பக்கங்கள்

Friday, September 21, 2012

இப்படியும் சினிமா கொ(டை)ள்ளை வள்ளல்கள்.......


UTV என்ற படக் கம்பெனி சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் தொழில் பண்ணிகிட்டு இருக்கிற நிறுவனம்.இந்நிறுவனத்தின் செயல்அதிபரு தனஞ்செயன் என்பவரு.. இவருடைய தயாரிப்பில் உருவான படம் தாண்டவம். இதில் சீ.......யான் விக்ரமும்.ரஷ்ய நாட்டு கால பைரவனின் உயிரை எமனிடமிருந்து மீட்ட நா(தா)யுள்ளம் கொண்ட அருந்ததி அனுஷ்காவும்( பார்க்க.வினவு காம்) நடிக்க  காப்பி விஜய் இயக்கி இருக்கிறார்.


இந்தப்படத்தில் சீ...யான் பழிவாங்குற பார்வையற்ற மாற்று திறனாழியாக நடித்து இருக்கிறார்..ஈ..யே காதலுக்காக பழிவாங்கம்போது. பார்வையற்றவர்
பழிவாங்குவது பெரிய விசயமில்லை என்றாலும். ஒலியை வைத்து எப்படி
பழிவாங்குறார் என்று கைடெக்கான டெக்னிக்கல்ல எடுத்து இருக்காங்களாம்

இப்படியாக, படத்தில் சீயான் மாற்று திறனாலியாக நடித்து இருப்பதால் பட
அதிபர்.தாண்டவம் படத்தின் முதல்  பிரிமியர் காட்சியில் வசூலாகும் பணத்தை அப்படியே மாற்று திறனாலிகளை நடத்தும் நாப் நிறுவணங்களுக்கு நன்கொடையாக அளிக்க போகிறாராம். இப்படியாக தொடர்ந்து சமூக நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்து இருக்கிறாராம் தனஞ்செயன்.

ஆக,  வள்ளல்கள் நிறைந்து இருக்கிற நாட்டில் இப்படியும் சினிமா கொ(டை)ள்ளை வள்ளல்களும் இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com