பக்கங்கள்

Sunday, March 03, 2013

ஆணாதிக்கம் நிறைந்த கஞ்சபிரபு திருவள்ளுவர்.!!!!ஒலகப் பொது மறையாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் இவருடைய மனைவிபெயர் வாசுகி.

திருவள்ளுவர் உணவருந்தும்போது ஒரு சொம்பு நிறைய நீரும்  சொம்புக்கு அருகில் ஒரு குண்டுசீயும் வைத்துவிடவேண்டும். அதன்படி  உணவருந்தும்போது கூடவே இவைகளை வைத்துவிடுவார்..வாசுகி.

உணவருந்தும்போது தண்ணீர் தேவை சரி, கூடவே ஒரு குண்டூசியும் வைக்கச் சொல்லுகிறாரே?..... குண்டூசி எதற்கு? என்று வாசுகி மண்டையை போட்டு குழப்பிக் கொள்வார்.. அதைப்பற்றி வள்ளுவரிடம் கேட்பதற்கு  வாசுகிக்கு பயம்.

திருவள்ளுவரின் ஆணாதிக்க அச்சத்தின் காரணமாக குண்டூசி சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை. வாசகி  மனதில் புழங்கிய வண்ணம் நீடித்து வந்தது.

அம்புட்டு பாட்டு எழுதின திருவள்ளவரும் குண்டூசியைப்பற்றி தன் மனைவியான வாசுகியிடம் ஒப்புக்குக்கூட சொல்லவில்லை,“ பொட்டச்சிக்கு தெரிந்து என்ன ஆகப்போகுதுன்னுஅவரும் சொல்லவில்லை.

கடைசி காலத்தில் திருவள்ளுவர் சாகும் தருவாயில் இருந்தபோது. வாசுகி அம்மையார் தன் கணவரின் மேல் பயம் நீங்கியவராக, வள்ளுவர்க்கு அருகில் அமர்ந்து...

என்னவரே, எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம்.அந்த சந்தேகத்தை இப்பாவது தீர்த்து விடுங்கள் என்றார். நீங்கள் உணவருந்தும்போது குண்டூசியை வைக்கச் சொல்லியிருந்தீர்களே! நானும் தங்கள் கோபத்துக்கு ஆளாகமல் பணிவிடை செய்து வந்தேன். உணவருந்தும்போது குண்டூசி எதற்கு என்று கேட்டார் வாசுகி.

பேசுவதற்குகூட தெம்பில்லாமல் படுத்துக்கிடந்த வள்ளுவர்,“ ஓ....அதுவா,.........நான் உணவருந்தும்போது சிதறும் பருக்கைளை குண்டூசியால் குத்தி சொம்பு நிறைய உள்ள நீரில் கழுவி தட்டில்போட்டு திரும்பவும் உணவருந்துவதற்குத்தான் என்றார்.

வாசுகியோ,வள்ளுவர் கூறிய பதிலைக்கேட்டு பிரமையடித்ததுபோல் ஆனார். பிறகு. நிதானத்துக்கு வந்து.“ அட கஞ்ச பிரபுவே, ஓங் கஞ்ச தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நீ எழுதின  ஒன்றயடி பாட்டுலயேயும் . கஞ்சதனத்த காட்டிட்டிங்கிளே என்னவரே—என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.


6 comments :

