பக்கங்கள்

Thursday, March 19, 2015

தொட்டில் பழக்கம் சுடுகாடு ஆக்கும் நாட்டிலும்......


படம்-www.maalaimalar.com

உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்ததாக பீத்திக் கொள்ளும் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜிய நாட்டிலும்,

 உழைப்பால் உயர்நத நாடு.... என்று பீத்தி  கொள்பவர்களால் பெருமையாக பீத்தப்படும் நாடான  சப்பான் நாட்டிலும்.. இந்தியாவின் தொட்டில் பழக்கம் மற்ற நாடுகளை சுடகாடாக ஆக்கும் இந்த நாடுகளிலும் உள்ளது .


கர்ப்பிணிப் பெண்கள் பச்சை நிற மரகத கல்லான எமரால்டை அணிந்து கொண்டால் பிரசவம் எளிமையாக இருக்கும் என்பது பிரிட்டீஷ் பெண்களின் நம்பிக்கையாம்.

நடுப்பகலில் சிலந்திப் பூச்சி வலைபின்னினால் விரைவில் மழைவரும் என்பது சப்பானிய கிராம பகுதி மக்களின் நம்பிக்கையாம்.

கையில் ஒரு லோடு கயிறு கட்டியிருப்பது இந்தியநாட்டு மக்களின் நம்பிக்கை மாதிரிதான் இதுவும் 


12 comments :

 1. கேட்கிறவன் கேனயனாக இருந்தால் எலி ஹெலிகாப்டர் ஓட்டும்னு சொல்வாங்க... நண்பா...

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கேளயனில் ஒருத்தன் எலி ஹெலிகாப்டர் ஒட்டுனத...என் ரெண்டு கண்ணால பாத்தேன்னும் சொல்லுவாங்கே...நண்பரே...

   Delete
 2. கையில் மட்டுமா ஒரு லோடு கயிறு கட்டிஇருக்கான் ,லோடு வண்டியிலும்தான்:)

  ReplyDelete
  Replies
  1. லோடு வண்டியில கட்ட வேண்டியதைத்தான் நண்பரே..கையில கட்டியிருக்கிறார்கள்..

   Delete
 3. சரியாக சொன்னீர்கள்.கையில் ஒரு லோடு கயிறு கட்டியிருப்பவர்களின் அதே மூடநம்பிக்கை தான் அவர்களுடையதும்

  ReplyDelete
  Replies
  1. எங்கும் மூடநம்பிக்கை..எதிலும் மூடநம்பிக்கை..ன்னு ஆகிப்போச்சு திரு. வேகநரி அவர்களே.....

   Delete

 4. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அருந்தகையீர் வணக்கம்!! தங்களின் தகவலுக்கும் ,தகுதி பெறாத எனது பதிவையும்
   சிறப்பு செய்துள்ளமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தங்களுக்கு உரித்தாகுக.........

   Delete
 5. நாம் வலையில் கட்டுண்டு கிடக்கிறோம்...!

  ReplyDelete
  Replies
  1. மறுக்க முடியாத உண்மைகள் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

   Delete
 6. பெண்கள் (திருமணமான பெண்கள்) கர்ப்பக்காலத்தில் வீட்டில் உள்ளே கருங்சிலந்தி மண் கூடுகட்டினால் ஆண் குழந்தைப் பறிக்கும் என்று,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 7. இப்படியும் ஒருநம்பிக்கை...கருத்துரைக்கு நன்றி! திரு.mageswari balachandran அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com