ஞாயிறு 24 2013

இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை.....



புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ அல்லது மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக,உறுதியான பேராட்டம்,துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது.

முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்களை உதறித்தள்ளுங்கள். இப்போது செயல்பாட்டை துவங்குங்கள்.
எந்த துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்து விடக்கூடாது.எந்த துரோகமும் தோல்வியும் உங்களை மனம் தளரச் செய்யக் கூடாது. உங்கள்மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்றுவிடக்கூடாது.

தாய்நாட்டின் மீதான என் நேசம் மரணத்திற்குப் பிறகும் என் நினைவில் நிலைக்கட்டும். இறந்த என் உடலிரந்து வீசும் என் தாய்நாட்டின் நறுமனம் நாளைய இளைஞர்களுக்கு கிளர்ச்சியூட்டும்.

இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை. எங்கள் வாழ்நாளோடு மட்டும் முடியப்போவதுமில்லை என்றார் பகத்சிங்.

காலனியாதிக்கம் மடியவில்லை.
இன்று மறுகாலனியாதிக்கம்.
துப்பாக்கி கரங்களுக்கு எதிராக
வேல் கம்புகளையும்
தூக்கு மரத்திற்கு எதிராக
நெஞ்சுரத்தையும் செலுத்திய
அந்த வீரர்களுக்கு
நாம் என்ன காணிக்கையை
செலுத்தப்போகிறோம்.
மறுகாலனியாதிக்கத்தை
எதிர்த்து போராடுவதைத் தவிர....

 நன்றி.....ம.க.இ.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...