 1. வள்ளுவரைப் பற்றி ஆயிரம் உறுதிப்படுத்தப்படாத கதைகள் தமிழ் வழக்கில் உலாவுகின்றன. அவையெல்லாம் உண்மையென்றாகி விடாது. பல்வேறு காலத்தில் வாழ்ந்த வள்ளுவர், அவ்வை, கம்பன் போன்றோரெல்லாம் உடன்பிறந்தவர் என்று கூட ஒரு வாய்மொழிக் கதை உளது. பிற்காலத்தில் கற்பனை நிறைந்த ஆனால் வரலாற்றறிவு அற்ற சிலர் இட்டுக் கட்டிய கதைகள் இவை. வள்ளுவர் மழித்தலைப் பற்றிப் பேசுவதால் யூதம், தோமா கிறித்தவம் சார்ந்தவர் என கதைபேசுவோரும் உளர். கி.பி. எழுந்த இட்டுக்கதைகளெல்லாம் பலரின் குறிப்பாக அன்றைக்கு சமுகத்தில் மேல்நிலையிலிருந்த கூட்டத்தாரின் அதீத கற்பனைகள். அதன்மூலம் தங்கள் கொள்கைகளை சமுகத்தில் பரப்பிட முயலும் ஒரு உத்தி இது.

  ReplyDelete
 2. மகாத்மா., வள்ளுவரை அடுத்து தாங்கள் காறித் துப்பவிருக்கும் நபரைக் குறித்து..மிகவும் ஆவலுடன்...காத்திருக்கும் அன்பன் !

  ReplyDelete
 3. பெயரில்லா சொன்னதுக்கு-உண்மைதான் உறுதி படத்தப்படாத கதைகளை காது,மூக்கு வைத்து சொல்லுவதும் அதை உண்மை என்று நம்பவதும் அன்றிலிருந்து இன்று வரை வழிவழியாக வருகின்றது.வில்லன் இராமனை ஒப்பற்றவனாக காட்டுவது அவனுக்கு கோயில் கட்ட துடிப்பதுபோல்தான்..

  ReplyDelete
 4. ரமேஷ் வேங்கடபதி சொன்னதுக்கு-- மகா ஆத்துமா,வள்ளுவரை பற்றி ஏற்றி போற்றும்போது எனக்கு வரும் இறுமல்,புறையை தாங்கள் காறித்துப்புவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

  ReplyDelete
 5. எனக்கு ஒரு சந்தேகம், உங்களுக்கு வள்ளுவர் மேல அப்படி என்னங்க கோவம்..!!?

  ஆரம்பம் முதலே ஒரு விதமான நக்கலாவே எழுதியிருக்கீங்க..!!

  அவர் ஆணாதிக்க குணம் கொண்டவராக இருந்திருக்கலாம்..!!

  ஆனால், இங்க நீங்க அவரோட ஆணாதிக்க குணத்தை விமர்சிப்பதைபோல தெரியவில்லை..

  திருக்குறள் என்னமோ ஒன்னுத்துக்கும் புண்ணியமில்லாத நூல்னு சொல்லுவது போல இருக்கு உங்களின் முதல் வரி..!!

  உலகில் அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்களில் 3 வது இடத்தில் திருக்குறள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

  ஏறக்குறைய உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நூலை இயற்றியவரை கொஞ்சம் மதித்து அவருடைய குணத்தை சரியான அனுகுமுறையில் விமர்சித்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்..!!

  கிட்டதட்ட திருக்குறளை மதிக்கும் அனைவரையும் அவமானபடுத்துகிற மாதிரியே இருக்கு..!!

  எனக்கு கொஞ்சம்கூட இந்த பதிவு பிடிக்கவில்லை..

  ReplyDelete
 6. சேச்சே.. எனக்கு வள்ளுவரு மேல கோபமே இல்லீங்க, என்பதிவ படித்தா அவருக்குத்தான் என்மேல கோபம்
  வருமுங்க...... நான் யாரையும் அவமானப்படுத்தலீங்க,என் நண்பரு ஒருவரு.. திருவள்ளுவரு பொதுவுடமை வாதின்னு சொன்னாருங்க...........நான் சொல்லுறத காதுலே கேட்கவேயில்லீங்க.. விட்டா....இராமதாசக்கூட பொதுவுடமைவாதின்னு சொல்லீருவாருங்க.......அவருக்குதாங்க இந்த பதிவு.......எனக்குந்தான் நாட்டுல நடப்பது எதுவுமே பிடிக்கலைங்க.........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com