பக்கங்கள்

Monday, March 25, 2013

தியாக வேடமணிந்த துரோகத்தின் உண்மை முகம்!!!
 
1921,1930,1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளி காலங்களில் ஒத்துழையாமை இயக்கம்,சட்டமறுப்பு இயக்கம்,வெள்ளையனே வெளியேறு இயக்கம் என மூன்று இயக்கங்கள் காந்தியின் சத்தியாகிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன.

பேராட்டத்தின் வளர்ச்சிப்போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்கத் துவங்கினால்........அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால்...........

தியாக வேடமணிந்த காந்தி உடனே பேராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன் பிரிட்டீஷ் அரசு காந்தியை கைது செய்துவிடும்.

பிறகு “ செண்டிமென்டஅலை அடிக்கத் துவங்கிவிடும்., இறுதியில் இந்திய விடுதலையை மறந்து. கபட வேடதாரி காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகிவிடும்.

இப்படித்தான். ஒவ்வொரு  விடுதலை பேராட்டத்திலும் துரோகத்தின் உண்மை முகம் மறைக்கப்பட்டு தியாக வேடம் அணிவிக்கப்பட்டது.

நன்றி...புதிய கலாச்சாரம்  நவம்பர்2006.இதழ்


1 comment :

  1. அடப்பாவிகளா...

    இப்படி ஒரு புரிதலா...?

    புதிய கலாச்சாரம் இதழுக்கு கண்டனங்கள்...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com