டாஸ்மாக்குக்கு அருகே உள்ள தெருவிலிருந்த ஒருவன். ஒரு பெக் மட்டும்
அடித்துவிட்டு,போதை தலைக்கு ஏறியது மாதிரி தள்ளாடி தள்ளாடி ஆக்ஸனுடன் நடந்து வந்தான். தெருவின் முச்சந்தியில் நின்று கொண்டு கத்த ஆரம்பித்தான்.
அவன் கத்தலை.தெருவிலுள்ளவர்கள் கண்டுக்கொள்ளாமல் போவதும் வருவதுமாக தங்கள் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.இது
கொஞ்சுனு அடித்த போதை குடிமகனுக்கு பெரிய அவமானமாக போயிருச்சு.................போவோர்வருவோரை....ங்கோத்தா.....ங்கொம்மா........
அவனே...இவனேன்னு திட்டிக்கொண்டே தன்னுடைய அருமை பெருமைகளை கடை விரித்து கொண்டு இருந்தான்.
அப்போதும் தெருவாசிகள் அவன் கத்தலையும் வசவுகளையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்று கேட்கவுமில்லை. எதற்கு வம்பு தும்புன்னு காது இருந்தும் செவிடர்களாக இருந்தனர்.
இதற்கிடையில் இன்னொரு புல்அடித்த குடிமகன், ஒரு பெக் அடித்த குடிமகன்
போலவே தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து சேர்ந்தான். முதல் குடிமகனும்
இரண்டாவது குடிமகனும் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொண்டு இரு குடிமகன்களும் சேர்ந்து கத்த ஆரம்பித்தனர்.
திடிரென்று இரண்டு குடிமகன்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இரண்டாம குடிமகனுக்கு,முதல்குடிமகன் கத்தியது பிடிக்கவில்லை.
“ ஏணடா.ங்கொக்கா மக்கா, ஒரு பெக்க அடிச்சுகிட்டு இம்புட்டு மப்ப
காட்டுறியே, புல் அடிச்சுயிருக்கிற ஏ...ன் மப்ப பாருடா...ன்னு சொல்லிய
படி.பக்கத்தில் கிடந்த செங்கலை எடுத்து ஒரே போடா... முதல் குடிமகனின்
தலையில் போட்டுட்டான்.நான்தான் மூத்த குடிமகன் என்று அவன் மட்டும் கத்த ஆரம்பித்தான்
அப்போதும் அந்த தெரு வாசிகள் அதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை
சுவையான நடையில் வடிக்கப்பட்ட எதார்த்தமான சிறுகதை.
பதிலளிநீக்குஇனியும் எழுதுங்கள்.
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி !
பதிலளிநீக்கு