அவருடைய சிந்தனைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.அறிஞர் அம்பேத்கரின் குரு.

  ReplyDelete
 9. திரு. குட்டிபிசாசு அவர்களுக்கு தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!