செவ்வாய் 23 2012

முடியாது............முடியாது............ அப்போ எதுதான் முடியும்!!!!!!!!.


சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகளை குறித்து அரசே! சாராயம் விற்பதற்கு தடை செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 உச்ச நீதி மன்றமோ,அதே அரசியல் சட்டப்பிரிவு 47யை காட்டி மதுவிலக்கைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. அரசு கொள்(ளை)கைளில் நீதி மன்றம் தலையிடமுடியாது எனவே.அரசு சாராயம் விற்பதை தடை செய்ய முடியாது. என்றது.

இதே போல்,சில்லரை வர்த்தகத்தில் அன்னீய தலையிட்டுக்கு மத்திய அரசு எடுத்துள்ள கொள்(ளை)கை முடிவுக்கு தடைகோரி வழக்குரைஞர் எம்.எல் சர்மா என்பவர்.வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கொள்(ளை) கை முடிவுகளுக்கு நாடாளுமன்றம்,அல்லது ஜனாதிபதியின் ஒப்பதலைப்பெற தேவையில்லை.எனவே, சில்லரை வர்த்தகத்தில் 51 சதவித அன்னீய முதலீட்க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்றது.

இப்படி. முடியாது..........முடியாது..................என்று சொல்லுகின்ற உச்ச நிதிமன்றமானது எதுதான் முடியும் என்பதையாவது நோட்டீஸ் போர்டில்
தேகப்பற்றாளர்களுக்கு தண்டனையும். கொலை.கொள்ளை செய்யும் ஆட்சியாளர்களுக்கு வாய்தாவும்,நம்பி வருபவர்களுக்கு தள்ளுபடியும்
 ஒத்திவைப்பும்தான் முடியும் ஜாக்கிரதை என்று தெளிவாய் சொன்னால் வழக்கு தொடுப்போர்க்கு விவரமாவது புரியுமுல்ல........................


7 கருத்துகள்:

  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி! தனபாலரே!

    பதிலளிநீக்கு
  2. டிராபிக் ராமசாமி பற்றி அதிகம் எழுதூங்கள் சகோ,,, அவர் ரொம்ப காலங்களாகவே தனி மனிதனாக ஒரு நல்ல குடிமகனாக தன் வேலையை செய்துகொண்டிருக்கிறார்..

    பதிலளிநீக்கு
  3. தெரிந்தவரையில் எழுதுகிறேன் சகோ, நன்றி!

    பதிலளிநீக்கு
  4. மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம் எனவும், அது சரியான நீதியினை வழங்கி வருவது போல ஒரு சிலர் செய்யும் பிரச்சாரம் வழுவிழந்து வருவதை தான் இத்தீர்ப்புகள் காட்டுகின்றன்.
    இது போலவே குஜராத் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் காலிகளில் 32 பேரை மட்டும் தண்டிக்க 10 ஆண்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தான் முடிந்தது. அதிலும் மோடி தலைமையிலான அரசே முன்னிற்று நடத்தி உள்ளது என்பதையும் திட்டமிட்ட நீதிமன்றம் புறக்கணித்து விட்டதையும் இங்கே கூற வேண்டும்.

    மொத்தத்தில் இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிரானது என்பது அம்பலமாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரத்தில் தோழர் வலிப்போக்கன் தளத்தை அறிமுகப்படுத்திய உள்ளத்திற்கு நன்றிகள் பல..........

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்திய,கருத்துரைத்த உள்ளங்களுக்கு நன்றிகள் பல...........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....