வல்லரசு இந்தியாவில்
தெருவோரம் ஒன்னுக்கு இருந்தாலும் லஞ்சம் கொடுக்கமால் இருக்கவோ,தப்பிக்கவோ
முடியாது. அதுபோல் லஞ்சம் வாங்காமல் எந்த அரசு அலுவலங்களும் இயங்க முடியாது
அந்தளவுக்கு
தூணிலும்
துரும்பிலும் லஞ்சம் ஒளிந்து இருக்கிறது. இது எனது அனுபவ உண்மை.பெறுக்கெடுத்து ஓடும்
லஞ்ச ஆற்றில் கரையோரம் நின்ற மாவட்ட ஆட்சியர் கரை ஒதுங்கிய லஞ்ச
ஆற்றை சிறிது மணல் எடுத்து அணை கட்டியுள்ளார்.
அதாவது.விசயம்
இதுதான்.மதுரை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு வருவாய் அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கிய
பிரச்சினையில் ஆட்சியரால் தற்க்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து லஞ்ச
ஆற்றில் முழ்கி பாதுகாப்புடன் முத்தெடுத்து வரும் வருவாய்துறையினர் கருப்பு பேட்ஜ்
அணிந்து போர் ஆட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுடைய
போராட்டத்தை ஆட்சியர் கண்டு கொள்ளாத்தினால் மாவட்ட வருவாய்ய்துறை அலுவலர் மற்றும்
லஞ்சம் வாங்குவோர் பாதுகாப்பு சங்கத்தினர் “ லஞ்சம் வாங்கவது எங்கள் பிறப்புரிமை,
அதற்க்காக சஸ்பெண்டை எதிர்ப்பது எங்கள் சங்க உரிமை” என்பதை
வலியுறுத்தி ஒட்டு மொத்த விடுப்பில் செல்லும் போராட்டத்தை நடத்துகின்றனர்.
சம்பளத்துடன் விடுப்பா?
சம்பளமில்லா விடுப்பா? என்பது போராட்டத்தின் பின்புதான் தெரியவரும். அதுவரை லஞ்சம்
வாங்குவோர் பாதுகாப்பு சங்கம் காத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை